எங்களுக்கு நீதி வேண்டும்இந்தியாவில் பெண்களின்பாதுகாப்பிற்கானசுதந்திரத்திற்கான புதுப்பிக்கப்பட்டபோராட்டம்

கொல்கத்தாவின் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின், 31 வயது முதுகலை பட்டதாரி பயிற்சி மருத்துவர் கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்இது சர்வதேச இயக்கத்திலிருந்து பெறப்பட்ட 'இரவினை மீட்டெடுப்போம்என்றழைக்கப்படும் பெண்களின் இயக்கம் சுதந்திர நாளுக்கு முந்தைய இரவில் தொடங்கப்படக் காரணமாகியது. பெண்களின் குறிப்பிடத்தக்க முன்முயற்சியால் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தால் ஆற்றல் வழங்கப்பட்ட மாபெரும் மக்களின் அறுதியிடலையும் இது மேற்கு வங்கத்தில் தூண்டி விட்டது. இன்றைய இந்தியாவில் பெண்களின் சுதந்திரம்பெண்களின் பாதுகாப்புகண்ணியமானஜனநாயக வாழ்விற்கான பெண்களிடமிருந்து பறிக்க முடியாத உரிமை ஆகிய தீர்மானகரமான பிரச்சனைகள் மீது இந்த ஆகஸ்ட் 15 இன் கவனம் திரும்பியதுகடினமான 36 மணிநேர வேலையை முடித்த பிறகு அவர் வேலை பார்த்த சொந்த மருத்துவமனையிலேயே ஒரு இளம் பெண் மருத்துவர் மிருகத்தனமான வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். பெண்களுக்கு அவர்களது பணியிடங்களில் முற்றிலும் பாதுகாப்பாற்ற சூழ்நிலை இருப்பதன் அதிர்ச்சிகரமான அடையாளமாக இந்த உண்மை உள்ளதுகொல்கத்தாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில இடங்களில் சிறிய எதிர்ப்பு போராட்டமாக திட்டமிடப்பட்ட யோசனைமுன்னெப்போதும் கண்டிராத மாநில அளவிலான பெண்களின் அறுதியிடலாக உடனடியாக வளர்ச்சி பெற்றதுநாடு முழுவதுமுள்ள மாணவர்கள்மருத்துவர்கள், கரிசனமிக்க குடிமக்கள் இந்த மேற்கு வங்க இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் சகோதரத்துவ உணர்வுடன் வீதிகளில் உடனடியாக இறங்கினர்.

இது, 2012 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வுக்கு எதிரான மக்கள் எழுச்சியின் தருணங்களை மீண்டும் இந்தியாவில் உயிர்ப்பித்துள்ளது. 2012 ஆம் ஆண்டுஒரு தனியார் பேருந்தில் 22 வயது பிசியோதெரபி பயிற்சி மருத்துவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த நிர்பயா நிகழ்வைத் தொடர்ந்துஅப்போது நாடுமுழுவதும் ஆற்றல்மிக்க போராட்டங்களுக்கு அது வழிவகுத்ததுஅதுமட்டுமல்ல, ஒரு நீதிமன்ற கமிட்டியை அமைப்பதற்கும்பெண்கள் இயக்கங்கள்செயல்பாட்டாளர்களுடன் விரிவான கலந்தாலோசனைகள் மேற்கொள்ளவும் அது வழிவகுத்ததுஅதன்மூலம் பாலியல் துன்புறுத்தலையும் வன்முறையையும் எதிர்கொள்வதில் குற்றவியல் சட்டங்களைக் கூடுதல் திறன்மிக்கவையாக ஆக்குவதற்கு தேவையான முக்கிய மேம்படுத்தல்களையும் அது தருவித்ததுஇக் குற்றத்தில் ஈடுபட்ட ஆறு பேர்களும் கைது செய்யப்பட்டனர்சிறைக் காவலில் இருக்கும் போது ஒருவர் இறந்து விட்டார். 2020 மார்ச் 20 இல் நான்கு பேர் தூக்கிலிடப்பட்டனர்இள வயது குற்றவாளி தனது தண்டனையை சிறையில் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

2012-13 இன் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான இயக்கம்பாலியல் துன்புறுத்தல்வன்முறை நிகழ்வுகளில் நீதி கிடைப்பது குறித்த கேள்வியில் சரியாக கவனம் குவித்தது. மேலும் வழக்குகளை பதிவு செய்வதை எளிதாக்குவதுவிசாரணை முறையை விரைவுபடுத்துவதுகுற்றவாளிகள் தண்டனை பெறும் விகிதத்தை அதிகரிப்பது ஆகியவற்றிலும் கவனம் குவித்ததுஇப்போதும் கூட 'எங்களுக்கு நீதி வேண்டும்என்ற மைய முழக்கமே மேற்கு வங்கத்தையும் அதைத் தாண்டியும் காற்றைக் கிழித்துக் கொண்டு சென்றதுமிகவும் வெறுக்கத்தக்க இந்த செயலை மூடி மறைக்க செய்யப்படும் ஒவ்வொரு முயற்சியையும் முறியடித்துநீதி கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யவே மேற்கு வங்க மக்கள் உடனடியாகவும் வலுவாகவும் வீதிகளில் இறங்கினர்மேலும் இந்தக் கோரமான குற்றத்தில் ஈடுபட்ட குற்றமிழைத்தவர் அல்லது உடந்தையாக இருந்தவர் எவரொருவரும் பாதுகாக்கப்படுவதற்கு எதிராகவும் அவர்கள் வீதிகளில் இறங்கினர். பாதிக்கப்பட்டவர் மீதே குற்றம் சுமத்தும் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி (ஆர்ஜிகேஎம்சிமுதல்வரின் அருவருக்கத்தக்க அறிக்கைக்கு எதிராக 'இரவினை மீட்டெடுப்போம்என்ற அழைப்பு துல்லியமாக வெளிப்பட்டது. நெருக்கடியின் காரணமாக ஆர்ஜிகேஎம்சி முதல்வர் அந்தப் பதவியிலிருந்து விலகிய உடனேயேஅவருக்கு நகரத்திலுள்ள மற்றொரு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட போதுமக்களின் கோபம்ரக்ஷர காட்டுத் தீயாய் பரவியது.

கொல்கத்தாவின் தெருக்களில் பத்தாயிரக்கணக்கான மக்கள் கூடிய 'இரவினை மீட்டெடுப்போம்கூட்டங்களும் ஊர்வலங்களும் நிகழ்ந்த அதே இரவில் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையை சட்ட விரோத கும்பல் சூறையாடியதுஇந்நிகழ்வில் காவல்துறையின் செயலற்ற நிலைமக்களின் கோபத்திற்கும் அறுதியிடலுக்கும் கூடுதல் பங்களித்தது. முதலமைச்சராக மட்டுமல்லமாநில அரசாங்கத்தின் சுகாதாரசட்டம், ஒழுங்கு அமைச்சரவைக்கும் பொறுப்பானவர் என்ற முறையில் அவருடைய சொந்த பொறுப்பை ஒப்புக்கொள்வதற்கு மாறாகஒரு கேலிக்குரிய நடவடிக்கை போல, இதுவரை இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஒரே குற்றவாளியைத் தூக்கிலிட வேண்டும் எனக் கோரி முதலமைச்சர் மம்தா பானர்ஜி 'எதிர்ப்புப் பேரணிஒன்றை நடத்தினார்.

பாரம்பரியமாக எதிரெதிர் அணிகளாக இருக்கும் மோகன் பகான், கிழக்கு வங்க அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியை மாநில அரசாங்கம் ரத்து செய்ததுஇந்த நடவடிக்கை நகரத்தின் மூன்று உயர் கால்பந்தாட்ட குழுக்களான மோகன் பகான்கிழக்கு வங்கம் முகமதன் ஸ்போட்டிங் கால் பந்தாட்ட ரசிகர்களின் ஒற்றுமை அணிவகுப்பைத் தூண்டிவிட்டுஒருமைப்பாட்டுணர்வுஎதிர்ப்புணர்வின் குறிப்பிடத்தக்க மற்றுமொரு வெளிப்பாடாக மாறியதுநிகழ்த்து கலைஞர்கள்வழக்கறிஞர்கள்அனைத்து வகையான தொழில்சமூக வாழ்நிலைமைகளிலிருந்தும் வந்த மக்கள் நீதி கோரி ஒவ்வொரு நாளும் தங்கள் போராட்டங்களை தொடர்கின்றனர்.

இதற்கிடையில் கொல்கத்தா உயர் நீதிமன்ற பரிந்துரையில் இந்த வழக்கின் விசாரணை சிபிஐயிடம் கொடுக்கப்பட்டிருக்கிறதுஉச்ச நீதிமன்றமும் இந்த வழக்கைத் தானாகவே எடுத்துக் கொண்டுமாநில அரசாங்கமும் சிபிஐயும் வழக்கின் நடப்பு நிலவரம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க கேட்டுக் கொண்டுள்ளதுமருத்துவர்களை அவர்களின் போராட்டத்தை முடித்துக் கொண்டு பணிக்கு திரும்ப உச்ச நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்தது.

அதேவேளையில் மருத்துவ தொழில் செய்பவர்கள், சுகாதாரப் பணியாளர்களின் பணியிடப் பாதுகாப்பை வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க தேசிய பணிக்குழு ஒன்றை அமைக்கும் அதன் முடிவையும் அறிவித்தது. அமைதியான வழிகளில் போராட்டத்தை நடத்திட மக்களுக்குள்ள உரிமைகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமெனவும்தனது சக்தியை பயன்படுத்தி போராட்டங்களை ஒடுக்க முயற்சிக்கக் கூடாது எனவும் மேற்கு வங்க அரசாங்கத்தை அது கேட்டுக் கொண்டதுஆற்றல் வாய்ந்த போராட்ட இயக்கத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட நெருக்கடி, மாநில அரசாங்கத்தை தெளிவாகவே தற்காப்பு நிலைக்கு தள்ளியது. அதுமட்டுமல்ல உச்ச நீதிமன்றம் செயலூக்கமான வழியில் வினையாற்றவும் அதனை நிர்பந்தப்படுத்தியது. ஓரளவு உண்மையான நீதியையும் சாதகமான மாற்றங்களையும் பெறுவதற்கு இந்த அழுத்தம் நிச்சயமாக தொடர்ந்து கொடுக்கப்பட வேண்டும்.

இங்கே உள்ள விவாதம் என்பது தெளிவாகவே மருத்துவ தொழில் செய்பவர்களுக்கு பாதுகாப்பு என்பதாக மட்டுமே சுருக்கப்பட முடியாது. பணியிடங்கள்பொது இடங்கள் அதேபோல வீடுகள்குடும்பங்கள் என்ற தனிப்பட்ட தளங்களிலும் அனைத்துப் பெண்களின் உரிமைகளான பாதுகாப்பையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதாகும்தங்களது உரிமைகளை மீட்டெடுக்க மேற்கு வங்கம் முழுவதற்கும் பெண்கள் வீதிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த அதே இரவில் பிரியங்கா ஹன்ஸ்தா என்ற பழங்குடியின பெண் பர்தமான் மாவட்டத்தின் சக்திகரில் கொடூரமாக கொல்லப்பட்டார். குரூரமான ஆர்ஜி கர் நிகழ்வு நடந்த அதேநேரத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெண்கள் மீது பல்வகை வன்முறை நிகழ்த்தப்பட்டதுஉத்தர்கண்ட்டில் ஒரு செவிலியர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். பீகாரின் முசாஃபர்பூர் மாவட்டத்தில் ஒரு 14 வயது தலித் பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். மும்பைக்கு அருகில் பட்லாபூரின் புகழ்பெற்ற ஒரு பள்ளியில் மாணவிகள் மீது அதிர்ச்சிகரமான பாலியல் தாக்குதல் உள்ளிட்ட பாலியல் வன்முறையின் கொடூர நிகழ்வுகள் பற்றிய செய்திகள் வந்தனஉச்ச நீதிமன்றம் ஆர்ஜி கர் வழக்கை விசாரிக்கும் ஒரு நாள் முன்னதாக மலையாள சினிமாத்துறையில் ஊடுருவிப் படர்ந்துள்ள பாலியல் துன்புறுத்தல், ஆழமாக வேர் கொண்டுள்ள பெண் வெறுப்பு குறித்து நீதிபதி கே ஹேமா தலைமையிலான கமிட்டி சமர்ப்பித்த அறிக்கையை கேரள அரசாங்கம் வெளியிட்டது.

ஜம்முவின் கதுவாஉபியின் ஹாத்ராஸ் முதல் மணிப்பூரின் அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் வரையிலும், 2012 நிர்பயா நிகழ்விலிருந்து பல எண்ணிக்கைகளில் குரூர பாலியல் வன்புணர்வு, கொலை நிகழ்வுகள் நடந்துள்ளனஇவையெல்லாம் உச்ச நீதிமன்றத்தின் போதுமான கவனத்தை ஒருபோதும் ஈர்க்கவில்லைபணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க 1997 இல் உச்ச நீதிமன்றத்தால் நிறுவப்பட்ட விசாகா வழிகாட்டுதல்கள், மேம்படுத்தப்பட்ட 2013 சட்டம் ஆகியவை அதிகளவு மீறப்படுவதை இன்னும் நம்மால் காணமுடிகிறதுபாலியல் வன்புணர்வு குற்றவாளிகள், பாலியல் வன்புணர்வு குற்றம் சுமத்தப்பட்ட அரசியல்வாதிகளை பாஜக பாராட்டுகிறது; ஆற்றுப்படுத்துகிறதுஆர்ஜி கர் நிகழ்வில் மம்தா பானர்ஜியின் கேலிக்குரிய 'போராட்டம்மூலமாக சுட்டிக்காட்டப்பட்டது போல, நீதி குறித்த கேள்வியைபெரும்பாலான கட்சிகள் மரண தண்டனை வேண்டி உரத்த கூச்சலில் அழைப்பு விடுப்பதன் மூலம் மடைமாற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள்.

உண்மை என்னவென்றால்நிர்பயா வழக்கில் நான்கு தண்டனைக் கைதிகள் தூக்கிலிடப்பட்ட போதிலும்இந்தியாவில் பாலியல் வன்புணர்வு இன்னமும் கூட பரவலாக நடக்கும் குற்றமாக இருக்கிறது. இதன்மூலம் இந்தக் குற்றங்களில் மரண தண்டனை ஒரு தடுப்பு நடவடிக்கையாக இல்லை என்பது தெளிவாகிறதுஅனைத்துத் தளங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உறுதி செய்வதற்கான நிறுவனமயப்பட்ட நடவடிக்கைகள்உடனடியான, நிச்சயமான நீதி வழங்கல்வலுவான சமூகப் புத்தெழுச்சிபாலியல் வன்புணர்வு கலாச்சாரத்துக்கும் ஆணாதிக்கத்துக்கும் எதிரான  அணிதிரட்டல் ஆகியவையே உடனடியாக காலத்தின் கட்டாயமாகும். ஆர்ஜி கர் கொடூரத்தால் தூண்டிவிடப்பட்ட 'எங்களுக்கு நீதி வேண்டும்என்ற கர்ஜனை இந்தியாவை உறுதியாக இந்த வழியில் முன்னோக்கி கொண்டு செல்லட்டும்.