சமீபத்திய 5 மாநில தேர்தல்களை அடியொற்றி எரிபொருட்களின் விலை அடுத்தடுத்து இதுவரை 12 முறை உயர்த்தப் பட்டிருக்கிறது. இது ஒரு, இழிவான, அரசியல் சித்து விளையாட்டாகும்: அதாவது ஒவ்வொரு பெரிய தேர்தல் சுற்றுக்கும் முந்தைய மாதங்களில் விலையை உயர்த்தாமல் வைத்திருந்து தேர்தல் முடிந்த கையோடு கிடுகிடுவென விலையை உயர்த்தி விடுவது எனும்சூழ்ச்சிகரமானஅரசியல்  சித்துவிளையாட்டாகும். அண்மையில் உயர்த்தப் பட்ட விலையினால் பெட்ரோலின் விலை லிட்டர் ஒன்றுக்கு சராசரியாக ரூ.107க்கு வந்துவிட்டது. டீசலின் விலையும் சராசரியாக லிட்டருக்கு ரூ.99 ஆக உயர்ந்துவிட்டது. சமையல் எரிவாயுவும் உருளை ஒன்றுக்கு ரூ.926 ஆகிவிட்டது. சில்லரை பணவீக்க விகிதத்தை அளக்கும் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் பிப்ரவரியிலேயே 6.07% ஆக இருந்துள்ளது.   பெட்ரோலியம், இயற்கைவாயு துறை ஒன்றிய அமைச்சர் ஹர்தீப்சிங்புரி, உலகிலுள்ள மற்ற நாடுகளின் விலை உயர்வைவிட இந்தியாவி லுள்ள விலை உயர்வு ஒன்றும் அதிகமில்லை என்று கூறி விலை உயர்வை நியாயப்படுத்த முற்படுகிறார்இவ்வாறு மோசமான சாக்குப் போக்கு கூறுவதே ஒரு ஏமாற்று வேலையாகும். இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை, நமக்குப் பக்கத்திலுள்ள அனைத்து நாடுகளை விடவும் மிக அதிகமாகும். இன்னும் சொல்லப்போனால், அதிக தனி நபர் வருமானமுள்ள அமெரிக்கா போன்ற நாடுகளை விடவும் (நம் நாட்டில் விலை) அதிகமாகும்.   விலை உயர்வுக்கு ரெட்டிப்புக் காரணம் உள்ளது. முதலாவது காரணம், 'விலைக் கட்டுப்பாடு நீக்க' நடவடிக்கை. இதனால், பெட்ரோலிய பொருட்களின் விநியோகிப்பாளர்கள் தங்களுக் கான சொந்த விலையை நிர்ணயம் செய்து கொள்ள இது வழி செய்கிறது. இதற்கு பாஜகவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பெரியளவில் தேர்தல் நடக்கும் காலங்களில் விநியோகிப்பாளர்கள் குறிப்பிடத்தக்க அளவில் விலை உயர்வை உயர்த்தாமல் நிறுத்தி வைக்கின்றனர். இரண்டாவது காரணம், பெட்ரோலியம், டீசல் மீது குறிப்பிடத்தக்க அளவுக்கு கலால் வரி விதிப்பு. கார்ப்பரேட்டு களுக்கும் இந்தியாவின் பணக்காரபிரிவினருக்கும்  கணிசமான வரி வெட்டு அளிப்பதன் மூலம் பாஜக அரசாங்கத்தின் வரி அடித்தளத்தை அரிக்கச் செய்துவிட்டது; எனவே, அளவுக்கு அதிகமாக எரிபொருள் மீதான கலால் வரி மூலம் வரும் வருவாயை (அரசாங்கம்)நம்பியிருக்கிறதுஇந்த பின்புலத்தில், எரிபொருள் விலைக்கட்டுப்பாட்டை நீக்குவதன் பொருள், சாமான்ய குடிமக்கள் எரிபொருள் மீதான செலவுகள் மீதான கட்டுப்பாட்டை இழந்து போகிறார்கள் என்பதாகும். எப்படியான போதும் விலைகள், பின்கதவு (ரகசிய) பேரங்கள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இப்படியான நடவடிக்கை, “தேர்தல் சுயேச்சாதிகாரம்என்று அழைக்கப்படுவதற்கு சேவை செய்கிறது. சுதந்திரச் சந்தை என்பது பாஜகவின் தேர்தல் அவசரங்களுக்கு அடிமையாகி விடுகிறது. இந்திய அரசாங்கம், ருஷ்ய அரசாங்கத்திடமிருந்து பேரல் ஒன்றுக்கு 35 டாலர் விலையில் எரிபொருள் வாங்க ஒப்பந்தம் போட்டிருப்பது கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயமாகும். இது (இந்த ஒப்பந்தம்), இப்போதுள்ள சந்தை விலையைவிட 65% குறைவானதாகும். உக்ரைன் மீது ருஷ்யா போர்க்குற்றங்கள் புரிந்துகொண்டிருக்கும் சமயத்தில், ருஷ்யாவிடம் இப்படிப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை போட்டிருப்பது எந்தவகையில் அறநெறியானது என்பது ஒருபுறமிருக்க, இந்த விலைக் குறைப்பு சாமான்ய இந்தியர்களுக்கு சென்றுசேருமா? அப்படி சென்று சேராதென்றால், எண்ணெய் கம்பெனிகள் மிகப்பெருமளவில் லாபம் குவித்துக் கொள்வதற்கென்றே இந்திய அரசாங்கம், நமது சொந்த ராஜதந்திர, அரசியல் மூலதனத்தை வீணடித்திருப்பது மட்டுமே நடந்திருக்கிறதென்பதை புரிந்து கொள்ளலாம்.   தற்போது தாறுமாறாக எகிறிக்கொண்டிருக்கும் எரிபொருள் பணவீக்கம், அளிப்புச் சங்கிலி யிலுள்ள பொருள்களின் விலையை உயர்த்தி விடும், அதன்காரணமாக (மக்களது) வாழ்க்கைச் செலவையும் அதிகரிக்கச்செய்துவிடும். இது, இரண்டாண்டுகால பெருந்தொற்று, பொது முடக்கத்துக்குப் பிறகு அதிகரித்த வேலை இல்லா திண்டாட்டத்தாலும் வறுமையாலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களது வாங்கும் சக்தியை மேலும் கட்டுப்படுத்திவிடும். இந்த சமயத்தில் அரசாங்கம் தலையிட்டு,   விலைக் கட்டுப்பாடு நீக்க பேரழிவுக் கொள்கையை திரும்பப் பெற்று எரிபொருள் விலையை நேரடியாக கண்காணிப்பது மிக அவசியமாகும்வருவாய்க்காக அரசாங்கம், பெட்ரோல், டீசல் மீதான கலால்வரியை நம்பியிருப்பது எரிபொருள் விலை உயர்வுக்கு வழிவகுக்கிறது. இதன் பொருள், இந்தியாவின் ஏழைகளின் சட்டைப் பைகளிலிருந்து வருவாய் எடுத்துக் கொள்ளப் படுகிறது என்பதுதான். இது முடிவுக்கு வந்தாக வேண்டும். பணக்காரர் களிடமிருந்து முழுவது மாக அளவுக்கு வரி வசூல்செய்து அரசாங்கத்தின் வருவாய் அடித்தளத்தை விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும்அதிகரித்து வரும் வேலை இல்லாத் திண்டாட்ட விகிதமும் வேலைப் பாதுகாப் பின்மையும் சேர்ந்து உண்மை ஊதியத்தை சுருங்கச் செய்து விடுகிறது, எரிபொருள் விலை உயர்வோ மொத்த நாட்டையும் பொருளாதார மந்தத்தில் தள்ளிவிடுவதாக அச்சுறுத்துகிறது. இகக(மாலெ) நடத்தும் ஏப்ரல் 7-13 பரப்புரை இயக்கம், அரசாங்கம் விலைக்கட்டுப்பாடுநீக்க கேலிக் கூத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டு மென்றும் எரிபொருள்மீதான செங்குத்தான கலால் வரியை உடனடியாக குறைப்பது உள்ளிட்ட எரிபொருள் விலையின் தாறுமாறான உயர்வைக் கட்டுப்படுத்துவது, பணக்காரர்களிடமிருந்து வரிகளை முழுவதுமாக வசூலிப்பது உள்ளிட்ட செயல்மிக்க நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டுமென்றும் கோருகிறது

எம்எல் அப்டேட் (5-11 ஏப்ரல், 2022)

தலையங்கம்

தமிழாக்கம் - பாசு