பீகார் நிகழ்வுகள்
பீகாரில் பாஜகவை ஆட்சியில் இருந்து வெளியேற்றியது ஒட்டுமொத்த நாட்டிற்கும் சாதகமான நிகழ்வாகும்: தோழர் திபங்கர்
ஆகஸ்ட் 13, 2022 அன்று பாட்னாவில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய சிபிஐஎம்எல் பொதுச் செயலாளர் திபங்கர், பீகாரில் பாஜகவை ஆட்சியில் இருந்து வெளியேற்றியது ஒட்டுமொத்த நாட்டிற்கும் சாதகமான நிகழ்வு என்று கூறினார்.பீகாரில் பாஜக அல்லாத ஆட்சி அமைப் பது, பாஜகவின் சதி மற்றும் பேரழிவு அரசியலில் இருந்து நாட்டை விடுதிசையில் ஒரு படியாகும், மேலும் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக போராடும் சக்திகளுக்கு புதிய நம்பிக்கையை உருவாக்குகிறது.சிபிஐ எம்எல், நிதிஷ் அமைச்சரவையில் சேராது, ஆனால் அரசாங்கத்தை ஆதரிக்கும். பாஜக ஆட்சியில் சிவில் சமூகம் மற்றும் நியாயமான இயக்கங்களுக்கு எதிராக எடுக்கப் பட்ட அடக்குமுறை திசைக்கு எதிராக புதிய அரசாங்கம் நேர்மறையான அணுகுமுறையுடன் முன்னேறும் என்று நம்புகிறோம். சிவில் சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் அர்த்தமுள்ள உரையாடலைக் கட்டியெழுப்பு வதில் எமது கட்சி முக்கிய பங்கு வகிக்கும். பீகாரை வெறித்தனம் மற்றும் கலவரங்களுக்கான ஆய்வகமாக மாற்றும் பாஜகவின் சதிக்கு எதிராக மாநில அரசு பயனுள்ள நிர்வாக மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏபிஎம்சி சட்டத்தை மீண்டும் அமல்படுத்தவேண்டும்.கவர்னர் மூலம் பல்கலைகழகங்களை கொள்ளை மற்றும் மோசடிகளின் மையமாக பாஜக மாற்றி வைத்திருக்கிறது. புதிய அரசாங்கம் கல்வி அமைப்பில் சீர்திருத்தம் மற்றும் மாற்றத்திற்கான பயனுள்ள வேலைத் திட்டத்தை உருவாக்க வேண்டும் மற்றும் துணைவேந்தரின் பங்கைக் கட்டுப்படுத்த வேண்டும்.பாட்னா பல்கலைக் கழகத்திற்கு மத்திய பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கு வதற்கான பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.நிலச் சீர்திருத்தம் மற்றும் கல்வி ஆணையங்களின் பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும். நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங் குவதற்கும், குத்தகைதாரர்களுக்குப் பதிவு உத்தரவாதம் மற்றும் அனைத்து விவசாய மேம் பாட்டு வசதிகளுக்கும், கத்வான் நீர்த்தேக்கத்தின் கட்டுமானம் மற்றும் சோன் மற்றும் பிற நஹர் பயீன் (கால்வாய்) அமைப்புகளைப் பழுதுபார்ப் பதற்கு உடனடி மற்றும் உறுதியான நடவடிக் கைகள் எடுக்கப்பட வேண்டும்.அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்; 19 லட்சம் வேலை வாய்ப்பு வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.பீகாரில் உள்ள ஆஷா பணியாளர்கள், ரசோய்யாக்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் இதர அனைத்து திட்டப் பணியாளர் களுக்கும் மரியாதைக்குரிய மாதாந்திர கவுரவ ஊதியம் உறுதி செய்யப்பட வேண்டும்.சிறுபான்மையினர், பெண்கள், எஸ்சி/எஸ்டி மற்றும் மனித உரிமைகளுக்கான ஆணையங்கள் தாமதமின்றி மறுசீரமைக்கப்பட வேண்டியதின் அவசியத்தை பீகார் மக்கள் உணர்கிறார்கள்.மது மாஃபியா மீது நடவடிக்கை எடுத்து, மதுவிலக்கு சட்டத்தில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும். அக்னிபாத், என்டிபிசி, வேலை வாய்ப்பு இயக்கங்களின்போது அரசியல் சமூக ஆர்வலர்கள் மீது, போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.புல்டோசர் ராஜ் முடிவுக்கு வர வேண்டும். புதிய கணக்கெடுப்பின் அடிப்படையில் புதிய வீட்டு வசதிக் கொள்கை வகுக்கப்பட வேண்டும்.மாற்று ஏற்பாடுகளை செய்யாமல் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஒரு வீடு கூட இடிக்கப்படாது என்று புதிய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.செய்தியாளர் கூட்டத்தில் சிபிஐஎம்எல் மாநிலச் செயலாளர் குணால், பொலிட்பீரோ உறுப்பினர்கள் திரேந்திர ஜா, ராஜாராம் சிங், சட்டமன்றக் குழுத் தலைவர் மஹ்பூப் ஆலம், துணைத் தலைவர் சத்யதேவ் ராம், மீனா திவாரி, கே.டி யாதவ், சசி யாதவ், அருண் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.