வெறுப்புப் பேச்சிலிருந்து அரசு வன்முறையாக மாறியுள்ள இந்த பாதையைத் தடுத்து நிறுத்துவோம்! ஆத்திரமூட்டல்களை மறுதலிப்போம்! நல்லிணக்கத்தையும் அமைதியையும் பேணிப் பாதுகாப்போம்!
பாஜகவின் நன்கு அறியப்பட்ட பேச்சாளர் களான நுபுர் ஷர்மாவும் அக்கட்சியின் டெல்லி ஊடகப் பிரிவின் தலைவர் நவீன் குமார் ஜிண்டாலும் இஸ்லாம் பற்றிய பீதியையும் பயத்தையும் உருவாக்கி வரும் வெறித்தனத்தின் அடிப்படையில் முகமது நபிகள் பற்றிக் கூறியுள்ள இழிவான கருத்துக்களால் தூண்டி விடப்பட்ட புயல் இப்போது மிகவேகமாக இந்திய முஸ்லிம்கள் மீதும் மாற்றுக் கருத்துகளைச் சொல்பவர்கள் மீதும் குறிவைத்துத் தாக்குகின்ற அரசு வன்முறை இயக்கமாக மாற்றமடைந்து கொண்டிருக்கிறது. முகமது நபிகள் பற்றிய அந்த இழிவான கருத்துகள் முக்கியமான சர்வதேச சர்ச்சையைத் தூண்டி விட்டுள்ளது புரிந்து கொள்ளப் படக்கூடியதே. கதார், சவூதி அராபியா முதல் ஈரான் மலேஷியா வரையிலான பல்வேறு நாடுகள் தெரிவித்த வலுவான கண்டனமும் இந்தியாவும் இந்தியப் பொருள்களும் புறக்கணிக்கப்படும் என்ற அச்சுறுத்தலும் எழுந்த பிறகு மோடி அரசாங்கம் மேற்சொன்ன பேச்சாளர்களை, 'வெறும் விளிம்பு நிலையிலுள்ள நபர்கள்' என்று கூறி, அவர்களைக் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்தோ அல்லது வெளியேற்றியோ அவர்களைக் குப்பையில் போட்டுள்ளது. இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஏறத்தாழ நூறாண்டுக் கால வரலாற்றில், அதற்கு ஏற்பட்ட நெருக்கடிக் கட்டம் ஒவ்வொன்றிலும் அவ்வமைப்பு கடைப்பிடித்து வருகிற, அதற்கே உரிய செயல் தந்திரங்களிலொன்றுதான். காந்தி கொலை செய்யப்பட்ட பின், கோட்ஸேவை ஆர்.எஸ்.எஸ் அணிகள் கொண்டாடிக் கொண்டிருந்தபோதே அவனுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று அவசரஅவசரமாக அறிவித்தது அந்த அமைப்பு. அதனுடைய தீய நோக்குடைய வகுப்புவாத அச்சுறுத்தலைத் தடுத்து நிறுத்துவதற்காக சர்தார் பட்டேல் அதனைத் தடை செய்தபோது, ஆர்எஸ்எஸ். தனது உத்தியை மாற்றிக் கொண்டு, தான் இனி ஒரு கலாசார அமைப்பாக மட்டுமே செயல்படப்போவதாக வாக்குறுதி அளித்தது. அந்த அமைப்பின் மையக் கருத்தைக் கொண்டுள்ள கோல்வால்கரின் "நாம் அல்லது நமது தேசத்தன்மையை வரையறுத்தல்"(We,
or Our Nationhood Defined) என்ற நூல், ஆர்எஸ்எஸ். இன் பாசிசக் கருத்தியலின் பிறப்படையாளத்தை வெளிப்படுத்தி, ஹிட்லரையும் 'இனத் தூய்மை இனப் பெருமை' என்பதையும், யூதர்களை இனக் கொலை செய்வதை மூர்க்கத்தனமாகச் செய்து முடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டிருந்த நாஜி பாணி தேசிய வாதத்தையும் பகிரங்கமாக வழிபட்டபோது, ஆர்.எஸ்.எஸ்., அந்த நூல் உண்மையிலேயே எழுதப்பட்ட ஒன்றா என்ற சந்தேகத்தைக் கிளப்பி, அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று கூற முனைந்தது. அதேபோல, நுபுர் ஷர்மாவும் நவீன் குமார் ஜிண்டாலும் கூறிய கருத்துகளுக்கு வந்த கண்டனங்களை எளிதாகக் கடந்து வந்துவிடலாம் என்றும், 'வெறும் விளிம்புநிலை நபர்கள்' என்று கூறி அவர்களைத் தற்காலிகமாகப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் நினைத்தது. ஆனால், அவர்கள் 'வெறும் விளிம்புநிலை நபர்கள்' என்ற அப்பட்டமான பொய்யைக் கொண்டு உலகத் தையோ அல்லது உள்நாட்டு மக்களையோ ஏமாற்றிவிடலாம் என்று மோடி அரசாங்கமும் சங் பரிவாரத் தலைமையும் போட்ட கணக்கு நிறைவேறவில்லை. "வெறும் விளிம்பு நிலை நபர்கள் என்று சொல்லப்படுபவர்கள் பாஜக - சங் பரிவாரத்தின்
முக்கியப் புள்ளிகள்தான் என்பது அனைவருக்கும் நிச்சயமாகத் தெரியும்" என்று கூறி ஆணியறைந்தாற்போல் அந்தப் பொய்யை அம்பலபடுத்தின சமூக ஊடகங்கள், வெட்கமோ தயக்கமோ இல்லாமல் தரப்படும் பாதுகாப்புடன் பாஜக-சங் பரிவாரத் தலைவர்களும் பேச்சாளர் களும் இத்தகைய வெறுப்புப் பேச்சுக் குற்றங்களைச் செய்ய ஏன் அனுமதிக்கப் படுகிறார்கள்? வெறுப்புப் பேச்சுகளைப் பேசிய, மதவெறியை வெளிப்படுத்திய பாஜகவின் பேச்சாளர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவதற்குப் பதிலாக அவர்கள் வெறும் கட்சி நீக்கத்துக்கு மட்டுமே உள்ளாக்கப்படுவது ஏன்? என்ற கேள்விக்கு முதலில் இந்திய மக்களுக்கும் பிறகு இந்திய அரசமைப்புச் சட்டத் துக்கும் பதிலளிப்பதற்கும் மன்னிப்புக் கேட்பதற்கும் இந்திய அரசாங்கம் கடமைப் பட்டுள்ளது என்பது அதற்கு நினைவூட்டப் பட்டுள்ளது.   இந்த அவசர முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளைத்தான் இந்தியா நெடுகிலும் நடந்துவரும் எதிர்ப்புப் போராட்டங்கள் எழுப்பி வருகின்றன. குறிப்பாக, ஜூன் 3, 10 ஆம் தேதிகளில் பெருந்திரளாக வெள்ளிக்கிழமைத் தொழுகைகளுக்கு கூட்டம் கூடியதையடுத்து இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் பெரிதாக இருந்தன. இந்தப் போராட்டங்களின் போது கல்லெறிதல், கலவரச் செயல்கள் ஒரு சில நீண்ட நேர சாலை மறியல்கள் போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் நமக்குக் காட்டுகிறது. நடந்தன என்பது உண்மைதான். ஆனால், மேற்கு வங்க அரசாங்கம் செயலற்று இருந்தது, நிலைமையைத் திறமையாகக் கையாளவில்லை என்று அதன் மீது விமர்சனம் வைக்கப்படும் அதேவேளை, நாட்டில் காணப்படும் ஒட்டு மொத்த சித்திரம் என்னவென்றால், மிதமிஞ்சிய போலிஸ் ஒடுக்குமுறையும் அரசாங்க நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளும்தான். விஷயம் என்னவென்றால் கல்லெறிதல், கலவரச் செயல்கள், சாலை மறியல் ஆகியவை தன்னெ ழுச்சியான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் சாதாரண மாகக் காணப்படுபவைதான். திறமையாகவும், மக்களின் உயிரை மாய்க்காமலும் கும்பல்களைக் கையாள் வதற்கான வழிமுறைகள் காவல் துறைக்குப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளன. பத்மாவதி திரைப் படத்துக்கு எதிராகவோ சபரிமலை கோவில் நுழைவு பற்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவோ போராட்டங்கள் நடத்திய கும்பல்கள் துப்பாக்கிக் குண்டுகளையோ, போலிஸாரின் தடியடிகளையோ, அவற்றை இஸ்லாம் பற்றி உருவாக்கப்படும் பீதிக்கு எதிராகப் போராடும் முஸ்லிம்கள் மீது பயன்படுத்துவது  ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி நகரில் போலிஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு இளைஞர்கள் மொகமத் முதாசிர், மொகமத் சாஹில் கொல்லப்பட்டனர். இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்; உத்தரப் பிரதேசத்தில் காவல்துறையினர் மூர்க்கத்தனமான தடியடி நடத்தினர்; அலகாபாதிலுள்ள பர்வீன் பாத்திமாவின் வீடும் சாஹரன்பூரில் முஸ்லிம்கள் வீடுகள் இரண்டும் புல்டோசர்கள் கொண்டு தகர்க்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்று வரும் எதிர்ப்புப் போராட்டங்களை பாஜக ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்கள் கையாளும் விதம் இதுதான். காவல்துறை, அரசின் இதர அங்கங் கள் ஆகியவற்றின் ஒடுக்குமுறைப் பாத்திரம் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களோடு நின்றுவிடவில்லை என்பதை ராஞ்சி சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன் கார்கோனில் நடந்த நிகழ்விலிருந்து தொடங்கி, பர்வீன் பாதிமாவின் வீடும் பிற முஸ்லிம்களின் வீடுகளும் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்ட நிகழ்வு வரை, அவை அனைத்தையும் தொலைக்காட்சி சேனல்கள் பரவலாக ஒளிபரப்பின. இந்த ஒளிபரப்பு, அதிகாரத்திலுள்ள பாஜகவால் இடிக்கப்படுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்படுவற்றை மட்டுமல்ல, அந்த இடிப்பு வேலையை அக்கட்சி பெரும் காட்சிப்பொருளாக, பயங்கரம், நாச வேலை ஆகியவற்றின் திருவிழாவாக மாற்றுகிறது என்பதையும் மோடி அரசாங்கம் விடுக்க விரும்புகிற செய்தி முஸ்லிம் சமுதாயத்துக்கு மட்டுமல்ல, அது முதன்மையாக தன்னை விமர்சிக்கிற எதிர்ப்புக் குரல்களுக்கு விடுக்கப்படுகிற செய்தியுமாகும். அதாவது எதிர்ப்புப் போராட்டம் நடத்துபவர்கள் அரசமைப்புச்சட்டம் உத்தரவாதம் தருகிற அடிப்படை உரிமைகளை இனிமேல் அனுபவிக்க முடியாது; மூர்க்கத்தனமான போலிஸ் அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டிய அபாயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அவர்கள் மீது சுமத்தப்படும் பொய் வழக்குகளின் காரணமாக பல ஆண்டுகளை சிறையில் கழிக்க வேண்டும் அல்லது கட்டட இடிப்புப் படைகளுக்கு தங்கள் வீடுகளை இழந்துவிட வேண்டும; காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கோ, சித்திரவதை செய்து கொல்லும் கும்பல்களுக்கோ அல்லது கூலிக்கு அமர்த்தப்படும் கொலைகாரர் களுக்கோ தங்கள் உயிர்களை பலியாகத் தரவேண்டும் என்பதுதான் இந்த செய்தி.  புல்டோஸர் களையோ சந்திக்கவில்லை என்கிறபோது, இது சட்டத்தின் ஆட்சிக்கான அரசமைப்புச் சட்டத்தின் கட்டுக்கோப்பை அப்பட்டமாக இழிவுபடுத்துகிற செயல் மட்டுமல்ல; இதுதான் இந்திய வரலாற்றில் முன்னுவமையில்லாத இந்தக் கட்டத்தில் முஸ்லிம்களின் மனோ நிலையைப் புரிந்து கொள்வது கடினமானதல்ல. முகமது நபிகள் பற்றிய இழிவுரைகள் எப்போதுமே மனதைப் புண்படுத்துகின்றவை; இத்தகைய இழிவான கருத்துகள் ஆதிக்க அரசியல் சொல்லாடலை வடிவமைக்கவும் அதை வரையறுக்கவும் செய்வதுடன் அன்றாட வாழ்வில் முஸ்லிம் சமுதாயத்தினர் விலக்கி வைக்கப்படுவதற்கும், அவமதிக்கப்படுவதற்கும், ஒடுக்கப்படுவதற்கும் துணை புரிகின்றன. இந்த நிலைமை அவர்களை முழுமையான அந்நியப் படுத்தலுக்கு ஆட்படுத்துகிறது. கம்யூனிஸ்டுகளும்
மோடியின் இந்தியாவின் 'புதிய இயல்பு நிலையாக' ஏனைய மதச்சார்பற்ற ஜனநாயகவாதிகளும் இந்தியாவில் முற்றுகையிடப்பட்ட சிறுபான்மையின ருடன் உறுதியாக நின்றாக வேண்டும்; அவர்கள் தங்கள் வலிமை அனைத்தையும் திரட்டி, இந்த பாசிச ஆக்கிரமிப்புக்கு பதிலடி கொடுக்கவும் இந்திய ஜனநாயகத்தையும், அனைத்து மக்களுக்கும் உரிய வரலாற்று மரபையும், கலாச்சார பன்மைத்துவத்தையும் பாதுகாக்க போராட்ட ஒற்றுமைக்கான உறவுகளை வார்த்தெடுத்தாக வேண்டும்.மிகவேகமாக மாறிவருகின்றது