CPIML கட்சியின் பஞ்சாப்பின் மூத்த தலைவர் தோழர் கிரிபால்வீர் சிங் மறைந்தார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி -(மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை CPIML கட்சியின் பஞ்சாப்பின் மூத்த தலைவர் தோழர் கிரிபால்வீர் சிங் மறைந்தார்!

செப்டம்பர் 07, 2022 இகக(மாலெ) பொதுச் செயலாளர் திபங்கரும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் சந்திப்பு

7.9.2022 இன்று டெல்லியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மத்திய அலுவலகத்தில் இகக(மாலெ) பொதுச் செயலாளர் திபங்கரும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் சந்தித்துக் கொண்டனர்.பாஜக வின் புல்டோசர் ராஜ்ஜியத்தை தடுத்து நிறுத்திட செயலூக்கமுள்ள பரந்த எதிர்க்கட்சி ஒற்றுமையைக் கட்டமைக்க வேண்டியதன் அவசரத் தேவை பற்றி அவர்கள் விவாதித்தார்கள். பீகாரின் பற்றி எரியும் பிரச்சனைகளும் விவாதத்தில் இடம் பெற்றன. ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஒன்றுபட்ட முயற்சியின் அவசர தேவை பற்றியும் இகக (மாலெ) பொதுச்செயலாளர் எழுப்பினார்.

CPIML தோழர்கள் சந்திரகுமார்- சந்திரசேகர் நினைவு நாள்

செப்டம்பர் 2, 2022 தஞ்சாவூர்- மணலூரில் வர்க்கப்போராட்டத்தில் உயிர்நீத்த CPIML தோழர்கள் சந்திரகுமார்- சந்திரசேகர் நினைவு நாள் 38-வது ஆண்டு நினைவேந்தல் கூட்டம் மணலூரில் நடைபெற்றது.

நீங்கள் உயிர் தியாகம் செய்த இலட்சியங்களுக்கான பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்!

ஆகஸ்ட் 31,2022 புதுக்கோட்டை மாவட்டத்தில் சங்கம் விடுதி கிராமத்தில் மயானம் கேட்டு போராட்டம் நடத்தியதற்கு CPIML கட்சியின் வெற்றி!

ஆகஸ்ட் 31,2022 புதுக்கோட்டை மாவட்டத்தில் சங்கம் விடுதி கிராமத்தில் மயானம் கேட்டு போராட்டம் நடத்தியதற்கு CPIML கட்சியின் வெற்றி!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம்,

ஆகஸ்ட் 28, 2022 சேலம் அயோத்தியாப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் தூய்மை பணியாளர்கள் சங்கம் ஆலோசனை கூட்டம்

28.08.22 ஞாயிறு சேலம் அயோத்தியாப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் தூய்மை பணியாளர்கள் சங்கம் ஆலோசனை கூட்டம் குப்பனூரில் நடைப்பெற்றது.

தோழர் மோகனசுந்தரம் மாவட்ட செயலாளர் இகக(மா-லெ) சிறப்புரை ஆற்றினார்.

தோழர் V.அய்யந்துரை மாவட்ட செயலாளர் AIKM தோழர் அ.வேல்முருகன் துணைச்செயலாளர. AICCTU .தோழர் V.சுரேஷ் தோழர் பி .ராவணன் தோழர் சண்முகசுந்தரம் தோழர் அறிவழகன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

குப்பனூர் தைலனுர் கூட்டாத்துப்பட்டி அயோத்தியாபட்டணம் ஆச்சகுட்டப்பட்டி ஊராட்சிகளில் இருந்து தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்

கோரிக்கை முடிவுகள்:-

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை, 2022 ஜூலை 24 அன்று நடத்திய காவிப் பாசிச எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தமிழ்நாட்டிலும் காவிப் பாசிச கூக்குரல் கள் அதிகரித்து வரும் வேளையில், இதக (மாலெ) அழைப்பை ஏற்று தங்களின் அரிய நேரத்தை ஒதுக்கி இந்த காவிப் பாசிச எதிர்ப்பு மாநாட்டில் பங்கெடுத்துக் கொண்டு மாநாட்டை வெற்றிபெறச் செய்த சிபிஐ, சிபிஎம் கட்சிகள், விசிக, பச்சை தமிழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைவர்களுக்கு நன்றி யையும் மாநிலம் முழுவதிலுமிருந்து பெருந்திர ளாய் கலந்து கொண்டுள்ள செயல்வீரர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகளையும் மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

பெரியார் திராவிட கழகத்தின் தோழர் விடுதலை அரசு ஆற்றிய உரையிலிருந்து.

பொதுவாக பாசிசம் என்பதற்கு பதிலாக காவி பாசிசம் என்று அடைமொழி கொடுத்து இந்த மாநாடு நடத்தப்படுவது சிறப்பானதாகும். நான் இங்கு பெரியார் என்ற அடையாளத்தோடு வந்திருக்கிறேன். நம்மிடைய பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால், மோடி நம்மையெல்லாம் ஒன்றிணைத்திருக்கிறார். தமிழகத்தின் சாமானிய மக்களுக்கு பாஜகவை தோற்கடிக்க முடியும் என்ற மறு உறுதியை கொடுக்கக்கூடிய வரலாற்று கடமை நம் போன்ற இயக்கங்களுக்கு இருக்கிறது.