மார்ச் 28 - 29, 2022ல் நடைபெற்ற அகில இந்திய வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்த இந்திய தொழிலாளர் வர்க்கத்திற்கு 'ஒர்க்கர்ஸ் ரெசிஸ்டன்ஸ்' ஏடும் ஏஐசிசிடியூ-வும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கம் மட்டுமல்ல, பல்வேறு பிஜேபி அல்லாத கட்சிகள் ஆளும் மாநில அரசாங்கங்களும் கூட மேற்கொண்ட எண்ணற்ற அச்சுறுத்தல்கள், அனைத்துவிதமான சூழ்ச்சிகள், மிரட்டல்கள், கைதுகள், அத்தியா வசியப் பணிகள் பராமரிப்புச் சட்டம் உள்ளிட்ட கருப்புச்சட்டங்களை ஏவுவது ஆகிய அனைத் தையும் மீறி இந்த வேலைநிறுத்தம் வெற்றி கரமாக்கப்பட்டிருக்கிறது.

இந்த வேலைநிறுத்தம் மாபெரும் முக்கியத் துவத்தை பெற்றிருக்கிறது. ஏனென்றால், தொழிலாளர்களின் இந்த வேலைநிறுத்தத்ததில் விவசாயிகள் தமது முழுவேகத்துடன் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆதரித்து இருக்கிறார்கள். நாட்டின் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் மிக முக்கியமான இலட்சியங்களில் ஒன்று "தொழிலாளர்கள் -&- விவசாயிகள் ஒற்றுமை" ஆகும். இப்படியொரு விவசாயிகள் & தொழிலா ளர்களின் ஒற்றுமை, அது ஆரம்ப நிலையில்தான் உள்ளது என்றாலும் கூட, இந்த வேலை நிறுத்தத்தில் நிதர்ஷனமாகி இருக்கிறது என்பதை நாம் பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம்.

இரண்டாவதாக, பல்வேறு துறைகளின் அமைப்புசாராத் தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றதனாலும் இந்த வேலைநிறுத்தம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு குறிப்பாக, சுகாதாரத் தொழிலாளர்கள் (கிஷிபிகி), அங்கன்வாடி, மதிய உணவுத் தொழிலாளர்கள் போன்ற திட்டப்பணியாளர்களின் பங்கேற்பு மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த எண்ணற்ற ஒப்பந்தத் தொழிலாளர்கள் பங்கேற்பு உற்சாகம் தருவதாகவும், உத்வேகம் அளிப்பதாகவும் இருக்கிறது.

இந்த வேலைநிறுத்தம், பெருங்குழும (கார்ப்பரேட்) முதலாளித்துவ வர்க்கத்திற்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கும் இடையேயான முரண்பாட்டை திட்டவட்டமாக முன்கொண்டு வந்திருக்கிறது என்பது மூன்றாவது செய்தியும் மிக முக்கியமான செய்தியும் ஆகும். இந்த வேலைநிறுத்தத்தில் பெருங்குழும வர்க்கம் தன்னை ஒருவர்க்கமாக, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ள முயற்சித்து இருக்கிறது. குறிப்பாக,பிஜேபி ஆளும் மாநிலங்களில், பல்வேறு தொழிலதிபர் சங்கங்கள், இந்த வேலைநிறுத்தத்தை மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக்கவேண்டுமென்ற தொழிலாளர்களின் எண்ணத்திற்கு எதிராக, வேலைநிறுத்தத்தைத் முறியடிப்போம் என அறிக்கை வெளியிட்டனர். கர்நாடக பிஜேபி அரசாங்கம், தொழிற்சாலைகளை இயக்க காவல் துறையின் பாதுகாப்பு வழங்கப்படுமென்று வெளிப்படையாக அறிவித்தது. பல தொழி லதிபர் சங்கங்கள், இந்த வேலை நிறுத்தத்திற்கு எதிராக தொழிற்சாலைகளை இயக்குவோம் என ஒருதலைப்பட்சமாக அறிவித்தன. பொதுவாக, வேலைநிறுத்தம் செய்யும் நாட்களில், சங்கங்க ளல்லாத தொழிற் சாலைகளில் வேலைநிறுத்தம் செய்திட, அந்த ஆலைத்தொழிலாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கும் விதமாக, தொழிற் சாலைகள் இருக்கும் பகுதிகளில் தொழிலாளர்கள் பேரணியாகச் செல்வார்கள். ஆனால், சங்கங்கள் இருக்கும் தொழிற்சாலை நிர்வாகங்கள், தொழிற் சாலைகளை இயக்க முடிவு செய்யும்போது, தொழிலாளர்கள் தொழிற்சாலை பகுதிகள் முழுவதும் வேலைநிறுத்தத்தை உறுதிசெய்வ தோடு கூடவே, தங்களுடைய தொழிற்சாலை களிலும் வேலைநிறுத்தப்படுவதை உறுதிசெய்வது தொழிலாளர்களின் பொறுப்பாகிவிடுகிறது. பெருங்குழும வர்க்கத்தினரின் சவாலை தொழிலாளர் வர்க்கம் திட்டவட்டமாகவும் துணிச்சலுடனும் எதிர்கொண்டது என்பதை இந்த வேலைநிறுத்த வெற்றி தெட்டத் தெளிவாகக் காட்டியிருக்கிறது.

கேரள அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதைத் தடுக்கும் விதமாக கேரள உயர்நீதிமன்றம் தலையீடு செய்தது. வேலைநிறுத்தம் செய்யும் போக்கு வரத்து ஊழியர்களுக்கு எதிராக ஹரியானா போன்ற மாநிலங்கள் அத்தியாவசியப் பணிகள் பராமரிப்புச் சட்டத்தைப் பயன்படுத்தின. மின்வாரிய ஊழியர்களுக்கு எதிராக அத்தியா வசியப் பணிகள் பராமரிப்புச் சட்டத்தை மஹாராஷ்டிரா கொண்டுவந்தது.

அத்தியாவசியப் பணிகள் பராமரிப்புச் சட்டம் போன்ற கறுப்புச்சட்டங்கள், கைதுகள், மாநில அரசு நிர்வாகத்தின் அடாவடித்தனம் ஆகியவற்றை மீறியே தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றி கரமானதாக ஆக்கியிருக்கிறார்கள். தொழிலாளர் வர்க்கத்தின் இப்படியான போர்க்குணமிக்க நடவடிக்கைக்கு 'ஒர்க்கர்ஸ் ரெசிஸ்டன்ஸ்' ஏடும் ஏஐசிசிடியூவும் தலைவணங்குகிறது.

பிஜேபி அல்லாத மாநில அரசாங்கங்கள் கூட மு..ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடும், மம்தா தலைமையிலான மேற்குவங்கமும் அரசு மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்வதைத் தடுக்கும் விதத்தில் ஆணை பிறப்பித்தன. காங்கிரஸ் அரசாங்கங்களும் அதே பாதையைப் பின்பற்றின. மம்தா பானர்ஜி, தனது பெருங்குழும வர்க்க நலன்களுக்கு உண்மையாக இருக்கும் விதத்தில், உழைக்கும் மக்களின் எந்தவொரு பந்த் அல்லது வேலைநிறுத்த நடவடிக்கைக்கும் எதிராகவே எப்போதும் இருக்கிறார். தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு வழங்கிய போதும், அதன் தொழிற்சங்கப் பிரிவான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த அமைப்புகளில் ஒன்றாக இருந்தபோதும், தமிழ்நாடு மாநில அரசாங்கம், தனது பெருங்குழும வர்க்கநலனை வெளிப்படுத்தும் விதத்தில், வேலைநிறுத்தத்தை தீவிரமாக எதிர்த்தது. தங்களுடைய அரசியல் வண்ணமும் கருத்தியலும் என்னவாக இருந்த போதிலும், பொருளாதார விசயத்தில் ஒருமித்த கருத்து என்பது இந்த நாட்டிலுள்ள அனைத்து வகை அரசியல் கட்சிகள் மத்தியிலும் எப்போதுமே நிலவியிருக்கிறது. அதேபோல, பெருங் குழும வர்க்க நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவ திலும் அனைத்து வகைக்கட்சிகள் மத்தியிலும்- பிஜேபியிலிருந்து திமுக வரையிலும் -ஒரு போட்டா போட்டிநிலவுகிறது. இந்த போட்டா போட்டி பொருளாதாரக் கொள்கைகளில் மட்டுமே அல்ல. தொழிலாளர் விரோத, மக்கள் விரோத தொழிலாளர் சட்டத் தொகுப்பு என்ற விசயத்திலும் கூட, அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்து கொண்டுள்ளனர். "புதிய இந்தியாவுக்கான புதிய சட்டத்தொகுப்புகள்" என பிஜேபி அதனை அழைக்கிறது. ஆனாலும், உண்மையில், அவை "பெருங்குழும இந்தியாவுக் கான பெருங்குழும சட்டத் தொகுப்புகள்" தான். அவை நவீன அடிமைத் தனத்தை உருவாக்கும் சட்டங்களே தவிர வேறல்ல என தொழிற் சங்கங்கள் சொல்கின்றன. ஒன்றிய சட்டங்களுக்கு பொருத்தமான விதிகளைமாநில அரசாங்கங்கள் உருவாக்காமல் இந்தச்சட்டத் தொகுப்புகளை அமல்படுத்த முடியாது. இந்தத் தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை அமல்படுத்த பிஜேபி ஆளும் மாநிலங்கள் ஏற்கனவே விதிகளை உருவாக்கிவிட்டன. பிஜேபி அல்லாத கட்சிக ளால் ஆளப்படும் மாநிலங்களும் இந்தச் சட்டங்கள் தொடர்பான விதிகளை உருவாக்கத் துவங்கிவிட்டன. தொழிலாளர்களுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தாத வண்ணம் விதிகளை உருவாக்கப் போவதாக அவர்கள் சொல்கின்றனர். இப்படியான வாதம் முழுக்க முழுக்க தர்க்க நியாயங்கள் ஏதுமற்றதாகவே தெரிகிறது. மேலும், தொழிலாளர்களை ஏமாற்றுவதையே நோக்க மாகக் கொண்டுள்ளது. ஏனென்றால், ஒன்றியத்தி லுள்ள மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கம் இயற்றியுள்ளசட்டத்தொகுப்புகளுக்கு எதிராக, எந்த மாநில அரசாங்கமும்விதிகளை உருவாக்க முடியாது. தொழிலாளர் வர்க்கத்தை நவீன அடிமைகளாக்கவே இந்தச் சட்டத் தொகுப்புகள் எழுதப்பட்டுள்ளன எனத் தொழிற் சங்கங்கள் கூறும்போது, மாநில விதிகள் மூலமாக மட்டும் அதை மாற்றிவிட முடியாது. ஆனால், எதிர்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களும் மாநில விதிகளை உருவாக்க தற்போது மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருகின்றன. கேரளாவிலுள்ளஇடதுசாரிகள் தலைமையிலான மாநில அரசாங்கமும்கூட ஒரு புறம் ஒன்றியச் சட்டத்தை அமுல்படுத்திட தேவையான மாநில விதிகளை உருவாக்குவ திலும், மறுபுறம், "கே&-ரயில், ஒரு சில்வர்லைன் திட்டம்" என்ற, பெருங்குழும ஆதரவு கேரள பாணி புல்லட் ரயில் திட்டத்தை அமல்படுத்துவ திலும் மும்முரமாகஇருக்கிறது. தொழிலாளர் அரங்கிலும்சரி, ரயில் திட்டத்திலும்சரி, கேரள இடதுசாரி அரசாங்கமும்கூடபெருங்குழும ஆதரவு, தாராளவாத ஆதரவு கொள்கை களையேபின்பற்றிவருகின்றது. திமுக அரசாங்கம், ஒரு டிரில்லியன் டாலர் (பத்தாயிரம் கோடி டாலர்) பொருளாதாரம் எனச் சொல்லும்போது, "தொழில் மயமாக்கல்" என்ற பெயரில் மம்தாவும் இதனையே செய்கிறார். எனவே, தொழிலாளர் வர்க்கத்திற்கும் உழைக்கும் வெகுமக்களுக்கும் எதிரான, பெருங்குழும வர்க்க ஆதரவு நிலை மேற்கொள்வதில் ஒருமித்த கருத்து  (நீஷீக்ஷீஜீஷீக்ஷீணீtமீ நீஷீஸீsமீஸீsus) என்பது,பிஜேபி, காங்கிரஸ், பிராந்தியக் கட்சிகள் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் மத்தியிலும் நிலவுகிறது என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

இப்படிப்பட்ட பின்னணியில், தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளுக்கு எதிரான, தொழிலாளர் வர்க்கத்தின் மீதான இதர தாக்குதல் களுக்கு எதிரான போராட்டத்தைநாம் மறுவரை யறை செய்திட வேண்டிய, அதற்கோர் புதிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. சூழலின் தேவைக்கேற்பதொழிலாளர் வர்க்கம் எழுந்திடவேண்டும். பெருங்குழும முதலாளித்துவ வர்க்கத்திற்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கும் இடையேயான வர்க்கப் போராட்டத்தில், தொழிலாளர் வர்க்கம் தன்னுடைய மேலாதிக்கத்தை நிறுவிடவேண்டும். தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிராக மட்டுமல்ல, மாநில அரசாங்கங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிற மாநில விதிகளுக்கு எதிராகவும் இந்த வர்க்கப் போராட்டமானது, அரசியல் போராட்டம் என்ற பரிமாணத்தை எட்ட வேண்டிய தேவை இருக்கிறது.

தனியார்மயம், தேசிய பணமாக்கல் திட்டம்என்ற பெயரில் பெருங்குழுமங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்த நாடு விற்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது, நாம் 2022 ஆம் ஆண்டின் மே நாளை நெருங்கிக் கொண்டி ருக்கிறோம். தனியார்மயம் என்கிற, மோடி அரசின் உண்மையான நிகழ்ச்சி நிரல் முன்னுக்கு வந்துகொண்டிருக்கிறது. தனியார் மயத்தின் விளைவாகவும் அதைத்தொடர்ந்தும் பெரும் எண்ணிக்கையிலான வேலையிழப்புகளையும், அதிகரித்துக் கொண்டேயிருக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் காண்கிறோம். இவை அனைத்தும் தன்னெழுச்சியான போராட்டங் களையும் கலகங்களையும் உருவாக்கும் ஆற்றல் கொண்டவை. எனவே, தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், அதோடு இணைந்து வரும் அத்தியாவசியப் பணிகள் பராமரிப்புச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கருப்புச் சட்டங்கள் ஆகியன, ஒருபுறம், தனியார் மயத்தையும் ஒப்பந்தத் தொழிலாளர் முறையையும் தீவிரப்படுத்து வதையும் மறுபுறம், அதன் விளைவாக எழத்தக்க கலகங்களை, தன்னெழுச்சியான போராட்டங் களை கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

2022 மே நாளில், தனியார்மயத்தை, வேலையில்லாத் திண்டாட்டத்தை, தொழிலாளர் விரோத சட்டத்தொகுப்புகளை, கருப்புச் சட்டங்களை எதிர்த்துப் போராடதொழிலாளர் வர்க்கம் உறுதி ஏற்கவேண்டும்.

2022 மே நாளில் தொழிலாளர் வர்க்கம் பெரும் எண்ணிக்கையில் வீதிகளில் அணி வகுத்திட வேண்டும். வரலாற்றுச் சிறப்புமிக்க சிகாகோ போராட்டத்தையும் அதன் தியாகி களையும் பெருமையுடன் நினைவு கூர்வதற்காக மட்டுமல்ல, இன்றைய காலகட்டத்தில் அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க போராட் டங்களை நம்முடைய தாய்நாட்டு மண்ணில் மீண்டும் நிகழ்த்திக் காட்டிடுவதற்காகவும் அணிவகுத்திட வேண்டும்.

தனியார்மயத்திற்கு எதிரான, ஒப்பந்தத் தொழிலாளர் முறைக்கு எதிரான, வேலை யில்லாத் திண்டாட்டத்திற்கு எதிரான, தொழிலாளர் சட்டத்தொகுப்புகள், கருப்புச் சட்டங்கள் ஆகியவற்றுக்குஎதிரான, தற்போதைய போராட்ட இயக்கத்தை, தொழிலாளர் வர்க்கம் வலுவாக முன்னெடுத்துச் சென்றிட வேண்டுமென நாம் அறைகூவல் விடுக்கிறோம்.

U தொழிலாளர் வர்க்கத்தின் ஒன்றுபட்ட, போர்க்குணமிக்கபோராட்டங்கள் நீடுழி வாழ்க!

U தொழிலாளர்கள் - விவசாயிகள் ஒற்றுமை நீடுழி வாழ்க!

U புரட்சி நீடுழி வாழ்க!

U மே நாள் நீடுழி வாழ்க!

ஒர்க்கர்ஸ் ரெசிஸ்ட்டென்ஸ்’ 2022 ஏப்ரல் - தமிழாக்கம் - செந்தில்