தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள்!

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,

தமிழ்நாடு அரசு,

தலைமைச்செயலகம்,

சென்னை-9

திமுக அரசாங்கம், வீரளூர் அருந்ததியர் மக்களுக்கு உடனடியாக சமூக நீதியை உறுதி செய்திட வேண்டும்

பொருள்: திருவண்ணாமலை மாவட்டம் வீரளூரில் சாதிவெறித் தாக்குதலுக்குள்ளான அருந்ததியர் மக்களுக்கு உயிர், உடமை பாதுகாப்பு, இழப்பீடு, வாழ்வாதாரம் உள்ளிட்ட சமூகநீதியை உறுதிசெய்து தருமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்:-

கடந்த சன.16 தேதியன்று  வீரளூர் கிராமத்து தாழ்த்தப்பட்ட குடியிருப்புகள் மீதும் வீடுகள், வாகனங்கள் உள்ளிட்ட உடமைகள் மீதும் சாதி ஆதிக்க சக்திகள் கொடூரமான தாக்குதல் நடத்தியதை ஊடகங்கள், அரசியல். சமூக அமைப்புகளின் உண்மையறியும் அறிக்கைகள் வாயிலாக அறிந்து பிப்ரவரி 9 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-&லெனினிஸ்ட்குழுவொன்று வீரளூர் கிராமத்துக்கு சென்றிருந்தது. அக்குழுவில் கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள் பாலசுந்தரம், சந்திரமோகன், கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் டி. கலியமூர்த்தி, ஏஅய்சிசிடியூ மாவட்ட செயலாளர் கொளஞ்சிநாதன், திருவண்ணாமலை கமல் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் பலதரப்பினரையும் குழு சந்தித்தது. பாதிக்கப்பட்ட வீரளூர் தாழ்த்தப்பட்ட மக்களின் நியாயமான உரிமைகளுக்கு குழு தனது ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொண்டது. தாக்குத லுக்கு ஆளான மக்களுக்கு ஆறுதலையும் தெரிவித்தது.

எமது குழு நேரில் கண்டறிந்த விவரங்களை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவருவதோடு வீரளூர் தலித் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பும் வாழ்வாதாரமும் உடனடியாக உறுதி செய்யப்படு வதற்கு அரசாங்கம் செய்ய வேண்டிய நடவடிக்கை களையும் தங்களின் பார்வைக்கு முன்மொழிகிறது.

 • தாக்குதல் நடந்து 25 நாட்களுக்குப்பிறகும் வீரளூர் தலித் மக்கள், அதிலும் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் அச்சத்திலேயே உள்ளனர். எவ்வித வேலைவாய்ப்பு இல்லாமலும் சிறிது நிலம் உள்ளவர்கள் கூட தங்களது வயலுக்குச் செல்லமுடியாமலும் உள்ளனர். பெரும்பாலான கடைகள் மூடப்பட்டி ருப்பதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது. அங்காங்கே பல இடங்களில் காவல் துறை முகாமிட்டிருந்தபோதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இன்னும் அச்சம் நீங்கவில்லை. தலித் மக்களை தாக்கியவர்கள் தலித்துகளது தெருக்களில் வட்டமிட்டு வருவதை பார்க்கமுடிகிறது. அதைக் காவலர்கள் தடுத்து நிறுத்தவும் இல்லை. ஆதிக்க சாதியினரின் அச்சுறுத்தல் காரணமாக பால் வழங்குவோர் கூட பால் வழங்காமல் இருக்கிறார்கள். இதனால் குழந்தைகள் பாலின்றி தவிக்கின்றனர்.
 • மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி ஜனவரி 11ம் தேதி, அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரது பிணத்தை பொதுப்பாதை வழியாக (நெடுஞ்சாலை) எடுத்துச்சென்று அடக்கம் செய்துள்ளனர். ஆனால், ஜனவரி 15ம் தேதி அன்று இறந்த பெண் அமுதாவின் பிணத்தை எடுத்துச்செல்ல எதிர்ப்பு தெரிவித்து அமைதிக் கூட்டத்திலிருந்து வெளியேறி உள்ளனர். இது மாவட்ட நிர்வாகத்தின்-அரசாங்கத்தின்-உத்தரவுக்கு எதிரான நடவ டிக்கை. நிர்வாகத்தின் தலையீட்டின்பேரில் அடக்கம் நடந்திருக்கிறது.அதேசமயம், ஆத்திரம் கொண்ட வன்னியர்-கவுண்டர், கோனார், ஆச்சாரி, பிள்ளை உள்ளிட்ட இடைநிலைச்சாதியினர் கும்பல் நூற்றுக்கணக்கானோர் அருந்ததியர் குடியிருப்புக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ளனர்.
 • பொதுச் சமூகத்தின், தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் செய்திகள் வருமாறு: தாக்குதல் நடந்த உடனேயே விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, நீலப்புலிகள் இயக்கம், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாதிக்கப்பட்ட மக்களை சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி யுள்ளன. மாறாக பெரிய கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் திமுக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள், இவற்றின் தலைவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை வந்து பார்க்கவில்லை. ஏனெனில், அருந்ததியர் மீதான தாக்குத லுக்கு, திமுக,-பாமக,-அதிமுக ஆகிய கட்சிகளிலுள்ள ஙிசி, விஙிசி சாதியினர் கட்சி வேறுபாடின்றி கூட்டம் போட்டு திட்டமிட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.  பொதுச் சமூகத்தின் கண்ணில் தலித்துகளுக்கு ஆதரவாக இருப்பதுபோல் காட்டிக்கொள்ள, மிகத் தாமதமாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் ஏ.வா வேலு உள்ளிட்டோர் வந்து சென்றுள்ளனர். ஆனால், இது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கு பதிலாக அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இவர்கள் தாக்குதல் நடத்தியவர்களுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து செயல்பட்டுள்ளனர்.
 • ஏன் இந்த தாக்குதல் 
 • வன்னியர்அருந்ததியர் இடையே சாதி மறுப்பு திருமணங்கள், காதல் உள்ளிட்ட சம்பவமும் எதுவும் இதுவரை நடக்கவில்லை. தாக்குதல் அவை தொடர் பானது அல்ல. பெரும்பாலான தலித் மக்கள் கட்டுமானப் பணிகளுக்காக சென்னை, பெங்களூர், திருப்பூர், வேலூர் என இடம்பெயர்ந்து சென்று பணம் சம்பாதித்து குடிசை வீடுகளை சிமென்ட் வீடுகளாக மாற்றி இருப்பதையும், இளைஞர்கள் மோட்டர் சைக்கிள்கள் வைத்திருப் பதையும் சாதியாதிக்க சக்திகளால் ஏற்க முடியவில்லை. மேலும், பொது ஊராட்சியாக இருந்த வீரளூர் ஊராட்சி தனித் தொகுதியாக மாற்றப்பட்டதால் 2006 முதல் 2016 வரை ஊராட்சித் தலைவர்களாக அருந்ததி யர்கள் இருந்துள்ளனர். அவர்கள் தலைவர் களாக தலை நிமிர்ந்து செயற்பட்டதை பெரும்பான்மையான எம்பிசி யினரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தங்கள் கட்டுப்பாட்டை மீறி பொதுப்பாதையில் தலித்துகள் பிணம் எடுத்துச்செல்ல உத்தரவு பெற்றதை ஆதிக்க சக்திகளால் சகித்துக் கொள்ளவும் முடியவில்லை. வீரளூர், அருகிலுள்ள மேல் சோழங்குப்பம்  ஊராட்சிகளில் மட்டும் சுமார் 600 ஏக்கர் வரை பஞ்சமி நிலங்கள் இருந்துள்ளது. இவை அனைத்தும் எம்பிசி வகுப்பினருக்கு சென்றுள்ளன. அவர்களில் 100 ஏக்கருக்கு மேல் நிலங்கள் குவித்துள்ள ஒன்றிரண்டு சாதிவெறி பேர்வழிகளும் இந்த கொலைவெறித் தாக்குதலுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்துள்ளனர். பஞ்சமி நிலங்களை வீரளூர் முன்னாள் ஊராட்சி அருந்தியர் தலைவர் முத்துராமன் குடும்பம் உள்ளிட்ட பலரும் இழந்து கூலிக்காரர்கள் ஆகி விட்டனர்.
 • தாக்குதலுக்கு பிறகு 
 • பாதிக்கப்பட்ட அருந்ததியர்கள் 26 பேர் மீது காவல்துறை வழக்குத் தொடுத்த மோசடித்தனம் அரங்கேறியது. (தேசிய எஸ்சி ஆணையம் வந்து பார்வையிட்டு புகார் செய்த பிறகு வழக்கு கைவிடப் படுவதாக சொல்லப்பட்டுள்ளது.) மாவட்ட ஆட்சியர் மூன்று நாள் கழித்து தான் பார்வையிட வந்தார். கடமை தவறிய காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர், சாதீய சக்திகளுக்கு ஆதரவாக துணைபோன தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பதவிப் பொறுப்பு களில் நீடிக்கின்றனர். 236 பேர் மீது புகார் அளித்தும் 200 க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப் படவில்லை. மாவட்ட அமைச்சர் இப்பகுதிக்கு வந்து சென்ற பிறகு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் சாதிசங்கத்தின் பனியன் அணிந்து வந்து அருந்ததியர் தெருக்களில் வலம் வருகின்றனர். முன்னாள் ஊராட்சி தலைவர் முத்துராமனுக்கு வெளிப்படையாக கொலை மிரட்டல் உள்ளதுகடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை தலித்துகள் திமுகவுக்கு வாக்களித் துள்ளனர். ஆனால், திமுக கட்சித் தலைமையின் செயல்பாடு தலித்துகளுக்கு விரோதமாக, சாதீய சக்திகளுக்கு ஆதரவாக இருப்பது அம்பலமாகி யுள்ளது.
 • வன்கொடுமை இழப்பீடும் முழுமையாக தரப்படவில்லை 
 • வீரளூரில் 350 க்கும் மேற்பட்ட  அருந்ததியர் குடும்பங்கள் உள்ளன. சிறிதளவு பஞ்சமி நிலங்களை தக்கவைத்துக் கொண்ட சுமார் 20 தலித் அருந்ததியர் விவசாயிகளைத் தவிர, அனைவரும் (ஆண்களில் வீட்டுக்கு இருவர், மூவர் என) கட்டுமானப் பணிகள்  தொடர்பான கூலி வேலைகளுக்குச் செல்லும் தொழி லாளர்கள் ஆவர். 'வெளியூர் வேலைக்குச் சென்று விட்டால், மீண்டும் வீடுகள் மீது, பெண்கள் - குழந்தைகள் மீது தாக்குதல் நடக்கலாம்' என்ற அச்சம் காரணமாக, தாக்குதல் சம்பவம் நடந்த பிறகு கடந்த ஒருமாத காலமாக வெளியூர் வேலைக்கு யாரும் செல்லவில்லை. உள்ளூரில் விவசாயக் கூலி வேலைக்கு செல்லும் அருந்ததியர் பெண்களுக்கும் வேலை மறுக்கப் பட்டுள்ளது. ஆனால், இதுவரை தமிழ்நாடு அரசால் வன்கொடு மையால் பாதிக்கப்பட்ட 42 குடும்பங்களுக்கு மட்டுமே  தலா ரூ.50,000 இழப்பீடு தரப்பட்டது. வேலைக்கு செல்லமுடியாமல் 300 க்கும் மேற்பட்ட குடும்பங் களுக்கு உணவுதானியம் கூட வழங்கப் படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம் வழங்கும் நிவாரணத்தையும் மறுத்துள்ளனர். சேதமுற்ற வாகனங்களுக்கு, சொத்துக்களுக்கு  இழப்பீ டுகள் தரப்படவில்லை.
 • வீரளூர் அருந்ததியருக்கு நீதி வேண்டும்
 • முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் முத்துராமன் அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கிட வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட அனைத்துக் குற்றவாளிகள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். தவறிழைத்த அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி தண்டனை வழங்கிட வேண்டும். சட்டத்தின்படி கடமையாற்றத் தவறிய மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதீய சக்திகளுடன் கரங்கோர்த்துள்ள திமுகவினர் மீது ஆளுங் கட்சி உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு, தாக்குதலில் சேதமுற்ற வீடு, வாகனங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும். தேசிய ஊரக வேலைத்திட்டப் பணியை உடனடியாக துவக்கி பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு வேலை வழங்கிட வேண்டும். பாதிக்கப்பட்ட அருந்ததியர் மக்கள் சொந்தக்காலில் நிற்கும் வரை அரிசி, பருப்பு, எண்ணெய், பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்கிட வேண்டும். அருந்ததியர் சமூக மக்கள் தங்கள் சமூகத்துப் பிணங்களை பொதுப்பாதையில் எடுத்துச் செல்வதை நிரந்தரமாக்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தலித் மக்கள் இழந்த பஞ்சமி நிலங்களை மீட்டு அவர்களுக்கே வழங்கிட வேண்டும். 
 • தமிழ்நாடு அரசாங்கம் தன்னை சமூகநீதி அரசாங்கம் என அறிவித்துக்கொண்டு செயல்படுவது சாலச் சிறந்தது. வீரளுர் மக்கள் சமூகநீதி பெறும் வகையில் தமிழ்நாடு அரசாங்கம் மேற்கூறியவற்றை செய்து கொடுக்கவேண்டும். தாழ்த்தப்பட்டோர், விளிம்புநிலைமக்கள் அச்சமற்று பாதுகாப்புடன் தேவையான வாழ்வாதாரத்துடனும் வாழ்வதே சமூக நீதியின் ஆதாரம். தமிழ்நாடு முழுவதும் இத்தகைய நிலைமையை விரைந்து உருவாக்கித் தரவேண்டு மென்றும் தமிழ்நாடு அரசாங்கத்தை வலியுறுத்து கிறோம்.

இகக(மாலெ)

தமிழ்நாடு மாநிலக்குழு