சாராயத்தில் ஏது கள்ளச் சாராயம் நல்ல சாராயம்!

'ஈடில்லா ஆட்சி, இரண்டு ஆண்டே சாட்சி" என்று ஆளும் திமுக சாதனைக் கூட்டங் களை நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திலும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரிலும் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் மரணமுற் றுள்ளார்கள். பலர் சிகிச்சையில் உள்ளார்கள். திமுக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதி களில் முக்கியமான ஒன்று பூரண மது விலக்கு. பத்திரிகை நிருபர்கள் திரு. ஸ்டாலின் அவர்களிடம், சாராய ஆலைகள் பல தங்கள் கட்சிக்காரர்களால் நடத்தப்படுகின்றதே! நீங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த ஆலைகள் மூடப்படுமா என்று கேட்டார்கள்.

குற்றவாளிகளின், மோசடிப் பேர்வழிகளின் புகலிடம் பாஜக)

நாடு முழுவதும் குற்றவாளிகள் ஒருவர் பின்  ஒருவராக பாஜகவிற்குப் படையெடுக்கிறார்கள் என்பது ஒரு புறமிருக்க, ஏற்கனவே பாஜகவில் இருப்பவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அதுவும் பாலியல் குற்ற வழக்குகளில் முதலிடத்தில் பாஜக உள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் ஆய்வறிக்கை கூறுகிறது. மகள்களைப் பாதுகாப்போம் என்றும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்போம் என்றும் பேசிக் கொண்டிருக்கும் மோடியின் ஆட்சியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கே பாதுகாப்பு இல்லை. 

சுடும் எதார்த்தமும் போராட்ட உணர்வும்

'ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு நீதான அனுப்பின உம் பையன'. காலேஜ் படிக்கும் தன் மகன் அப்பார்ட்மெண்ட் செப்டிக் டேங்க் கழுவச் சென்று விஷ வாயு தாக்கி இறந்து விட்டான் என்பதை நம்ப முடியாமல் என் மகனைக் காட்டு, அவனைக் காட்டுங்கள் என்று கதறும் தூய்மைப் பணியாளரான தாயிடம் அரசாங்க ஆஸ்பத்திரியில் அடாவடியாகப் பேசுகிறது போலீஸ். மலக் குழி மரணம். புகார் வாங்கக் கூட மறுக்கும் போலீஸ், கம்ப்ளைண்ட் எதுக்கு? என்ன பண்ணப் போறீங்க? எதுவும் நடக்காது. பேசி முடிச்சா கொஞ்சம் பணமாவது கிடைக்கும் என்கிறது. இன்னொரு பக்கம், மாநகராட்சி அலுவலகம்.

ஜி20 5ஜி மோடிஜி

ஜி20 கூட்டமைப்பின் 17வது உச்சி மாநாடு இந்தோனேசி யாவின் பாலி தீவில் 2022 நவம்பர் 14-15 தேதிகளில் நடைபெற்றது. இந்தோனேசியாவின் அதிபர் ஜோகோ விடோடோவிடம் இருந்து ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை உச்சி மாநாட்டின் இறுதி நாளில் இந்தியப் பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார். அதன் அடையாளமாக ஜோகோ விடோடோ சுத்தியலை மோடியிடம் ஒப்படைத்தார். தலைமைப் பொறுப்பைப் பெற்றுக் கொண்ட பின் பேசிய இந்திய பிரதமர் மோடி,

சத்தியம் என்றால் காந்தி; நீதி என்றால் கோட்சே!

கடந்த 8 ஆண்டுகளாகச் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா. டெல்லி பல்கலைக் கழகப் பேராசிரியரான இவருக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருக்கிறது என்று சொல்லி 8 ஆண்டுகளுக்கு முன்பு சிறையிலடைக்கப்பட்டார். 90% மாற்றுத் திறனாளி இவர். சக்கர நாற்காலி இல்லாமல் இவரால் நகர முடியாது. தன்னுடைய தேவைகள் அனைத்திற்கும் அவர் அடுத்தவர்களை நம்பித்தான் இருக்க வேண்டும். சிறையில் இவருக்கு குளிர் தாங்குவதற்கான போர்வை கூட கொடுக்கப்படாமல் விரைவில் நான் செத்துவிடுவேன் என்று தன் இணையருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கடிதம் எழுதினார்.

இந்திய விடுதலைப் போரில் கம்யூனிஸ்ட்டுகளும் தொழிலாளர்களும் தமிழ்நாடும்

இந்திய நாடு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலையடைந்த 75 ஆம் ஆண்டில், அதை அனனவரும் கொண்டாட வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்கள் ஆட்சியாளர்கள். இந்த ஆட்சியாளர்கள் யார் என்றால், விடுதலைக்காகப் போராடியவர்களை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்தவர்களின் வாரிசுகள். ஆங்கிலேயர் களிடம் தங்களுக்குச் சேவை செய்யக் கடன்பட்டுள்ளேன், என்னை சிறையில் இருந்து விடுவித்திடுங்கள் என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த சாவர்க்கரின் வாரிசுகள். நாட்டு விடுதலைப் போரின் போது ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக, இந்திய நாட்டை மதரீதியாகத் துண்டாடத் துடித்த கோல்வார்க்கரின் வாரிசுகள் சனாதன இந்துமத வெறி கோட்சே வாரிசுகள்.

மந்திரிக்கு பல்லக்குத் தூக்கும் ராஜாக்கள்

தமிழகத்தில் காலூன்றிடத் துடிக்கும் பாஜக  புதுப்புது அவதாரங்களை எடுப்பதும் புதுப்புது பிரச்சினைகளை