அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம்
நாடு தழுவிய பிரச்சார இயக்கம்
பாசிச பாஜக மோடி அரசுக்கு எதிராக அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் நடத்தும் நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக ஜூன் 27.6.22 உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்திற்கு தோழர் செல்வி தலைமை தாங்கினார். இதில் மோடி அரசின் அக்னி பாதை திட்டத்தைக் கைவிடக் கோரியும் எரிவாயு பெட்ரோல் டீசல் விலையை குறைக்கக் கோரியும் 100 நாள் வேலையை 200 நாள் வேலையாக ஆக்கிடக்கோரியும் கிராமப்புற நகர்ப்புற பெண்களுக்கு 100% கழிப்பிட வசதியை செய்து கொடுக்கக் கோரியும் பிரச்சாரத்தில் தோழர்கள் உரையாற்றினார்கள். இதில் இகக(மாலெ) கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம், கந்தசாமி, வீரன், கலாமணி மற்றும் பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, 27.6.2022 அன்று அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் தோழர் பிலோமினா தலைமையேற்று கண்டன உரையாற்றினார். தோழர் ஜீவரத்தினம் முன்னிலை வகித்தார். இகக(மாலெ) மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் வி.சக்திவேல், அகில இந்திய மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் மெஜோ வாழ்த்துரை வழங்கினர். இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் மு.இராமச்சந்திரன் கண்டன முழக்கங்கள் எழுப்பி உரையாற்றினார். இகக(மாலெ) மாவட்ட அமைப்புக்குழுத் தோழர்கள் சரவணன், ராஜு மற்றும் மதியழகன் கலந்துகொண்டனர். தோழர் கருப்பாத்தாள்   ஆகியோர்  நன்றி கூறினார்.