நம்முடைய நாடு மிக நெருக்கடியான தருணத்தில் இருக்கிறது. இந்த நெருக்கடியான தருணத்தில் சிபிஐ(எம்எல்) கட்சி மிக முக்கியமான மாநாட்டை நடத்துகிறது. இந்திய சமூகத்தை பாதுகாப்பதற்காக சரியான தருணத்தில் இக்க(மாலெ) எடுத்துள்ள இந்த முயற்சியை மனதாரப் பாராட்டுகிறேன். சில தினங்களுக்கு முன்பாக சங்கிகள் 'தேசத்தின் தந்தை வீர சவார்க்கர்' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி ஒன்றை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்கள். யார் இந்த தேசத்தின் தந்தை? பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ஐ மாற்றுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன் வைத்திருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பாக அனுராக் தாக்கூர் உண்மை அறியும் குழுக்கள் சேற்றை வாரி இறைக்கும் விஷமத்தன பிரச்சாரங் களில் ஈடுபடுகின்றன என்று குற்றம் சாட்டினார். ஊடகங்கள் கார்ப்பரேட்டுகளின் கருவிகளாக மாறிவிட்டன. துர்தர்ஷன் மூலமாக, பிரச்சார் பாரதி மூலமாக இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை மக்களிடத்தில் மகாபாரதம் ராமா யணம் போல கொண்டு செல்லப் போகிறார் களாம். இவர்கள் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை மாற்றிச் சொல்வார்கள். காந்தி இந்திய நாட்டின் தந்தை என்று நாம் சொல்லிக் கொண்டிருக்க, அவர்கள் சுதந்திரப் போராட் டத்தின் தந்தை சாவர்கர் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். சர்பரிவார் கூட்டங்கள் சமூக வலைத்தளங்களைக் கூட அவை விட்டு வைக்கவில்லை. ஒரு பெண்மணியுடன் அமித்ஷா இருந்த புகைப்படத்தை வெளியிட்ட காரணத் திற்காக அதை வெளியிட்டவர் சிறைப்படுத்தப் பட்டு இருக்கிறார். இன்னும் மேலே சென்று யாருக்காவது ஜிகாதிகளிடமிருந்து மிரட்டல் வந்தால் எங்களுக்கு தெரிவியுங்கள் என்று அறிவிக்கிறார்கள். இவ்வளவு மோசமாக நாட்டின் நிலைமை இருக்கிறது. 2024 தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் பாஜக வெற்றி அடைந்தால் நாம் அமைதியை இழந்து விடுவோம். இந்த அரங்கில் இருக்கும் கற்றறிந்த மக்கள் அனைவரும் தங்களது 80% நேரத்தை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பாஜகவை வீழ்த்துவதற்குச் செலவிடுவோம் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் பல்வேறு அமைப்புகளாக இருந்தாலும் நம்மிடமுள்ள மற்ற மாறுபட்ட கருத்துக்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஒரே குறிக்கோளாக பாஜகவை வீழ்த்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.