பொய், பயங்கரவாத அச்சுறுத்தல், மக்களைப் பிளவுபடுத்துதல், ஒடுக்குமுறை ஆகியவற்றிற்கு எதிராக உண்மை, நல்லிணக்கம், துணிவை உயர்த்திப் பிடித்து மதவாத, கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்கொள்வோம்!

இன்று நாடு ஒரு நெருக்கடியான கட்டத்தில் இருக்கும் போது தஞ்சாவூரில் நாம் கூடியிருக்கி றோம். மதவாத பாசிசம் என்பது ஒரு சிந்தனைப் போக்காக ஒரு சித்தாந்தமாக மாத்திரம் இப்போது இல்லை, அது இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் எதார்த்தமாக இன்றைக்கு நிலவுகிறது. மதவாத பாசிசம் ஆட்சி அதிகாரத்தை பிடித்திருப்பதன் மூலம் அது இந்தியாவை சீர்குலைக்கப் பார்க்கிறது. இந்திய வகை பாசிசம், அதனுடைய தன்மைகள், வளர்ச்சி, அதை எப்படி எதிர் கொள் வது? எதிர்த்து எப்படி போராடுவது? என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

காவிப் பாசிசத்தை வீழ்த்திடுவோம்! புதியதோர் சமத்துவ சமுதாயத்தைப் படைத்திடுவோம்!

மோடி ஆட்சியின் அடக்குமுறைகளும், மோசடிகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. சட்டத்தின் ஆட்சிக்குப் பதிலாக சங்கிகளின் ஆட்சி, மோடி என்கிற தனிநபரின் ஆட்சி என்பதாக இந்திய ஜனநாயகம் சர்வாதிகாரமாக, பாசிசமாக மாறி வருகிறது. சர்வாதிகாரம், யதேச்சாதிகாரம் என்பன அடிப்படையில் அரசு எந்திரத்தை பயன்படுத்தி ஏவப்படும் ஒடுக்குமுறை ஆகும். பாசிசம் என்பது அரசு எந்திரத்தோடு கூடவே, தனியார் படைகளை, அரசு சாராத படைகளை, அரசு சாராத கும்பல்களைப் பயன்படுத்தி ஏவப்படும் ஒடுக்குமுறை ஆகும். இதுவும் கூட பாசிசத்தின் ஒரு முக்கிய அம்சம் ஆகும்.

அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கும் இந்தியாவில் புல்டோசர் ஆட்சி நடத்த முயற்சிக்கும் பாஜகவின் திட்டத்தை முறியடிப்போம்!

முகமது நபியை இழிவுபடுத்தும் வகையில் பாஜகவின் தேசிய பேச்சாளர் நுபுர் சர்மா கூறிய கருத்தானது உலகம் முழுவதும் எதிர்ப்புப் புயலைத் தூண்டிவிட்டது மட்டுமின்றி, இந்தியாவில் பல அடுக்கான ஒரு இருண்ட சதிச் செயல் போன்ற நடவடிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த நாட்டின் சட்டத்தின் படி நுபுர் சர்மா மீது நடவடிக்கை எடுப்பதற்கு மோடி அரசாங்கம் மறுக்கிறது. அவருடைய கருத்தை, ஓரஞ்சாரத்தில் உள்ளவர் சொன்ன ஒன்றுமில்லாத விசயம் என ஒதுக்க முயற்சிக்கிறது. அது எதிர்பார்த்தது போலவே இந்தியாவெங்கும் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் கோபத்தைக் கிளறியது. இஸ்லாமியர்கள் பெரும் எண்ணிக் கையில் போராட்டங்கள் நடத்தி னார்கள்.