புரட்சிகர இளைஞர் கழகம் (RYA) - அகில இந்திய மாணவர் கழகம் (AISA) மாநில ஊழியர் கூட்டம்

புரட்சிகர இளைஞர் கழகம் - அகில இந்திய மாணவர் கழகம் ஆகியவற்றின் மாநில ஊழியர் கூட்டம் 26.6.2022 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஜி.தனவேல் தலைமை தாங்கினார். புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் எம்.சுந்தர்ராஜ், அகில இந்திய மாணவர் கழக மாநிலத் தலைவர் பாலமுதன், தோழர் ஜெயராமன், தோழர் உதுமான் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இகக(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் வீ.சங்கர், மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன், மத்தியக்குழு உறுப்பினர் தோழர் பாலசுந்தரம், மத்தியக்குழு உறுப்பினர் தோழர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் கருத்துரை வழங்கினர். புரட்சிகர இளைஞர் கழகத்தின் தமிழ்நாடு மாநிலத்தின் புதிய தலைவராக தோழர் எம்.சுந்தர்ராஜ் தேர்வு செய்யப்பட்டார். இறுதியில் தோழர் வீராசாமி நன்றி கூறினார்.
மத்திய, மாநில அரசுகளே!
கல்வியை காவிமயப்படுத்தி, ஏழை எளிய மாணவர்களின் கல்வியைப் பறிக்கும் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்!
*நீட் தேர்வை ரத்து செய்!
கார்ப்பரேட்-பிற்போக்கு, இந்தி, சமஸ்கிருதத் திணிப்புக் கொள்கையைக் கைவிடு!
இந்திய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்த்து இளைஞர்களின் நிரந்தர வேலைக் கனவையும் தேசப் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கும் ‘அக்னிபாத்’ திட்டத்தைக் கைவிடு!
* அப்ரண்டீஸ், ட்ரைனி, கேசுவல் உள்ளிட்ட ஒப்பந்தத் தொழிலாளர் முறையைக் கைவிடு!
ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பாதே! நிரந்தர அடிப்படையில் வேலை வழங்கு!
என்எல்சியில் பணிபுரியும் 13000 ஒப்பந்தத் தொழிலாளர்களை உடனடியாக நிரந்தரப்படுத்து! என்எல்சியில் நில விரிவாக்கம் என்ற பெயரில் விளை நிலங்களைக் கையகப்படுத்தும் திட்டத்தைக் கைவிடு!
சாதி ஆதிக்கப்படுகொலைகளுக்கு எதிராக கடுமையான சிறப்புச் சட்டம் இயற்று! நாடு முழுவதும் உள்ள அரசு காலிப்பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்பு! உள்ளிட்ட தீர்மானங்கள் ஊழியர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.