பாஜகவை வெளியேற்றுவோம்!இந்தியாவைக் காப்போம்!!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) விடுதலை அரசியல் தலைமைக்குழு அறைகூவல்
2022, ஜூன் 8-9 தேதிகளில் பட்னாவில் உள்ள பீகார் மாநில இகக(மாலெ) கட்சி அலுவலகத்தில் மத்தியக் குழுவின் அரசியல் தலைமைக் குழு கூடியது. தோழர் ராம்தேவ் வர்மா, தோழர் ராம்ஜி சிங், தோழர் அருப் சென்குப்தா, முதுபெரும் சிபிஐ தலைவர் தோழர். சந்திரகேது சர்மா மற்றும் முதுபெரும் முசாபர்நகர் விவசாயி தலைவர் குலாம் முஹம்மது ஜவ்லா ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தி கூட்டம் தொடங்கியது. கூட்டத்தின் இரண்டாவது நாளில், காலனித்துவ எதிர்ப்புப் போராளியான பிர்சா முண்டாவின் 122வது ஆண்டு தியாக நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தியது.

எழுந்துவரும் தேசிய அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள முக்கிய முன்னேற்றங்கள் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் சாமானிய மக்களின் அவலநிலை ஆகியவற்றை அரசியல் தலைமைக் குழு கவனத்தில் கொண்டது. சங்-பாஜக முகாம் வகுப்புவாத துருவச்சேர்க்கையை கூர்மைப்படுத்துவதன் வழியாக இந்த பற்றி எரியும் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப விரும்புகிறது. இந்த அதிகரித்துவரும் பாசிசத் தாக்குதலை எதிர்த்துப் போராட நாம் நமது விழிப்புணர்வை உயர்த்திக் கொள்ள வேண்டும் மற்றும் நமது எதிர்ப்பை வலுப்படுத்திட வேண்டும். இந்த திசையிலான நமது முயற்சிகள் அனைத்தும் 2024 தேர்தலில் மோடி ஆட்சியை வெளியேற்றிடவும் பாசிச சக்திகளை தனிமைப்படுத்தவும் பலவீனப்படுத்தவும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துவதை திசைவழியாகக் கொண்டிருக்க வேண்டும். இதை, "பாஜகவை வெளியேற்றுவோம் இந்தியாவைக் காப்போம்" என்பதற்கான ஒருமுனைப்பட்ட பரப்புரையாகவும் கவனம் குவிக்கப்பட்ட பணியாகவும் கொள்ள வேண்டும். இகக(மாலெ) விடுதலை கட்சியின் எதிர்வரும் 11வது காங்கிரசை மாபெரும் வெற்றியடையச் செய்வதில் அனைவரும் முழு ஆற்றலையும் கவனத்தையும் செலுத்த வேண்டும்.

ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிசா, அஸ்ஸாம் மற்றும் தமிழ்நாடு மாநில மாநாடுகள் வரும் மாதங்களில் நடைபெற உள்ளன. ஜார்க்கண்ட், உ.பி., பீகார், ஆந்திரா, திரிபுரா மற்றும் மேற்கு வங்காள மாநாடுகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன. மாநில மாநாடுகளைத் தவிர, இரண்டு முக்கிய தேசிய மாநாடுகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஏஐகேஎம் (AIKM) மாநாடு செப்டம்பர் இறுதியில் பீகாரிலும், நவம்பரில் அயர்லா (AIARLA) மாநாடு மேற்கு வங்காளத்திலும் திட்டமிடப்பட்டுள்ளன.

எதிர்வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் மற்றும் எம்எல்சி சட்டமன்ற மேலவை தேர்தல்கள் குறித்து பீகார், ஜார்க்கண்ட் மற்றும் திரிபுரா மாநிலக் கமிட்டிகள் அளித்த பரிந்துரைகளுக்கு அரசியல் தலைமைக் குழு ஒப்புதல் அளித்தது. பீகாரில் நமது எம்எல்ஏக்கள் மகாகத்பந்தன் (மகா கூட்டணி) நிறுத்தும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பர். ஜார்க்கண்டில் மந்தர் (எஸ்டி) பிரிவில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளரையும், திரிபுராவில் சிபிஐஎம் எம்எல்ஏவின் மரணம் காரணமாக இடைத்தேர்தல் நடைபெறும் ஜுபராஜ்நகரில் சிபிஐ(எம்) க்கும் ஆதரவளிப்போம். சுர்மாவில் (எஸ்சி) திப்ரா மோதாவுக்கும், பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் தேர்தல் நடத்தப்படுகிற அகர்தலா மற்றும் பர்த்வாலி தொகுதிகளில் இந்திய காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவளிப்போம்