செப்டம்பர் 2, செப்டம்பர் 13 கிராமப்புர தொழிலாளர்வறியவர்களின் அரசியல் அறுதியிடல் நாட்களாக்க உறுதியேற்க அவிகிதொச அழைப்பு!!

செப்டம்பர் 2, தோழர்கள் சந்திரகுமார்சந்திரசேகர் தியாகிகளான நாள்செப்டம்பர் 13, தோழர் சுப்பு தியாகியான நாள்கிராமப்புர தொழிலாளர்வறிய விவசாயிகள்ஒடுக்கப்பட்ட மக்களை அடிப்படையாகக் கொண்ட புரட்சிகர விவசாய இயக்கத்தை உருவாக்க தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் இவர்களை நக்சல்பாரி அரசியல் வழியில் ஆற்றல் மிக்க இயங்கு சக்தியாக அணிதிரட்ட களப்பணியாற்றி களப்பலியானவர்கள்.

இந்த அரசியல் உறுதிப்பாட்டை செயல்படுத்திக் காட்ட கிராமப்புர தொழிலாளர்வறியவர்கள்ஒடுக்கப்பட்ட தலித்பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை வெகுமக்கள் சக்தியாக எழச்செய்யும் திட்டம் அடிப்படையானதுமுதன்மையானதுஇதை செயல்படுத்தும் விதமாக அனைத்திந்திய விவசாய கிராமப்புர தொழிலாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் அழைப்பு விடுத்தது.

அவிகிதொச தேசிய பொதுக்குழு முடிவுகளை செயல்படுத்தும் விதமாக ஆகஸ்ட் 14,15 தேதிகளில் கந்தர்வக்கோட்டை யில் கூடிய மாநில செயற்குழுபிரிட்டிஷ் எதிர்ப்பு நாட்டு விடுதலைப்போரில் உயர்நீத்த ஆகஸ்ட் புரட்சியாளர்கள்தேசபக்தர்கள்கம்யூனிஸ்ட்களை சுதந்திரத்தின் 78 வது ஆண்டில் நினைவுகூர்ந்தது.

மாநிலத்தின் ஏறத்தாழ 20 மாவட்டங்களிலுள்ள 30 க்கு மேற்பட்ட ஒன்றியங்களில் 250 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் ஆகஸ்ட் 20 முதல் ஊராட்சி பரப்புரை நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. ஊராட்சி தொடங்கி ஒன்றிய அளவில் பரப்புரை இயக்கத்துக்கான தயாரிப்புகளை மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டதுஅடையாளப்படுத்தி முடிவு செய்யப்பட்ட ஊராட்சி முன்னணி- பழையபுதிய பெண்கள்இளைஞர்-களைக் கொண்டு தயாரிப்புக் கூட்டங்கள் நடத்தி தயாரிப்புகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. செப்டம்பர்முதல் பரப்புரை நடத்துவதென்றும் செப்டம்பர்அன்றுவீடு வீடாக மக்களைச்  சந்திப்பதுஊர்க் கூட்டங்கள் என வாய்ப்புள்ள-நடை பயணம் வடிவங்களில் ஊராட்சி முழுவதும் ஊராட்சிகளில் உள்ள குக்கிராமங்கள் ஒன்று விடாமல் பரப்புரை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஊராட்சி அளவில் நூற்றுக்கணக்கான தொழிலாளரைக் கொண்ட அணிதிரட்டல்களை நடத்துவதென முடிவானது.

ஊராட்சி மாநாடுகள் நடத்திசெயல்படும் ஊராட்சி அமைப்புகளை ஏற்படுத்தி அதன் வழியாக ஒன்றிய அமைப்புகளை மாநாடுகள் மூலம் உறுதி செய்வதென்றும் முடிவானது. அக்டோபர்நவம்பர் மாதங்களில் ஆயிரங்களில் பங்கு பெறும் ஒன்றிய அணிதிரட்டல் நடத்துவதென்றும் நாடாளுமன்றம் நோக்கிய பேரணிக்கு தயாராவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அவிகிதொச வை பல லட்சக்கணக்கான உறுப்பினர் பலம் கொண்ட புரட்சிகர வெகுமக்கள் இயக்கமாக்கும் கடமையை சாதிக்கும் திசையில் முன்னேற கூட்டம் உறுதி கூறியதுதமிழ்நாட்டின் அரசியலில் கிராமப்புர தொழிலாளர், வறியவர்கள்ஒடுக்கப்பட்ட மக்கள்  தலைமைதாங்க வேண்டும் என்ற புரட்சிகர லட்சியத்தை முன்னேற்றும் போராட்டக் களத்தில்தான் இகக(மாலெமுதல் மாநிலச் செயலாளர் தோழர் அப்பு இதே செப்டம்பர்  மாதத்தில் ஆட்சியாளர்களால் அடையாளம் தெரியாத வகையில் கொல்லப்பட்டார்அந்தக் கொள்கைச் சுடரை கையேந்திச் சென்ற பயணத்தில்தான் தோழர்கள் மச்சக்காளைசந்திரகுமார்சந்திரசேகர்,சுப்பு தியாகிகளானார்கள்.

கோபாலகிருஷ்ண நாயுடு போன்ற கொடூரமான பல நூறு பண்ணையார்களைவிடவும் கொடிய பாசிச ஆட்சியை எதிர்க்கநாட்டின் வளங்களையெல்லாம் அதானிகள், அம்பானிகள் வாரி சுருட்டிக் கொள்ள ஆட்சி நடத்தும் பாசிச மோடி ஆட்சிக்கு எதிரான உறுதியான அரசியல் சக்தியாக அணிதிரட்டிட வேண்டும்செப்டம்பரில் முப்பெரும் விழா காணும் திராவிட அரசியல் களத்தில் மாற்று அரசியல் சக்தியாக ஜனநாயக இயக்கமாக அணிதிரள வழிகாண வேண்டும்.

-என்.குணசேகரன்