தமிழ்நாட்டிலும் காவிப் பாசிச கூக்குரல் கள் அதிகரித்து வரும் வேளையில், இதக (மாலெ) அழைப்பை ஏற்று தங்களின் அரிய நேரத்தை ஒதுக்கி இந்த காவிப் பாசிச எதிர்ப்பு மாநாட்டில் பங்கெடுத்துக் கொண்டு மாநாட்டை வெற்றிபெறச் செய்த சிபிஐ, சிபிஎம் கட்சிகள், விசிக, பச்சை தமிழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைவர்களுக்கு நன்றி யையும் மாநிலம் முழுவதிலுமிருந்து பெருந்திர ளாய் கலந்து கொண்டுள்ள செயல்வீரர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகளையும் மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

மோடி அரசாங்கத்தை ஆட்சியை விட்டு வெளியேற்ற வேண்டிய தேசிய அரசியல் கடமையில் தமிழ்நாட்டு மக்களும் மக்கள் இயக்கங்களும் ஒன்றுபட்டு பணியாற்றுவோம்! எட்டு ஆண்டுகால கார்ப்பரேட் காவிப் பாசிச மோடி ஆட்சி, இந்திய அரசமைப்பு சட்டத் துக்கும் அதன் அறநெறிகளான சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி போன்றவற்றுக்கும் இந்தியாவின் பல வண்ண, இன, மொழி, பண் பாட்டு வேற்றுமைகளின் ஊடே அடையப் பட்ட இந்திய ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட் டுக்கும் கடும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த வளங்களையும் அதானி, அம்பானி போன்ற பெரும்தொழில் குழும அதிபர்கள் கைகளில் ஒப்படைத்து, ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் சீரழித்து ரூபாயின் மதிப்பை என்றுமில்லாத அளவுக்கு கீழேசரியும் மீளமுடியாத நிலைக்கு தள்ளி விட்டது மோடி ஆட்சி! கண்மூடித் தனமான தனியார் மயமாக்கம் தேசவளத்தை சூறையாடுவதோடு மட்டுமின்றி நாட்டு மக்களின் வாழ்வை நாசமாக்கி வருகிறது. வேலை இல்லா திண்டாட்டம் என்றுமில்லாத உச்சத்தை தொட்டுவிட்ட நிலையில் ஒன்றிய அரசில் மட்டுமே 9 லட்சத்துக் கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களைக்கூட நிரப்ப மறுக் கிறது. தேசப்பாதுகாப்பையும் வேலைப் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கும்

அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக லட்சோப லட்ச இளைஞர்களின் வீறுகொண்ட போராட்டத் துக்குப் பிறகும் சர்வாதிகாரமாக அந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இசுலாமியர் மற்றும் தலித்துகள் மீதான கும்பல் படுகொலைகள், அவர்களின் குடிசை கள், குடியிருப்புகள், வழிபாட்டு தலங்களை புல்டோசர் கொண்டு அழிப்பது, குடிமக்கள் சட்டதிருத்தங்கள் மூலமாக இலட்சக்கணக்கான இசுலாமியர்களை நாடற்றவர்களாக ஆக்குவது என மோடி அரசாங்கம் ஒரு பாசிச ஆட்சியையே நடத்தி வருகிறது.

கல்வி, மருத்துவம், விவசாயம், வரிவிதிப்பு (ஜிஎஸ்டி) மூலமாக மாநில நிதி ஆதாரங்களை அபகரித்துக் கொண்டதோடு மாநில உரிமை களையும் அபகரித்துக் கொண்டு மாநில ஆட்சிகளை செல்லாக் காசாக மாற்றி; கூட்டாட்சி முறையை சிதைத்து, மாநிலங் களின் உரிமைகளை பறித்து ஒற்றையாட்சி முறையை திணிக்கிறது.

ஒட்டுமொத்தத்தில், ஒன்றிய ஆட்சி அதிகாரத் தைப் பயன்படுத்திக் கொண்டு ஆர்எஸ்எஸ் பாஜகவின் இந்துமதத்தை ராணுவமய மாக்குவது, ராணுவத்தை இந்துமய மாக்குவது எனும் இந்து ராஷ்ட்ரா திட்டத்தை முறியடிக்க வேண்டியது நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொரு இந்தியரது கடமையாகும். எனவே, மோடி அரசாங்கத்தை 2024 பொதுத் தேர்தலில் ஆட்சியிலிருந்து வெளியேற்றுவது தமிழ்நாட்டு மக்களின் கடமை ஆகிறது. "மோடி அரசாங் கத்தை ஆட்சியை விட்டு வெளியேற்றுவோம்!" என்ற முழக்கம் வலுவான மக்கள் இயக்கமாக மாறிட, நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டுமென, காவிப் பாசிச எதிர்ப்பு மாநாடு அழைப்பு விடுக்கிறது.

தமிழ்நாட்டின், சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, முற்போக்கு மரபுக்கு எதிரான பாஜக மற்றும் சங்கப் பரிவாரங்களின் மூர்க்கத்தனமான முயற்சிகளை முறியடிக்க, கல்வி, வேலைவாய்ப்பு, நிலம், சமூகநீதி, சமத்துவம், கூட்டாட்சிக்கான போராட்டங்களை முன்னெ டுக்க பகத்சிங்கின் நாட்டுப்பற்றை, அம்பேத் கரின் சாதி ஒழிப்பை, பெரியாரின் இந்துத்துவா எதிர்ப்பு, பெண்ணடிமை ஒழிப்பை ஆயுதமாகக் கொண்டு மார்க்சியர்கள், அம்பேத்கரியர்கள், பெரியார் உணர்வாளர்கள் ஒன்றுபட்டு செயல்படவும் பாசிச எதிர்ப்பு போரில் அனைத்து தரப்பு மக்களையும் அணிதிரட்ட மாநாடு அழைப்பு விடுக்கிறது.


கண்மூடித்தனமான தனியார்மய மாக்கத்தை முன்னெடுக்கும் கார்ப்பரேட் ஆதரவு மோடி ஆட்சி, மாநில ஆட்சிகளையும் அச்சுறுத்தி தனியார் மயமாக்கத்தை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறது. திமுக அரசு மின்கட்ட ணத்தை உயர்த்தியுள்ளதை இதற்கு எடுத்துக் காட்டாக கூறலாம். மத்திய அரசின் அச்சுறுத்த லுக்கு தமிழக அரசு பணியக்கூடாது. மின் கட்டண உயர்வு, நுகர்பொருள் வாணிபக் கழகம், போக்குவரத்து உள்ளிட்ட எந்த துறையிலும் தனியார் மயமாக்கத்தை கொண்டுவரக் கூடாது வலியுறுத்துகிறது. என மாநாடு
ஒன்றியமோடி அரசின் தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை ஏற்று விதிகள் உருவாக்கியுள்ளதை திமுக அரசு கைவிட வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதைப் போல 4 சட்டத் தொகுப்பு களுக்கு எதிராகவும் சட்டப் பேரவை தீர்மானம் நிறைவேற்றிட வேண்டுமென மாநாடு வலியுறுத்துகிறது.

கார்ப்பரேட்டுகளுக்கு தேவையானவர் களை உருவாக்கிடவும், நாட்டின் பன்மைத்து வத்துக்கு எதிரானதும் தமிழ்நாட்டின், மொழி உரிமை போராட்டத்தால் உருவான இருமொழிக் கொள்கைக்கு எதிரானதுமான தேசிய புதியக் கல்விக் கொள்கையை செயல்படுத்த வேண்டு மென பேசிவரும் தமிழக, புதுச்சேரி ஆளுநர் களை மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கேட்கும் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு அறிவிப்பை வெளியிட வேண்டும். நீட், க்யூட் உள்ளிட்ட மய்யப் படுத்தப்பட்ட தேர்வு முறைகளை கைவிட வேண்டுமென்றும் ஒன்றிய அரசை மாநாடு வற்புறுத்துகிறது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கல்விக் குழு விரைந்து மாநிலத்துக் கான கல்விக் கொள்கையை உருவாக்கிட வேண்டும். உருவாக்கப்படும் கல்விக் கொள்கை அனைத்து மட்டத்திலும் அறிவியல் கண்ணோட் டத்தையும் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசக் கல்வி வழங்குவதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமெனவும் மாநாடு வலியுறுத்துகிறது.

மோடியின் அலங்கார பேச்சுக்கு மாறாக அரிசி, தயிர் உள்ளிட்ட பெரும்பாலான உணவுப் பொருள்களுக்கு 5% ஜிஎஸ்டி வரிவிதித்துள்ள ஒன்றிய அரசை மாநாடு வன்மையாக கண்டிக் கிறது. உணவுப் பொருள் உள்ளிட்ட அத்தியா வசிய பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்திட வேண்டுமெனவும் மாநாடு வலியுறுத்துகிறது.

கள்ளக்குரிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவியின் அதிர்ச்சிதரும் மர்ம மரணத்தின் முடிச்சுகளை விரைந்து விடுவித்து குற்றவாளிகளை கடுமையாக தண்டித்து நீதிகிடைக்கச் செய்வதில் திமுக அரசு தீவிர முனைப்புடன் செயல்பட வேண்டும். இது போன்று மர்ம மரணம், பாலியல் வனமுறை குற்றச்சாட்டு முன்வந்துள்ள பள்ளிகளிலும் விரைந்து வழக்கை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். கனியாமூர் பள்ளியில் நடந்த கண்டனத்துக்குரிய வன்முறையை காரணம் காட்டி கலவரக்காரர்கள் என்று முத்திரை குத்தி கைது செய்வதை அரசு கைவிடவேண்டும். அப்பாவிகள் அனைவ ரையும் விடுதலை செய்திட வேண்டும். இளைஞர் பெருமளவு திரண்டிருப்பது குற்றமயமாகிக் கொண்டிருக்கும் கல்விமுறை மீது கொண்டிருக்கும் கோபத்தைக் காட்டுகிறது. வன்முறையின் மீது கவனத்தை திசை திருப்பி டுவதற்கு மாறாக, தாறுமாறான கட்டணக் கொள்ளையடிக்கும் மெட்ரிக், சிபிஎஸ்ஈ (சர்வதேச பள்ளிகளின் குற்றங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்ற மர்ம மரணங்களும் பாலியல் வன்கொடுமைகளும் இத்தகைய பள்ளிகளில்தான் நடக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். (கனியாமூர் பள்ளி அனுமதி பெறாமலேயே பள்ளிக்கூட மேல்மாடியிலேயே விடுதி நடத்தி வந்தது கண்கூடான முறைகேடு) எனவே, மெட்ரிக், சிபிஎஸ்ஈ தனியார் பள்ளிகள் அனைத்தையும் மாநில அரசின் கட்டுப்பாட் டிற்குள் கொண்டு வர சட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவற்றை படிப்படியாக அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் மாநாடு வலியுறுத்துகிறது.

மோடி ஆட்சியின் ஸ்மார்ட் சிட்டி, தூய்மை இந்தியா(ஸ்வாச் பாரத்), ஜல்ஜீவன் திட்டங்கள், பெரும் ஊழல், முறைகேட்டுக்கும் இயற்கை வளக் கொள்ளைக்குமே வழிகோலி யுள்ளன. கிராமப்புர வறியவர்களின் வேலை வாய்ப்புத் திட்டமான தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையும் மோடி ஆட்சி சீர்குலைத்து வருகிறது. கணிசமாக நிதியைக் குறைத்து வேலைசெய்வோர் எண்ணிக்கை, வேலை செய்யும் நாட்களைக் குறைத்து இந்த திட்டத்தையே ஒழித்துக் கட்ட முற்படுவதை மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. 200 நாள் வேலை, ரூ 600 நாட்கூலி, வழங்கப்பட வேண்டும். இதற்கேற்ப அதிக நிதிஒதுக்கீடு செய்ய வேண்டு மென மாநாடு வற்புறுத்துகிறது. அசுரத்தனமான வேலைஇல்லா திண்டாட் டத்தை ஓரளவேனும் தணிக்கும் வகையில் நகர்ப்புர வேலைவாய்ப்பு திட்டத்தை கொண்டுவர வேண்டுமென்றும் மாநாடு வலியுறுத்துகிறது.

அகில இந்திய, இடதுசாரி விவசாயத் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள ஆகஸ்டு 1 போராட்டத்தை வெற்றிகரமாக்குமாறு மாநாடு அழைப்பு விடுக்கிறது.

130 நாட்களாக வீரஞ்செறிந்த போராட்டம் நடத்திவரும் எஅய்சிசிடியூ தலைமையிலான புதுச்சேரி எல் அண்ட் டி தொழிலாளர் போராட்டத்தை வரவேற்று பாராட்டுகிறது. புதுச்சேரி என்ஆர் காங்- பாஜக கூட்டணி அரசாங்கம், எல் அண்ட் டி தொழிலாளரது நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளு மாறு ஆலை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டு மென மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழக மக்கள், குறிப்பாக தென்மாவட்ட மக்களுக்கு ஆபத்தான, சுற்றுச் சூழலுக்கு பேராபத்தான கூடங்குளம் அணுஉலைப் பூங்காவை மூடவேண்டும், அணுக்கழிவுகளை அங்கேயே புதைக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தி சாதிக்க வேண்டும். ஸ்டெர்லைட், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் மீது போடப்பட்டுள்ள


வழக்குகள் திரும்பப்பெறப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு மாறாக வழக்குகள் நீடிக்கின்றன. அவற்றை உடனடியாக முழுவதுமாக திரும்பப் பெற வேண்டுமென மாநாடு வலியுறுத்துகிறது.

கிராமப்புர நிலமற்ற ஏழைக் குடும்பங்களுக்கு மாநில அரசு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கிட வேண்டும். அபகரிக்கப் பட்டுள்ள லட்சக் கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு உரிய தாழ்த்தப்பட்ட வர்களுக்கு வழங்கும் வகையில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும். கோவில், மட நிலங்களில் குடியிருக்கும் ஏழைகளுக்கு அந்த நிலத்தை சொந்தமாக்கிட வேண்டும். அவற்றில் பயிரிடும் விவசாயி களுக்கே குத்தகை உரிமை வழங்கிட வேண்டுமென மாநாடு வலியுறுத்து கிறது.

கிராமப்புர வறிய குடும்பங்களுக்கு வீட்டுமனை, வீடு, கழிப்பிட வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்குவதுடன், கிராமப்புர, நகர்ப்புர பெண்களை வாட்டி வதைக்கும் வறிய குடும்பங்களின் தனியார் நுண்கடன்களை தள்ளுபடி செய்வதோடு சட்டத்துக்குப் புறம்பான முறையில் கடன் வசூலிக்கும் நிறுவனங்கள் மீது கந்துவட்டி கடன் தடுப்பு சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மாநாடு வலியுறுத்துகிறது.

தவறான பொருளாதாரக் கொள்கைக ளாலும் ஆட்சிமுறையாலும் ஒட்டுமொத்த வாழ்வாதார நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ள இலங்கை மக்கள், இன, மொழி, மத, பிராந்திய வேறுபாடுகளைக் கடந்து பல மாதங்களாக நடத்தி வரும் போராட்டத்தை மாநாடு வரவேற்று ஆதரிக்கிறது. இலங்கையின் மக்கள் போராட்டங்கள், உலகம் முழுவது முள்ள தவறான ஆட்சியாளர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது. கடும் அரசியல் கொந்தளிப்பையும் தடுமாற்றத் தையும் எதிர் கொண்ட ஆட்சியாளர்கள், ராணுவ அடக்கு முறை மூலம் போராட்டங் களை ஒடுக்க முனைவதை கண்டிக்கிறது. இந்திய அரசு, இலங்கை ஆட்சியாளர்களுடன் நிற்பதற்கு பதிலாக மக்கள் போராட்டம், உணர்வை அனுசரித்து ராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் மாநாடு வலியுறுத்துகிறது.