இலங்கையில் மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல்

இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் ஜனநாயக சீரழிவுக்கு எதிராகப் போராடிய பல்கலைக் கழக மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவ செயற்பாட்டாளர்கள் மற்றும் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீதும் புதிதாகப் பதவி ஏற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கே அரசாங்கம் காவல்துறை மூலம் தாக் குத ல் தொடுத்துள்ளது. ஆகஸ்டு 25 அன்று ஆயிரக்கணக்கான மாணவர்களும் செயற்பாட்டாளர்களும் கொழும்பு தெருக்களில் திரண்டார்கள். அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்த போராட்டக்காரர்களை கைது செய்ததைக் கண்டித்தும் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரினார்கள். மேலும் இலங்கையின் மோசமான விண்ணை முட்டும் விலைவாசி உயர்வுக்கு 'ரணில்-ராஜபக்சே கூட்டே' காரணம் என முழக்கம் எழுப்பினார்கள். பேரணி தொடங்கியவுடன் காவல்துறை, அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியது. தண்ணீரைப் பீச்சியடித்தது.

அதன் பின்னர் மாணவர் தலைவர்கள் மூவரைக் கைது செய்தது காவல்துறை. பல்கலைக் கழகங்களுக்கிடையேயான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, புத்த பிட்சுக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கல்வேவா ஸ்ரீதம்மா தேரோ, கேலணிய பல்கலைக் கழக மாணவர் சங்கத்தின் உறுப்பினர் ஹசந்தா ஜவந்தா குணதிலகே ஆகிய மூவரையும் கைது செய்தார்கள். ஆகஸ்டு 22
அவர்கள் எல்லாரும் கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டார்கள். இந்தச் சட்டத்தைதான் ராஜபக்சே தன்னை எதிர்த்தவர்கள் மீது பயன்படுத்தினார். அதே சட்டத்தை இப்போது ரணில் பயன்படுத்துகிறார். இலங்கையைப் பொறுத்தவரை, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பயன்படுத்த பாதுக ாப்பு அமைச்சகத்தின் அ னு ம தி பெறவேண்டும்.

இப்போது அந்த அமைச்சகம் ரணிலின் கீழ் உள்ளது.

இலங்கையில் 1979ல் கொண்டு வரப்பட்ட இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது தொடர்ந்து வந்த எல்லா அரசுகளாலும் ஜனநாயகக் குரல்களை நெறிப்பதற்குப் பயன் படுத்தப்பட்டது. ஈழத் தமிழர் போராட்டத்தின் போது தமிழ் மக்களை ஒடுக்கவும் அவர்க ளுடைய நீதிக்கான குரலை நசுக்கவும் இச் சட்டம் பயன்படுத்தப்பட்டது.

இந்தச் சட்டமானது தெற்கு ஆப்பிரிக்காவின் நிறவெறி காலச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப் பட்டதாகும். சமீபத்திய மாதங்களில் அரசுக்கு எதிராக அமைதியான முறையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் பல்கலைக் கழகங்களுக் கிடையேயான மாணவர் கூட்ட மைப்பும் மற்ற மாணவர் அமைப்புகளும் முக்கிய பங்காற்றின. அதன் காரணமாகவே ராஜபக்சே பதவி விலக நேரிட்டது.
          
                - எம்எல் அப்டேட்