இகக(மாலெஅரசியல் தலைமைக் குழு கூட்டத்தின் தீர்மானங்கள்

(ஆகஸ்ட் 1, 2024 அன்று டெல்லியில் நடைபெற்ற சிபிஐஎம்எல் அரசியல் தலைமைக் குழு கூட்டத்தின் தீர்மானங்கள்)

இகக(மாலெ)விடுதலை கட்சியுடன் மார்க்சிஸ்ட் ஒருங்கிணைப்பு குழு இணைப்பு

1972 இல் தோழர் ஏகே ராய், பிற தலைவர்களால் நிறுவப்பட்ட ஜார்க்கண்ட்டின் மார்க்சிய ஒருங்கிணைப்பு குழு (எம்சிசிசிபிஐஎம்எல் உடன் இணைவது என்று அதன் மத்திய கமிட்டி ஏற்றுக்கொண்ட முடிவை சிபிஐஎம்எல் மத்திய கமிட்டியின் அரசியல் தலைமை குழு உளமார வரவேற்கிறது. தோழர் ஏகே ராயின் உத்வேகமூட்டக்கூடிய புகழ்மிகு தலைமையின் கீழ் ஜார்க்கண்ட் இயக்கத்தில் எம்சிசி ஒரு முக்கிய பங்காற்றியதுமேலும் இந்தியாவின் நிலக்கரி தொழில்துறையை தேசியமயமாக்க வேண்டும் என்பதற்காகவும் போராடியது. அநீதிக்கும் அடக்குமுறைக்கும் எதிராக அதன் புகழ்மிகு போராட்ட மரபுடன் ஜார்க்கண்ட் கம்யூனிச இயக்கம் சிபிஐஎம்எல் உடன் ஒருங்கிணைந்த இந்த நிகழ்வு ஒரு குறிப்பிடத்தக்க போக்காகும்இன்றைய இக்கட்டான தருணத்தில் மோடி அரசாங்கம், சங்கிப் படையணியின் பாசிசத் தாக்குதலுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்தைத் தீவிரப்படுத்த ஜார்க்கண்ட்டின் போராடும் சக்திகளுக்கு இது ஆற்றலூட்டும். மேலும் ஜார்க்கண்டின் உழைக்கும் வர்க்கம்தலித்துகள், பிற மரபான சமூகங்கள்வறிய மக்களின் உரிமைகளையும் ஒற்றுமையையும் பாதுகாப்பதற்கான போராட்டத்திலும் போராடும் சக்திகளுக்கு இது ஆற்றலூட்டும்மார்க்சிய ஒருங்கிணைப்புக் குழுவின் ஒட்டுமொத்த உறுப்பினர்களையும் மதிப்புமிக்க விதத்தில் இணைத்துக் கொண்டுஇந்த ஒருங்கிணைப்பு செயல்முறையை செய்துமுடிக்கத் தேவையான  நடவடிக்கைகளை தொடங்க வேண்டுமென கட்சியின் ஜார்க்கண்ட் மாநில கமிட்டிக்கு அரசியல் தலைமை குழு அழைப்பு விடுகிறது.

2024 மக்களவைத் தேர்தல்களில்பதிவானஎண்ணப்பட்ட வாக்குகளுக்குஇடையே உள்ள பொருத்தமின்மை

ஜனநாயகத்திற்கான வாக்கு என்ற அமைப்பின் மூலம் ஜூலை 22 அன்று 'மக்களவைத் தேர்தல்கள் 2024 நடத்தப்பட்ட முறைஎன்ற அறிக்கை வெளியிடப்பட்டது. அது 2024 மக்களவைத் தேர்தல்களின் போது பதிவானஎண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கைக்கு இடையே உள்ள பெருத்த பொருத்தமின்மையை அம்பலப்படுத்தியதுஅனைத்து தொகுதிகளிலும் சேர்த்து மொத்தமாக 4,65,46,885 வாக்குகள் அதிகரித்துள்ளன என அந்த அறிக்கை கண்டுபிடித்தது. இந்த வேறுபாட்டால் 15 மாநிலங்களின் 79 தொகுதிகளில் பாஜக/என்டிஏ பயனடைந்து இருக்கலாம்இந்த தொகுதிகளின் வெற்றியாளர்கள் பெற்ற வாக்குகளின் வெற்றி வித்தியாசம், ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக அதிகரித்த வாக்குகளை விட குறைவானதாகும். இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் சொல்லியாக வேண்டும். தேர்தல் ஆணையம் மௌனமாக இருப்பதுதேர்தல் முறைகேடு குறித்த சந்தேகங்களுக்கு வலுச்சேர்ப்பதாகவே உள்ளது.

மேற்கு வங்கத்தைப் பிரிப்பதற்கு தூண்டி விடும் விதமாக பாஜக தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகள் 

மேற்கு வங்கத்தைப் பிரிக்க வேண்டுமென அழைப்பு விடுத்து சதிமிகுந்த அறிக்கைகளை அண்மையில் பல பாஜக தலைவர்களும் வெளியிட்டனர். அப்படியான ஒரு அறிக்கையை வெளியிட்ட பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் மேற்குவங்க மாநில தலைவருமான சுகந்த மஜும்தார்வடக்கு வங்கத்தை வடகிழக்கு இந்தியாவுடன் ஒன்றிணைக்க வேண்டும் என அதில் முன்வைத்தார்மற்றொரு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அனநாத் மகராஜ், அசாமின் சமவெளி மாவட்டங்களுடன் கூச்பிஹார் பகுதியை இணைத்து தனியே விரிந்த கூச்பிஹார் மாநிலமாக அமைக்க வேண்டுமென முன்வைத்தார்குர்ஸியோங்கின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் சர்மா ஒட்டுமொத்த வடக்கு வங்க பகுதிகளையும் உள்ளடக்கிய யூனியன் பிரதேசமாக கூர்க்காலேண்டை அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். ஜார்க்கண்ட் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் தூபே மேற்கு வங்கத்தின் மால்டாமுர்ஷிதாபாத்வடக்கு வங்க மாவட்டங்கள் ஆகியவற்றை பீகாரின் கிஷன்கன்ஞ்கத்திகார், பூர்ணியாஅராரியா உள்ளிட்ட சீமாஞ்சல் பகுதியுடன் இணைத்து தனி மாநிலமாக அல்லது யூனியன் பிரதேசமாக மாற்றவேண்டும் என வாதிடுகிறார். மோடி அரசாங்கத்தின் இந்த பிரித்தாளும் தந்திரத்தை நாம் நிச்சயமாக முறியடிக்க வேண்டும்இந்தியாவின் கூட்டாட்சிக் கட்டமைப்பை சிதைத்து, மாநிலங்களை அதீத மையப்படுத்தப்பட்ட மத்திய அரசின் புற அங்கங்களாக மாற்றுகிற அதனுடைய முயற்சிகளையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

டெல்லியின் பயிற்சி மையத்தில் வெள்ளத்தால் நிகழ்ந்ததுயரம்

ஜூலை 27 அன்று ராவு'ஸ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் நிலவறை நூலகத்தில் நுழைந்த வெள்ளத்தால் யுபிஎஸ்சி தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்த மூன்று பேர் மரணம் அடைந்தனர்எவ்வித பொறுப்புணர்வும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி செயல்பட்டுக் கொண்டிருக்கும் பயிற்சி மைய தொழில்துறையின் அக்கறையற்ற நிலையை இந்த துயர நிகழ்வு அம்பலப்படுத்தியுள்ளது. இந்நிகழ்வின் அதிர்ச்சிதரத்தக்க தகவல்களையும் இந்தத் துயரத்தின் உண்மை நிலையையும் காவல்துறை மூடி மறைக்கிறது என மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மோடி அரசாங்கம் டெல்லி அரசாங்கத்தின் உரிமைகள் மீது திட்டமிட்ட ரீதியில் நடத்துகிற தாக்குதலும்முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கெடுநோக்குடன் கைது செய்ததும் டெல்லியை குழப்பத்திற்குள்ளும் அராஜகத்திற்குள்ளும் தள்ளியுள்ளது. மோடி அரசாங்கத்தின் இந்த அசிங்கமான அரசியல் விளையாட்டுகளுக்கு டெல்லியின் குடிமக்கள் பெரும் விலை கொடுக்க வேண்டியுள்ளதுஇந்த ராஜேந்திர நகர் துயரத்திற்கு டெல்லியின் துணைநிலை ஆளுநர்ஒன்றிய உள்துறை அமைச்சர் ஆகியோரின் கூட்டணி முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்இந்த நிகழ்வு குறித்து விரிவான அறிக்கை வெளியிடப்பட வேண்டும்ராவு'ஸ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட வேண்டும்இந்த குற்றவியல் அலட்சிய செயலுக்கு உடந்தையாக இருந்த பிறரும் கைது செய்யப்பட வேண்டும். டெல்லியில் மாணவர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தணிக்கை செய்யப்பட வேண்டும்பொருத்தமான அனைத்து பாதுகாப்பு விதிகளும் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும்சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் முறையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ் வழங்குவதும் செய்யப்பட வேண்டும்.

வயநாடு நிலச்சரிவு துயரம் 

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகளாலும் அதனால் ஏற்பட்ட இறப்புகளாலும் பாதிக்கப்பட்ட மக்களின் மனத்துயரையும் வலியையும் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். இந்த நிலச்சரிவில் 185க்கும் அதிகமான பேர் தங்கள் உயிரை இழந்துவிட்டனர்நூற்றுக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர்அவர்கள் இவ்வளவு நாளும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தையும் பொருட்களையும் இழந்துவிட்டனர். இதயத்தை சுக்குநூறாக உடைக்கும் இந்தப் பெருங்கேடால் நாங்கள் ஆழ்ந்த வருத்தத்திற்குள்ளாகி இருக்கிறோம்இந்தப் பேரிடரில் வயநாடுகேரளா மக்களோடு சிபிஐஎம்எல் ஒருமைப்பாட்டுணர்வுடன் இணைந்து நிற்கிறது. இந்த வயநாடு நிலச்சரிவு துயரம் ஒரு தேசிய பேரிடராக அறிவிக்கப்பட வேண்டும் என நாங்கள் கோருகிறோம்மோடி தலைமையிலான ஒன்றிய அரசாங்கத்தின் மூலம் உடனடியாக மத்திய அரசின் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும்இத்தகைய துயரங்களின்நிலச்சரிவுகளின் பின்னால் இருக்கும் காரணங்கள் குறித்து மாநிலமத்திய நிறுவனங்கள் ஆய்வும் விசாரணையும் மேற்கொள்ள வேண்டும்அதன் மூலம் இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் உயிர்களையும், அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த சொத்துகளையும் இழப்பதைத்  தடுக்க முறையான நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும்.

பாலஸ்தீன சூழல்

காசாவிலும் மேற்கு கரையிலும் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக அமெரிக்க ஆதரவு பெற்ற இஸ்ரேலின் இனவெறி போர்இதுவரையிலும், 16,314 குழந்தைகள் உள்ளிட்ட 40,000 மக்களைக் கொன்று குவித்துள்ளது. காசாவின் மீது குண்டுகளால் நடத்தப்படும் பரவலான பேரழிவைத் தாண்டியும், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு படையினர் மனிதாபிமான வாகனத் தொடர்கள் மீது வேண்டுமென்றே தாக்குவது உட்படபொதுமக்களை பட்டினி போட்டு சாகடிப்பதையும் போரின் ஆயுதமாகப்  பயன்படுத்துகின்றனர்இது பெருங்கேடு விளைவிக்கத்தக்க மனிதாபிமானமருத்துவ நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளதுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பதவி விலகலை கோரி நாடு முழுவதும் பரவலாக நடைபெறும் மாபெரும் போராட்டங்களுக்கு மத்தியில், அவர் தனது அதிகாரத்தை தக்கவைக்கும் முயற்சியாகஇந்தப் போரை அந்தப் பகுதி முழுவதற்குமான போராக மாற்றி விடும் சதியில் ஈடுபடுகிறார். நெதன்யாகு ஆட்சியால் ஈரானில் ஹமாசின் அரசியல் தலைமை குழு தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் அண்மைய படுகொலைலெபனானில் தேர்ந்தெடுத்து நடத்தப்படுகிற கொலைகள், போர் நிறுத்தம்-பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்திற்கு தடைகளை ஏற்படுத்துவது ஆகியவற்றின் மூலம் இந்தப் பகுதி முழுவதையும் போரின் விளிம்பு நோக்கி தள்ளி விடுகிறார்பாலஸ்தீன மக்களுக்குவிடுதலைக்கான அவர்களின் போராட்டத்திற்கு கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டம் உறுதியான ஆதரவை வெளிப்படுத்துகிறதுமேலும் காசா மீதான இஸ்ரேலின் போர் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும் கோருகிறது.

பிரான்ஸ் தேர்தல்கள்

அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் பாசிஸ்டுகளை தடுத்து நிறுத்தியதற்காக பிரான்ஸ் மக்களுக்கு அரசியல் தலைமை குழு தனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறதுசில நூற்றாண்டுகளுக்கு முன்பாக 1789இல் சுதந்திரம்சமத்துவம்சகோதரத்துவத்திற்கு உரத்து அறைகூவல் விடுத்த நிலமான பிரான்ஸ், 1871 இன் வரலாற்று சிறப்புமிக்க பாரிஸ் கம்யூன் வழியாக சோசலிசத்திற்கான முதல் காட்சியை அரங்கேற்றியது. அது தற்போது இடதுகள்முன்னணி பங்கேற்பாளர்களாக செயல்படும் பாசிசத்திற்கு எதிரான எதிர்ப்பின் முக்கிய அரங்கமாக மீண்டும் ஒருமுறை எழுந்து வருகிறது.

வெனிசுலாவின் தேர்தல்கள்

ஜூலை 28 அதிபர் தேர்தல்களுக்கு பிறகு வெனிசுலா நாட்டில் அமெரிக்க ஆதரவு பெற்ற தீவிர வலதுகளின் வன்முறை தொடருகிறது. அதனை எதிர்கொள்ளும் வெனிசுலாவின் மக்களுக்கும்சோசலிச பொலிவாரியன் புரட்சியைப் பாதுகாக்கும் அவர்களுடைய போராட்டத்திற்கும் அரசியல் தலைமை குழு கூட்டம் முழுமையான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகிறதுகார்ப்பரேட் ஆதரவுஏகாதிபத்திய ஆதரவுசர்வதேச ஊடகங்கள் தீவிர வலதுசாரி எதிர் கட்சிகள் ஆகியோர் தேர்தல்களுக்கு முன்னதாகவே மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்அவர்கள் பொலிவாரியன் செயல்முறையையும் அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் தோல்வியையும் கூட பிரகடனப்படுத்தினர். அதன்மூலம் தேர்தலுக்கு பின்பு வன்முறையும் குழப்பமும் நிகழ்வதற்கான வளமான நிலமாக வெனிசுலாவை உருவாக்க முயற்சித்தனர்அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தல்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அப்பட்டமான ஆணவம்பொருளாதார தடைகள்நாட்டை சீர்குலைக்க நினைக்கும் நவ-மன்றோ கோட்பாடு ஆகியவற்றுக்கு எதிரான, அவர்களது பொலிவாரியன் புரட்சிகர செயல்முறைக்கு ஆதரவான  வெனிசுலா மக்களின் ஜனநாயகபூர்வமான தீர்ப்பை எதிரொலிக்கின்றன.