திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், வடக்கு தாதநாயக்கன் பட்டி கிராமத்தில், பழனி வடக்கு மலைத் தொடர் அடிவாரத்தில், பல்லுயிர் பெருக்கம் நிறைந்த அமராவாதி வனப்பகுதிக்கு அருகில், 250 ஏக்கர் பரப்பளவில், வருடத்திற்கு 2,191 டன் வெடி பொருட்களுக்கான மூலப்பொருட்களைத் தயாரிக்கும் சுவா எக்ஸ்ப்ளோசிவ்ஸ் என்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனம் ஆலையைத் துவக்க பல்வேறு அரசு முகாமைகள் அனுமதி அளித்துள்ளன. தனியார் கார்ப்பரேட் ஆலை அமைக்கத் திட்டமிட்டுள்ள பகுதிக்கு மிக அருகில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஐவர் மலை, சமணர் குகைகள், வரலாற்றுச் சின்னங்கள், அகழ்வாய்வு தளங்களும் உள்ளன.