பெரியார் திராவிட கழகத்தின் தோழர் விடுதலை அரசு ஆற்றிய உரையிலிருந்து.

பொதுவாக பாசிசம் என்பதற்கு பதிலாக காவி பாசிசம் என்று அடைமொழி கொடுத்து இந்த மாநாடு நடத்தப்படுவது சிறப்பானதாகும். நான் இங்கு பெரியார் என்ற அடையாளத்தோடு வந்திருக்கிறேன். நம்மிடைய பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால், மோடி நம்மையெல்லாம் ஒன்றிணைத்திருக்கிறார். தமிழகத்தின் சாமானிய மக்களுக்கு பாஜகவை தோற்கடிக்க முடியும் என்ற மறு உறுதியை கொடுக்கக்கூடிய வரலாற்று கடமை நம் போன்ற இயக்கங்களுக்கு இருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் பெரியசாமி ஆற்றிய உரையிலிருந்து...

எட்டு ஆண்டு கால பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அரசியலமைப்புச் சட்ட நிறுவனங்களை செயல்படாமல் ஆக்கியுள்ளதையும் பல்வேறு அறிவுஜீவிகள், பத்திரிகையாளர்கள், செயல் பாட்டாளர்களை சிறையில் அடைத்து வைத்துள் ளதையும் நாம் அறிவோம். அமித்ஷா தமது கட்சியின் அகில இந்திய கூட்டம் ஒன்றில் அடுத்த 40 ஆண்டுகள் பாஜக ஆட்சி தொடரும் என்று அறிவிக்கிறார்.அது மாத்திரம் அல்ல, தமிழ்நாடு உட்பட பல முக்கிய மாநிலங்களில் ஆட்சியைப் பிடிப்போம் என்றும் அறைகூவல் விட்டிருக்கிறார். இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள் எப்பாடு பட்டாவது அதை தடுத்து நிறுத்த வேண்டும்.

பச்சை தமிழகம் தலைவர் தோழர் சுப. உதயகுமார் ஆற்றிய உரையின் சுருக்கம்.

நம்முடைய நாடு மிக நெருக்கடியான தருணத்தில் இருக்கிறது. இந்த நெருக்கடியான தருணத்தில் சிபிஐ(எம்எல்) கட்சி மிக முக்கியமான மாநாட்டை நடத்துகிறது. இந்திய சமூகத்தை பாதுகாப்பதற்காக சரியான தருணத்தில் இக்க(மாலெ) எடுத்துள்ள இந்த முயற்சியை மனதாரப் பாராட்டுகிறேன். சில தினங்களுக்கு முன்பாக சங்கிகள் 'தேசத்தின் தந்தை வீர சவார்க்கர்' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி ஒன்றை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்கள். யார் இந்த தேசத்தின் தந்தை? பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ஐ மாற்றுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன் வைத்திருக்கிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் தொல். திருமாவளவன் உரை...

மிகவும் பிற்போக்குத்தனமான காவிப் பாசிசத்தை எதிர்த்து விவசாயிகளை அணி திரட்டும் நோக்கோடு டெல்டா மாவட்டத்தில் நடத்தப்படும் இந்த மாநாடு சிறப்பு வாய்ந்தது. மத்திய அரசின் விவசாயச் சட்டங்களை முறியடிக்க போராட்டக் களத்தில் விவசாயிகள் எப்படி முன் நின்றார்களோ அதுபோல காவிப் பாசிசத்தை முறியடிக்கவும் விவசாயிகள் முன்னிற்க வேண்டும். பாசிசம் ஒரு சித்தாந்தமாக ஜனநாயகத்திற்கு எதிரானது. பாசிசத்தில் கருத்துரிமை பறிக்கப்படுவது மாத்திரமல்ல, அங்கே சமூக நீதிக்கும் இடம் இருக்காது.

பொய், பயங்கரவாத அச்சுறுத்தல், மக்களைப் பிளவுபடுத்துதல், ஒடுக்குமுறை ஆகியவற்றிற்கு எதிராக உண்மை, நல்லிணக்கம், துணிவை உயர்த்திப் பிடித்து மதவாத, கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்கொள்வோம்!

இன்று நாடு ஒரு நெருக்கடியான கட்டத்தில் இருக்கும் போது தஞ்சாவூரில் நாம் கூடியிருக்கி றோம். மதவாத பாசிசம் என்பது ஒரு சிந்தனைப் போக்காக ஒரு சித்தாந்தமாக மாத்திரம் இப்போது இல்லை, அது இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் எதார்த்தமாக இன்றைக்கு நிலவுகிறது. மதவாத பாசிசம் ஆட்சி அதிகாரத்தை பிடித்திருப்பதன் மூலம் அது இந்தியாவை சீர்குலைக்கப் பார்க்கிறது. இந்திய வகை பாசிசம், அதனுடைய தன்மைகள், வளர்ச்சி, அதை எப்படி எதிர் கொள் வது? எதிர்த்து எப்படி போராடுவது? என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

இகக(மாலெ) தஞ்சையில் 24.7.2022ல் நடத்திய காவிப் பாசிச எதிர்ப்பு மாநாடு

காவிப் பாசிசத்தை வீழ்த்திடுவோம்! புதியதோர் சமத்துவ சமுதாயத்தைப் படைத்திடுவோம்!! என்ற முழக்கத்துடன் 24.7.2022 அன்று தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை, காவேரி திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) காவிப் பாசிச எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. தஞ்சை நகரத்திலும் மாநாட்டு மண்டபத்திலும் செங்கொடிகள் செங்கதிரொளியினூடே பறக்க, தோழர்கள் சந்திரகுமார் சந்திரசேகர்-சுப்பு பெயரிடப்பட்ட அரங்கத்தில் மாலை 3.30 மணிக்கு கோவை நிமிர்வு கலைக்குழுவினரின் தப்பாட்டத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. மாநாட்டிற்கு இகை(மாலெ) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் தலைமை தாங்கினார்.

சாரு மஜும்தாரும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புகழ்மிக்க மரபும்

கொல்கத்தாவின் லால்பஜார் போலீஸ் லாக் அப்பில் தோழர் சாரு மஜூம்தார் இறந்து 50 ஆண்டுகளாகி விட்டன. நக்சல்பாரியைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பரவிய புரட்சி அலைக்கு அவரது மரணம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அந்த சமயத்தில் இந்திய அரசு எதிர்பார்த்து பெரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்க வேண்டும். ஆனால், 50 ஆண்டுகளுக்குப் பிறகு, மோடி ஆட்சிக்கு எதிரான ஒவ்வொரு எதிர்ப்புக் குரலையும் ஒடுக்கும்போதும், 'நகர்ப்புற நக்சல்' என்று சொல்ல வேண்டியதாகி விட்டது.

புரட்சிகர இளைஞர் கழகம் சேலம் மாவட்ட பேரவை

புரட்சிகர இளைஞர் கழகத்தின் சேலம் மாவட்ட பேரவை 10.7.2022 கெஜ்ஜல்நாய்க்கன்பட்டி, வீராசாமிபுதூரில் நடைபெற்றது. ஜி.ஜெயராமன், ஆர்.மணீஸ்வரன், ஏ.பிரித்விராஜ் ஆகியோர் தலைமையேற்று பேரவையை நடத்தினர். ஜி.சுந்தர்ராஜன் வேலை அறிக்கை முன்வைத்தார். ஆர்ஒய்ஏ மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஜி.தனவேல், இகக(மாலெ) சேலம் மாவட்டச் செயலாளர் தோழர் கோ. மோகனசுந்தரம், ஏஐசிசிடியூ மாவட்டத் தலைவர் நடராஜன், மாவட்ட துணைத் தலைவர் வேல்முருகன், அய்சா மாவட்ட அமைப்பாளர் ராகுல், இக்க(மாலெ) பனமரத்துப்பட்டி ஒன்றியச் செயலாளர் பொ.அன்பு ஆகியோர் உரையாற்றினார்கள்.


விருதுநகர் மாவட்ட புரட்சிகர இளைஞர் கழகக் கூட்டம்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் 10.7.2022 புரட்சிகர இளைஞர் கழகத்தின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைப்பாளராக தோழர் கிருஷ்ண கோபால பாண்டியனும் தோழர்கள் ஜெயகிருஷ்ணன், சிவகுமார், லாரன்ஸ்கிருபாகரன், அஸ்வின், சுரேஷ்குமார், ராஜபாண்டி ஆகிய 7 பேர் கொண்ட புதிய அமைப்புக்குழுவும் உருவாக்கப்பட்டது. மேலும் 1000 உறுப்பினர்களை சேர்ப்பது, மாவட்டப் பொதுப்பேரவை நடத்துவது, பகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மீது இயக்கம் நடத்துவது, தஞ்சாவூரில் நடைபெறும் காவிப் பாசிச எதிர்ப்பு மாநாட்டில் 10பேர் கலந்துகொள்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் மாணவர்கள் இளைஞர்கள் மீது தாக்குதல்--கண்டனம்

மேற்கு வங்கத்தில் அரசுப் பணிகளில் வேலைக்கு ஆளெடுப்பதில் நடைபெற்ற முறைகேடு களைக் கண்டித்து, புரட்சிகர இளைஞர் கழகம்(ஆர்ஒய்ஏ) மற்றும் அகில இந்திய மாணவர் கழகம்(அய்சா) சார்பில் கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டத்தின் போது மேற்கு வங்க மம்தா அரசு, சிபிஐ (எம்எல்)விடுதலை கட்சியியின் மேற்கு வங்க மாநிலச் செயலாளர் தோழர் அபிஜித் மஜும்தார், அய்சா தலைவர் நிலாஷிஸ், ஆர்ஓய்ஏ தலைவர் ரன்அஜாய் மற்றும் பல முன்னணி தோழர்களைத் தாக்கி கைது செய்தது. ஊர்வலமாக சென்றவர்களை ராம்லீலா மைதானத்தில் தடுத்து நிறுத்திய போலீசார் தடியடி தாக்குதலில் ஈடுபட்டனர். பெண் தோழர்கள் உட்பட பலர் காயம் அடைந்தனர்.