தோழர் திபங்கர் தலைமையிலான குழு முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்தது
மாநிலச் செயலாளர் குணால், பொலிட்பீரோ உறுப்பினர் திரேந்திர ஜா, ராஜாராம் சிங், கே.டி.யாதவ், சட்டமன்றக் குழுத் தலைவர் மஹ்பூப் ஆலம் மற்றும் துணைத் தலைவர் சத்யதேவ் ராம், மீனா திவாரி, சக்ஷி யாதவ் ஆகியோர் அடங்கிய சிபிஐஎம்எல் பொதுச் செயலாளர் திபங்கர் தலைமையிலான குழு பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை 2022 ஆகஸ்ட் 13ம் தேதி சந்தித்தது.
பீகாரில் பாஜக அல்லாத அரசு அமைந்ததற்கு சிபிஐஎம்எல் பொதுச்செயலாளர் திபங்கர், நிதிஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தார். நாங்கள் அமைச்சரவைக்கு வெளியே இருப்போம் ஆனால் அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் அவர் கூறினார். பீகாரில் ஏற்பட்டுள்ள மாற்றம், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக போராடும் சக்திகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தில் தூதுக்குழு, முதல்வர் நிதிஷ் குமாரிடம் சில ஆலோசனைகளை சமர்ப்பித்தது. அதில் முக்கியமானது, குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை உருவாக்குவதற்கும் அதைச் செயல்படுத்துவதற்கும் மகாகத்பந்தன் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்குவது ஆகும்.

புதிய அரசாங்கத்திற்கு சிபிஐஎம்எல் வழங்கிய பரிந்துரைகள் கடிதம்

பெறுநர்
       மாண்புமிகு முதலமைச்சர் திரு நிதீஷ்குமார் அவர்கள் பீகார்
உங்கள் தலைமையில் பீகாரில் பாஜக அல்லாத ஆட்சி அமைந்ததற்கு முதலில் உங்களை மனதார வாழ்த்துகிறோம்.
வெறுப்பு, வன்முறை, பொய்கள் மற்றும் வகுப்புவாத அணிச்சேர்க்கை அரசியலை தீவிரப்படுத்தவும், நாட்டில் ஒற்றைக் கட்சி அமைப்பைத் திணிக்கவும், அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை அமல்படுத்தவும், உத்தரப் பிரதேசம், குஜராத்தைப் போல பீகாரிலும் புல்டோசர் ராஜ் நிறுவவும் பாஜக நாடு தழுவிய
உந்துதலை நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில். பீகாரில் ஆட்சியில் இருந்து வெளியேற்றப் பட்டது பீகாருக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் தேவையான மற்றும் மிகவும் சாதகமான நிகழ்வாகும். அரசியலமைப்பு மற்றும் ஜனநாய கத்தின் மீதான பாஜகவின் இடைவிடாத தாக்குதல்களுக்கு எதிராக போராடும் சக்திகளுக்கு இது ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றம் நிச்சயமாக நாடு முழுவதும் அரசியலுக்கு ஒரு புதிய திசையை வழங்க முடியும். பீகாரை வெறித்தனம் மற்றும் கலவர வெறியாட்டங்களின் ஆய்வகமாக மாற்றும் பாஜகவின் செயல்களையும் சதிகளையும் திறம்பட தடுக்க உங்களால் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு, நிர்வாக மற்றும் சட்டமன்ற
நடவடிக்கைகளை எடுக்கும் என்று நாங்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த பீகாரும் எதிர் பார்க்கிறது. பாஜக பீகாரை மதவெறி மற்றும் கலவரங்களின் பரிசோதனைக் கூடமாக மாற்றிட முயற்சிப்பதைத் தடுத்திட, அம்மாதிரியான அமைப்புகள் மற்றும் நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்து மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை, அமைதியை புதிய அரசு பேண வேண்டும். பாஜக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அரசு நிறுவனங்களை காவி மயமாக்க முயற்சிக்கிறது விதானசவுதாவில் புதிதாக கட்டப்பட்ட மாநில சின்னத்தில் உருது மொழியில் எழுதப்பட்ட 'பீகார்' என்ற வார்த்தையை நீக்கியது அதற்கு உதாரணம். மாநிலத்தில் அரசியலமைப்பு விழுமியங்கள் பராமரிக்கப்படுவதற்கும், ஒருங்கிணைந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வலுவாக முன்னோக்கி கொண்டு செல்லப்படுவதற்கும் இதுபோன்ற அனைத்து நடவடிக்கைகளையும் திரும்பப் பெறுவது அவசியம்.

முந்தைய அரசாங்கத்தின் போது ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரிலோ அல்லது ஜல்ஜீவன் ஹரியாலி போன்ற அரசாங்கத் திட்டங்களின் பெயரிலோ ஏழைகள் பெரிய அளவில் வெளியேற்றப்பட்டனர். நீண்ட காலமாக நிலத்தில் குடியிருந்த பொது மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. இதுபோன்ற செயல்களை புதிய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். அனைத்து ஏழைகளுக்கும் வீட்டுவசதிக்கான உத்தரவாதத்தை உறுதி செய்வதற்காக, நிலத்தில் குடியேறிய மக்கள் பற்றிய விரிவான கணக் கெடுப்பின் அடிப்படையில் ஒரு காலக்கெடு வுக்குள் புதிய வீட்டு வசதிக் கொள்கையை உருவாக்கு வதற்கு அரசாங்கம் முன்முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பு கிறோம். மாற்று வீடுகளுக்கு முன் ஏற்பாடு செய்யாமல் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஒரு வீடு கூட இடிக்கப்பட மாட்டாது என்றும் புதிய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது, மகாகத்பந்தன் அறிக்கையின் முக்கியமானதாக வேலை வாய்புகள் இருந்தன. காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப புதிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என TET மற்றும் STET தேர்ச்சி பெற்ற அனைவரும் நியமனம் செய்யப்பட வேண்டும்.
19 லட்சம் வேலை வாய்ப்புகள் வாக்குறுதியை

நிறைவேற்றுவது புதிய அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்க வேண்டும். பீகாரில் ஆழமான மோசமான விளைவு களைக் காட்டிய முந்தைய NDA அரசாங்கத்தின் அந்த நடவடிக்கைகளை தாமதமின்றி சரிசெய்வது அவசியம். ஏபிஎம்சி சட்டத்தை ரத்து செய்ததன் மூலம் மாநிலத்தில் விவசாயிகளின் நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. அரசாங்க கொள்முதலுக்கு எந்த உத்திரவாதமும் இல்லை மற்றும் பயிர்களுக்கு சரியான விலை கிடைப்பது இல்லை, இதன் விளைவாக இன்றும் கூட, பீகார் மக்கள் தொகையில் பெரும் பகுதியினரின் ஒரே வாழ்வாதாரமாக இருக்கும் விவசாய முறை மேலும் மோசமடைகிறது. இந்த விவகாரத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும், APMC சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் கருத்து.

2005ல் நீங்கள் முதலில் ஆட்சிக்கு வந்தபோது, நிலச் சீர்திருத்தம் மற்றும் பீகாரில் மக்கள் சார்பான வளர்ச்சிக்காக கல்வி கமிஷன்களை அமைத்தீர்கள், ஆனால் பாஜகவின் அழுத்தத்தால் செய்யப்பட வேண்டிய அந்தப் பணிகள் இன்னும் செய்யப்படவில்லை. இந்த இரண்டு கமிஷன்களின் பரிந்துரைகளின்படியும் அரசு செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்குவதற்கும், சாகுபடியாளர்களுக்குப் பதிவு உத்தரவாதம் மற்றும் அனைத்து விவசாய மேம்பாட்டு வசதிகளுக்கும், கத்வான் நீர்த்தேக்கத்தின் கட்டுமானம் மற்றும் சோன் மற்றும் பிற நஹர் பயீன் (கால்வாய்) அமைப்புகளைப் பழுதுபார்ப் பதற்கு உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கை கள் எடுக்கப்பட வேண்டும்.

பீகாரில் கல்வி முறை பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கல்வியில் அராஜகம் உச்சத்தில் உள்ளது. தனியார்மயமாதல் கல்வியை சாதாரண மக்களுக்கு எட்டாதவாறு மாற்றி விட்டது. ஆளுநரின் மூலம் பா.ஜ.க., பல்க லைக்கழகங்களை கொள்ளை மற்றும் மோசடி களின் மையமாக மாற்றியுள்ளது. புதிய அரசாங் கம் கல்வி முறையில் சீர்திருத்தம் மற்றும் மாற்றத்திற்கான பயனுள்ள வேலைத் திட்டத்தை உருவாக்க வேண்டும் மற்றும் துணைவேந்தரின் பங்கை மட்டுப்படுத்த வேண்டும். பாட்னா பல்கலைக்கழகத்துக்கு மத்திய பல்கலைக்கழக
அந்தஸ்து கோரி போராட்டம் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

ஒரு காலத்தில் பீகார் முழுவதும் மதுப் பிரச்சனையால் கலங்கியது. ஆனால் மதுவிலக்கு பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. மதுவை நிறுத்த முடியவில்லை, ஆனால் விஷச் சாராயம் இதுவரை நூற்றுக்கணக்கான உயிர்களை பறித்துள்ளது. இந்த சட்டத்தின் கீழ் ஏராளமான ஏழை எளிய மக்கள் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். மதுபான மாஃபியா மீது நடவ டிக்கை எடுக்காத வரையில் எதையும் சாதிக்க முடியாது என்பது எங்களின் புரிதல். இந்தச் சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளவர்களை விடுவித்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டியது அவசியம்.

பீகாரில் உள்ள ஆஷா பணியாளர்கள், ரசோய்யாக்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் இதர அனைத்து திட்டப் பணியாளர்க ளுக்கும் மரியாதைக்குரிய மாதாந்திர கவுரவ ஊதியம் உறுதி செய்யப்பட வேண்டும். அனைத்து தொழிற்சங்க சட்டங்களும் நீக்கப்பட்டு 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் அமல் படுத்தப்பட்டுள்ளன. கோவிட் காலத்தில் தொழி லாளர்களின் வேலை நேரத்தை 8 முதல் 12 வரை நீட்டித்தது மிகவும் தவறானது. இந்த நடவடிக்கைகள் திரும்பப் பெறப்பட வேண்டும். பாஜக அல்லாத பல மாநிலங்கள் 300 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கி வருகின்றன. அதிக மின் கட்டணத்தால் பீகார் மக்கள் சிரமப்படுகின்றனர். இந்த பணவீக்க காலத்தில் ஏழைகளுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் வகையில் அனைத்து ஏழைகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டிக்கு எதிராகவும் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

சிறுபான்மையினர், பெண்கள், எஸ்சி/எஸ்டி மற்றும் மனித உரிமைகளுக்கான கமிஷன்கள் தாமதமின்றி மறுசீரமைப்பின் அவசியத்தை பீகார் மக்கள் உணர்கிறார்கள். எதிர்ப்புக் குரல்களை நசுக்கி சிறையில் அடைக்கும் ‘பாஜக மாதிரி’ நாடு முழுவதும் திணிக்கப்படுகிறது. மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தங்கள் கடமையைச் செய்ததற்காக சிறையில் தள்ளப்படு கிறார்கள். முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது பீகாரிலும் பலமுறை அரசியல் சமூக ஆர்வலர்கள் குறிவைக்கப்பட்டனர். அக்னிபாத், என்டிபிசி,
வேலை வாய்ப்பு இயக்கங்கள் உள்ளிட்ட அரசியல் சமூக ஆர்வலர்கள் மீது போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். அர்வால் மாவட்டத்தில் தடாவின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட பல அரசியல் ஆர்வலர்கள் தண்டனை முடிந்தும் இன்னும் சிறையில் வாடுகின்றனர். தடா கைதிகளான டாக்டர் ஜெகதீஷ் யாதவ், மாதவ் சவுத்ரி, அரவிந்த் சவுத்ரி, சுராமன் பகத், ஷியாம் சவுத்ரி, லக்ஷ்மன் சாவ் மற்றும் அஜித் குமார் ஆகியோரை உடனடியாக விடுவிக்கக் கோருகிறோம்.

பீகாரின் மக்கள் சார்பான வளர்ச்சிக்காக ஒரு பொதுவான குறைந்தபட்ச திட்டம் உருவாக் கப்பட வேண்டும் என்றும், அதை திறம்பட செயல்படுத்துவதற்காக அனைத்து மகாகத்பந்தன் கட்சிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

பாஜக ஆட்சியில் சிவில் சமூகம் மற்றும் நியாயமான இயக்கங்களுக்கு எதிராக எடுக்கப் பட்ட அடக்குமுறை திசைக்கு எதிராக புதிய அரசாங்கம் நேர்மறையான அணுகுமுறையுடன் முன்னேறும் என்று நம்புகிறோம். சிவில் சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் அர்த்தமுள்ள உரையாடலைக் கட்டியெழுப்பு வதில் எமது கட்சி முக்கிய பங்கு வகிக்கும். எங்களால் எழுப்பப்பட்ட மேற்கண்ட பிரச்சினை களை நீங்கள் தீவிரமாக பரிசீலித்து போதுமான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. புதிதாக அமையவுள்ள அரசாங்கத்திற்கு எமது கட்சி அனைத்து உதவிகளையும் செய்யும். நாங்கள் அமைச்சரவையில் இணையாவிட்டாலும், மக்கள் நலன் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் எங்களது முழு ஆதரவும் அரசுக்கு இருக்கும். பிஜேபியின் சதிகள் மற்றும் பேரழிவுகளில் இருந்து நாட்டை விடுவிப்பதில் வரும் நாட்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நன்றி!