ராஜபக்சேவின் ஆட்சிக்கும் அதனுடைய மோசமான ஆட்சிமுறைக்கும் எதிராக 2022 மார்ச்சில் இருந்து இலங்கை மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அரசின் தவறான பொருளாதார நிர்வாகத்தின் காரணமாக  உணவு மற்றும் எண்ணை விலைகள் கடுமையாக உயர்ந்தன. எண்ணை தட்டுப்பாடு, முடிவில்லாத மின்சாரத் தட்டுபாடு, எண்ணை வாங்க வரிசையில் நின்று வயதானவர்கள் இறப்பு எல்லாம் மக்கள் போராட்டத்தைப் பற்றி எரியச் செய்தது.

அதிபராகவும் பிரதம மந்திரியாகவும் முறையே கோத்தபயவும் மகிந்தவும் இருந்து கொண்டு அந்த சிறிய தீவு நாட்டை தற்போது ஆண்டு கொண்டிருக்கும் ராஜபச்சே சகோதரர்கள் பதவி விலக வேண்டும் என்கிற குரலாக வெகுவிரைவாக அந்தப் போராட்டங்கள் முன்னெழுந்து வந்தன. அரசாங்கத்தின் வெளிப்படையான குடும்ப ஆட்சிமுறையும் மக்களின் கோபத்தை அதிகரித்தது. இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில், சுய நிர்ணய உரிமைக்காகப் போராடிய தமிழ் மக்களை கொன்றொழித்த மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே வேளை அவரது சகோதரரும் அதிபருமான கோத்தபய போராட்டத்தை ஒடுக்க போராட்டக் காரர்களைக் கண்டால் சுட்டுத்தள்ள உத்தர விட்டுள்ளார்.

தமிழ்ப் போராளிகளை வென்றபலமான தலைவர்கள்என்கிற அடையாளத்தைக் கொண்டுதான் ராஜபக்சே சகோதரர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். தமிழர்கள் மீதான இன வெறுப்பு,  ‘இஸ்லாமிய அச்சஅரசியலாக (ஹலாலுக்கும் ஹிஜாப்பிற்கும் தடைகள் என இந்தியாவில் தற்போது பாஜக&ஆர்எஸ்எஸ் செய்து வருவது போல்) வெறுப்புணர்ச்சியை விசிறி விட்ட புத்தபிச்சுக்களுக்கு ஆதரவு என சிறுபான்மை இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இன மற்றும் மத பிரிவினைகளைக் கடந்து எழுந்து வந்துள்ள ஒன்றுபட்ட இலங்கை மக்களின் இந்தப் போராட்டம் இந்தியர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இன வெறுப்பு அரசியல்கள் மூலம் அரியணை ஏறிய ராஜபக்சே ஆட்சியின் அவலங்களை இலங்கை மக்கள் இப்போது காண்கிறார்கள்.

இந்தியாவில் மோடி உருவாக்கிய அவல ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, கடந்த ஐம்பது ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம், அதோடு கூடவே மோடி மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் தொடரும் வெறுப்புப் பேச்சு, வெறுப்பு அரசியல் கொள்கைகள் எல்லாம் இலங்கை நிலைமையை நினைவூட்டுகிறது. உத்தரப்பிரதேசத்திலும் பீகாரிலும் சுற்றிச் சுழலும் விவசாயிகள் போராட்டங்கள், வேலையில்லா இளைஞர்கள் போராட்டங்கள், பாஜகவின் இஸ்லாமியர் எதிர்ப்பு, கிறிஸ்தவர் எதிர்ப்பு வன்முறைகள் மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடியாது என்பதற்கான அடையாளங்கள் ஆகும்.

இந்தியாவில் சங் கும்பல்கள் சிறுபான்மை இஸ்லாமியர்கள் இன அழிப்பு செய்ய வேண்டும் என வெறுப்பை விதைக்கிறார்கள்இஸ்லாமியர் களும் கிறிஸ்தவர்களும் இந்து மதவெறி அரசால் நடத்தப்படும் வன்முறையை தினமும் எதிர் கொள்கிறார்கள். இலங்கையின் உள் நாட்டு போரானது தமிழர்களை இன அழிப்பு செய்ததில் போய் முடிந்ததை இலங்கை கண்டது. இலங்கை ஆட்சியாளர்கள் இந்த இன அழிப்பின் மூலம் மனித நேயத்திற்கு எதிரான தங்கள் குற்றங்களில் இருந்து தப்பித்தது மட்டு மின்றி புகழையும் அரசியல் அதிகாரத்தையும்  கைப்பற்ற அதையே மூலதனமாக்கிக் கொண்ட னர். மேலும் சிறுபான்மையினருக்கான புதிய வெறுப்பு அலைகளைத் தூண்டிவிட்டார்கள். இதனால் இலங்கையின் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள், சிறுபான்மை மக்கள் ஒருவருக்கொருவர் எதிராக குழி பறித்துக் கொண்டார்கள். தமிழ் பிரிவினைவாதத்திற்கு எதிரான போர் என்ற கூச்சலும் சிங்கள இனவெறி தேசியவாதமும் தற்போது செயலிழந்து போய், ஒடுக்கப்பட்டவர்களின் தோல்வியானது தவிர்க்க முடியாமல் அனைவருக்குமான தோல்வியின் எழுச்சியாக வெளிவந்துள்ளது. இது இலங்கை மக்களிடமிருந்து இந்தியர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மற்றொரு பாடம் ஆகும்.

கடுமையான அடக்குமுறையைச் சந்தித்தும் தீவிரமான உறுதிப்பாடுடன் உள்ள இலங்கை மக்களின் இந்த எழுச்சியானது இந்திய மக்களுக்கு உத்வேகம் அளித்துக் கொண்டிருக் கிறது. இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட் டும்! வெறுப்பு அரசியல், நவ தாராளவாதக் கொள்ளைகளை நிராகரிக்கவும் மக்கள் உரிமைகளை அறுதியிடவும் இந்தியா மற்றும் தெற்காசிய மக்களுக்கு உத்வேகமளிக்கும் எடுத்துக்காட்டாக விளங்கட்டும்!

 

எம்எல் அப்டேட்& தலையங்கம்