வெறுப்பு அரசியலுக்கு எதிராக... புல்டோசர் ஆட்சிக்கு எதிராக... நாடு காக்க... ஜனநாயகம் காக்க... வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

நாடு முழுவதும் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் அதிலும் குறிப்பாக சாமியார் யோகி ஆதித்யாநாத் ஆட்சியிலிருக்கும் உத்தரப்பிரதேசத்தில் அரசுக்கு எதிராக எதிர்ப்புக்குரல் கொடுக்கும் இஸ்லாமிய மக்களின் வீடுகளை சட்டவிரோதமாக இடித்துத் தள்ளுகிறது அரசு. கேட்டால் விதிகள் மீறி கட்டப்பட்டதாகச் சொல்கிறது. விதிகள் மீறி கட்டப்பட்ட எல்லா கட்டிடங்களும் இப்படி இடிக்கப்படுவதில்லை. சமீபத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவி அப்ரின் பாத்திமா, அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்தார் என்பதற்காக அவரின் வீட்டை புல்டோசர் கொண்டு இடித்துத் தரை மட்டம் ஆக்கி விட்டது யோகி அரசு. இது நாஜிக்கள் செய்த அச்சுறுத்தல் வேலை. ஒரு பக்கம் ஆட்சியில் உள்ள பாஜக சங்கிகளே வெறுப்பு அரசியலை தூண்டி விடுவதும் இன்னொரு பக்கம் அதற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களின் வீடுகளை இடித்துத் தரை மட்டமாக்கி நடுவீதியில் நிறுத்தும் மோ(ச)டி மந்திரத்தை கையில் எடுத்துள்ளது மோடி-ஷா-யோகி அரசு. ஆகையால் இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டம் காக்கப்பட வேண்டும், வெறுப்பு அரசியல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், சிறுபான்மையினர் மீது குறிப்பாக இஸ்லாமியர் மீது புல்டோசர் தாக்குதல் நடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி சமூகநீதிக்கான வழக்கறிஞர்கள் சார்பாக நெல்லை மாவட்ட நீதிமன்றத்தின் முன்பு 17.6.2022 அன்று வழக்கறிஞர் ஜி.ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மூத்த வழக்கறிஞர் ராமநாதன், நெல்லை வழக்கறிஞர் சங்க முன்னாள் செயலாளர் ப.செந்தில்குமார், வழக்கறிஞர்கள் கு.பழனி, அப்துல் நிஜாம், ஆரிப், தமிழ்செல்வி, சுஜிதா, சுசிலா, அப்துல் ஜப்பார், பிரபாகர், பேச்சிமுத்து, இந்துமதி, அக்மல் கசாலி உட்பட அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம்(AILAJ), அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் (AILU) அமைப்புகளின் வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.