தேர்தல் பத்திரங்கள்
ஊழல் மற்றும் கருப்புப் பணத்தில் இருந்து பாஜகவும் அதன் நன்கொடையாளர்களும் பயன் பெறவே
அண்மையில் புலனாய்வு பத்திரிகையாளர் நிருபர்களின் கூட்டமைப்பு, இந்திய தேர்தல் ஆணையம் 2020ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில், தேர்தல் பத்திரங்கள் பற்றிய மோடி அரசின் கொள்கையின் சட்டபூர்வதன்மையை கேள்விக் குள்ளாக்கிய மனுக்கள் தொடர்பான விசாரணையின்போது சமர்ப்பித்த "மூடப்பட்ட காகித”த் தின் உள்ளடக்கத்தை திறந்து காட்டிவிட்டது. முறைகேடான நன்கொடைகளால் ஆன 'அரசியல் அமைப்பை சுத்தம் செய்தல் மற்றும் அரசியலுக்கு நிதி வழங்குவதில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருதல்' என்று சொல்லிக் கொண்டு 2017ல் பாஜக தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்தியது. ஆனால், தேர்தல் பத்திரங்கள் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வந்துள்ளதா? அல்லது அதற்கு நேர் எதிர் மாறாகச் சென்றுள்ளதா? அரசியலுக்கு நிதி வழங்குவதில் வெளிப்படைத் தன்மை என்பதற்கு என்ன அர்த்தம்? எந்த கட்சிக்கு/கட்சிகளுக்கு எந்த நபர்களால், கம்பெனிளால் நிதி வழங்கப் படுகின்றது என்பதை மக்களாகிய நாம் முழுமையாகத் தெரிந்து கொள்வதேயாகும். அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவது என்பது பொது மக்கள் பார்வைக்கு ஏன் கொண்டு வரப்பட வேண்டும்? அந்த நிதியானது ஊழலில் உருவாகி ஊழலில் முடிகிறதா? என்பதை மக்களாகிய நாம் தீர்ப்பளிக்க வேண்டும். அதாவது, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ நிதி வழங்கியவர்களுக்காக செயல்படுகிறதா? அல்லது பொது மக்களுக்காகச் செயல்படுகிறதா? என்று தெரிந்து கொள்ளவே. ஆகையால், அதானி பாஜகவிற்கு அதிகமான பணம் அள்ளிக் கொடுக்க, பாஜக அரசாங்கமோ அதானி பயன் பெறும் வகையில் விவசாய சட்டங்களை உருவாக்கவும் (பொதுத் துறை நிறுவங்களை விற்கவும்) செய்கிறபோது, பாஜக ஒட்டுண்ணி முதலாளித்துவத்தில், ஊழலில் ஈடுபடுகிறது என்று நாம் முடிவுக்கு வரமுடியும். வாக்களிக்கும் இந்திய மக்கள் யார் எந்த கட்சிக்கு எவ்வளவு பணம் நன்கொடையாகக்கொடுக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்குப் பதிலாக, யாரும் எந்த நிறுவனமும் (இந்திய நிறுவனமோ அல்லது வெளிநாட்டு நிறுவனமோ) கேட்பார் இல்லாமல் அநாமதேய மாக அள்ளிக் கொடுப்பதற்கு தேர்தல் பத்திரங்கள் வழி வகுத்துள்ளது. வேறு வார்த்தையில் சொல்வது என்றால், நன்கொடையாளர்களின் அடையாளத்தை, நன்கொடை விவரங்களை இந்திய குடிமக்கள் அறிந்து கொள்வதை தேர்தல் பத்திரங்கள் தடுக்கின்றன.
2017லேயே உச்சநீதிமன்றத்தில் தேர்தல் பத்திரங்கள், ஊழலை மறைப்பதற்கானது என்று சுட்டிக் காட்டி தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2019ல் இந்திய தேர்தல் ஆணையமே தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. தேர்தல் பத்திரங்கள் திட்டமானது தேர்தல் நிதியில் கருப்புப் பணத்தை கணக்கில்லாமல் கொட்டுவதற்கும் இந்திய அரசியலில், அரசியல் முடிவுகள் எடுப்பதில் வெளிநாட்டு நிறுவனங்கள் தலையிடுவதற்கும் அனுமதித்துவிடும் என்று அதில் கூறியிருந்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அந்த எச்சரிக்கைக்கு உச்சநீதிமன்றம் முக்கியத்துவம் கொடுத்து கவனத்தில் எடுத்துக் கொண்டதா? இல்லை மாறாக 2019 ஏப்ரலில் உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம், தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தெந்த கட்சிகள் பயனடைந்தன, எவ்வளவு நிதித் தொகை பற்றிய விவரங்களை மூடப்பட்ட உரையில் தருமாறு கேட்டது. முழுமையாக இரண்டு ஆண்டுகள், ஒரு பொதுத் தேர்தல், பல்வேறு மாநிலங்களின் தேர்தல்கள் முடிந்த பின்னரும் கூட உச்ச நீதிமன்றம் அந்த மூடப்பட்ட உரையை இன்னும் திறக்கவில்லை. 2020 ஜனவரியில் இது கடைசியாக விசாரணைக்கு வந்தது. இந்திய அரசியலை ஊழலில் இருந்து, ஒட்டுண்ணி முதலாளித்துவத்தில் இருந்து, கருப்புப் பணத்தில் இருந்து, வெளிநாட்டு நிதியில் இருந்து காப்பாற்ற அரசமைப்புச் சட்டத்தின் கண்காணிப்பை மிகவும் அவசரமா கவும் பெருமளவிலும் கோருகிறது.
தேர்தல் பத்திர நிதிகள் தொடர்பான தன்னுடைய விசாரணைக்கு 105 கட்சிகள் பதில் அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித் துள்ளது. அதில் 7 தேசியக் கட்சிகள், 3 தேசியக் கட்சிகளின் மாநில அமைப்புகள், 20 மாநிலக் கட்சிகள், 75 பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சிகள் (ஹம் அவுர் ஆப் பார்டி, அஸ்லி தேசியக் கட்சி, சப்சே பாடி பார்டி போன்றவையும் இதில் அடக்கம்). தேர்தல் பத்திரங்கள் நிதியானது இந்த 105 கட்சிகளுக்கும் பரவியுள்ளது என்பது மறைமுகமாகத் தெரிகிறது. தேர்தல் ஆணையத்திடம் இந்த கட்சிகள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க நிருபர்கள் கூட்டமைப்பு புறப்பட்டது. அதற்கு ஒரே வழி அந்த மூடப்பட்ட உரைக்குள் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதுதான். இந்தக் கூட்டமைப்பின் ஸ்ரீகிரிஷ் ஜலிஹல் தன்னுடைய ட்டுவிட்டரில், தேர்தல் ஆணையத் தின் பட்டியலில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப் படாத கட்சிகளும் கிட்டத்தட்ட பாதி மாநிலக் கட்சிகளும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றிருக்கவில்லை என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம் என்று போட்டுள்ளார். உடனே முறை ஒன்று உருவானது. இந்தக் கட்சிகள் எல்லாம் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெறாவிட்டாலும்கூட மூடப்பட்ட உரையில் கடிதங்கள் தர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் இக்கட்சிகளைக் கேட்டுக் கொண்டது. 105 கட்சிகளில் வெறும் 17 கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றுள்ளன. மேலும் தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கொடுக்காத இரண்டு கட்சிகளும் கூட தேர்தல் பத்திர நிதி பெற்றுள்ளன. தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் உள்ள கட்சிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலுள்ள கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் பலனடைந்துள்ளன என்பது தெளிவாகிறது.
பலனடைந்த கட்சிகளுக்கு தேர்தல் பத்திர நிதிகள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகின்றன? அதற்கு ஜலிஹல் கூறுகிறார்..."மூன்று ஆண்டுகளாக நாங்கள் ஆய்வு செய்ததலில் பாஜக மட்டுமே 67.8% தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆதாயம் அடைந்திருக்கிறது. அதாவது 6,201 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட தேர்தல் பத்திர நிதியில் ரூ.4215 கோடி பாஜக மட்டுமே  பெற்றுள்ளது.நன்கொடையாளர்களின் அடையாளத்தை கட்சிகள் அறிந்து கொள்வதையும் இந்த தேர்தல் பத்திரத் திட்டம் தடுக்கவில்லையா? ஆமாம் தடுக்கிறது, ஆனால், மிக முக்கியமாக மத்தியில் ஆளும் கட்சி மட்டும் விதிவிலக்கு! தேர்தல் பத்திரங்கள் வழங்கவும் அதைப் பணமாக மாற்றவும் அதிகாரமளிக்கப்பட்ட ஒரே வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மட்டுமே. அந்த வங்கியை கட்டுப்படுத்துவது ஒன்றிய நிதி அமைச்சகம். அதன் காரணமாக ஒன்றிய அரசும் அதன் கட்சியும் மிகவும் எளிதாக தன்னுடைய நன்கொடையாளர்களைத் தெரிந்து கொள்ள முடியும். இது ஆளும் கட்சியோ அல்லது அரசாங்கமோ தன்னுடைய நன்கொடையாளர் களுக்கு பலனளிக்கும் வகையில் பெரும் ஊழல் முறைகேட்டிற்கு சாத்தியமுள்ள முடிவை எடுப்பதற்கு இட்டுச் செல்லும். இந்தத் திட்டமானது வாக்காளர்களுக்கும் குடிமக்களுக்கும் நன்கொடையாளர்களின் அடையாளத்தை மறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜலிஹல் இந்த சூழலை சுருக்கமாகச் சொல்கிறார். "ரகசியமான இந்த நன்கொடை யாளர்கள் பெருமளவில் கணக்கில் வராத பணத்தை ஒரு கட்சிக்கு, இந்த நன்கொடைகள் யாருக்கு போகும் என்பதை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவை கட்டுப்படுத்தும் ஒன்றிய நிதி அமைச்சகத்தின் மூலம் தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கும் மத்தியில் அதிகாரத்திலிருக்கும் கட்சிக்கு அளிப்பார்கள். உச்சநீதிமன்றத்தில் மூடப்பட்ட உரையில் 105 கட்சிகள் கடிதம் கொடுத்துள்ளது என்பது கேலிக்கூத்தாகும். ஒரு நாள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு உத்தரவு போட்டு அதையெல்லாம் ஒருபோது நீதிமன்றம் கண்டுபிடிக்க முடியாது. இந்த வழக்குகளை இரண்டு ஆண்டுகளாக விசாரணைக்கே எடுத்துக் கொள்ளவில்லை உச்ச நீதிமன்றம். அந்தப் பணமோ சிலருக்காகச் சுற்றிக் கொண்டிருக்கிறது.
ஏன் உச்சநீதிமன்றம் இந்தத் திட்டத்திற்கு எதிரான வழக்குகளை விசாரணை செய்யாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது? இந்த இழுத்தடிப்பு ஆளும் பாஜக அதிக அளவில் பலன் பெறவே, ரகசிய நன்கொடையாளர்க ளிடமிருந்து நன்கொடைகள் அதிகம் பெற்று, இந்திய மக்களுக்கான கொள்கைகளை  உருவாக்கு   வதற்குப்பதிலாகநன்கொடையாளர்கள்பலன்  பெறும்    வகையில் கொள்கைகளை உருவாக்கவேயாகும். 

லிபரேஷன், ஜூலை 2022 தமிழாக்கம் - சங்கரந்தம்பி