குடியரசுத் தலைவர் தேர்தல் 2022
அரசியலமைப்புச் சட்ட கட்டமைப்பு மற்றும் இந்திய குடியரசின் மதச்சார்பற்ற, ஜனநாயக லட்சிய மதிப்பீடுகள் மீதான பாஜகவின் இடைவிடாத தாக்குதலை முறியடிக்க ஒன்றுபடுவோம்!
2022, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான யுத்த எல்லைக்கோடு தெளிவாக்கப் பட்டு விட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டாளிகளின் ஆதரவுடன், ஒடிசா சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் முன்னாள் அமைச் சரும் ஜார்கண்ட் ஆளுநருமான திரௌபதி முர்முவை தேஜகூ முகாமின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக நிறுத்தியிருக்கிறது. இந்தியாவின் பெரும்பாலான எதிர்க்கட்சிகள், முதுபெரும் தலைவர் யஷ்வந்த் சின்ஹாவை ஒன்றிணைந்த எதிரணி முகாமின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தி ருக்கின்றன. இகக (மாலெ) எதிர்க்கட்சிகளின் முடிவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறது. கட்சியின் பீகார், ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற உறுப் பினர்கள் எதிரணி வேட்பாளருக்கு தங்கள் வாக்குகளை அளிப்பார்கள்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான எதிரணி வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவின் தேர்வு, முற்போக்கு வட்டாரத்தில் நிறைய விவாதங்களையும், கலந்துரையாடல்களையும்  உருவாக்கியிருப்பது புரிந்துகொள்ளக் கூடியதே. அவருடைய அரசியல் வாழ்வின் பெரும்பாலான காலங்களை அவர் பாஜகவுடன் இணைந்து செயல்பட்டு வந்திருக்கிறார். அவர் வாஜ்பாய் அரசாங்கத்தின் மூத்த அமைச்சராக இருந்தி ருக்கிறார். ஆனால், 2018இல் கட்சியை விட்டு வெளியேறும் முன்புவரை, மோடியின் சகாப்தத்தில், பாஜக வுக்குள் மாற்றுக்கருத்து கொண்டவராக இருந்தார். பாஜகவில் சேர்வதற்கு முன் முன்னாள் பிரதமர் சந்திரசேகருக்கு நெருக்கமானவராக இருந்து, தன்னுடைய அரசியல் வாழ்வை துவக்கினார்.2018இல் பாஜகவிலிருந்து விலகிய பிறகு திரிணாமுல் காங்கிரஸில் இணைந்து அதன் தேசிய துணைத் தலைவராக இருந்து வந்தார். குடியரசுத் தலைவர் தேர்தல் போட்டிக்காக பதவியை ராஜினாமா செய்யும் வரை அப்பதவியில் இருந்தார். குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான
எதிர்க்கட்சிகளின் தேர்வு என்பது அவருடைய இப்போதைய அரசியல் நிலைப்பாடு மற்றும் சர்வாதிகார மோடி ஆட்சியை விமர்சிப்பதில் அவருடைய பாத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது என்பது பட்டவர்த்தனமானதாகும்.
குடியரசுத் தலைவர் தேர்தல் சம்பந்தமான எதிர்க்கட்சிகளின் கலந்தாலோசனை இயக்கப் போக்கு மிக காலதாமதமாகவே துவங்கப் பட்டது. ஜூன் 15 அன்று நடைபெற்ற முதல் கூட்டம் பொது வேட்பாளரை நிறுத்துவது என்று முடிவு செய்தது. ஜூன் 21 அன்று நடைபெற்ற இரண்டாவது கூட்டம் சின்ஹாவை வேட்பாளராக அறிவித்தது. முற்போக்கு வட்டாரங்கள் தெரிவித்த கவலை என்பது, எதிரணியின் ஒற்றுமையைக் கட்டமைப்பதற்கான முயற்சி, அரசியல் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமையாக மட்டுமில்லாமல், அதையும் தாண்டி வேர்க்கால் மட்டத்தில் முக்கிய எதிரணி பங்காற்றும், மக்கள் இயக்கங்களுக்குமிடையிலான, கூடுதல் பரந்துபட்டகலந்துரையாடலின் தேவையை சுட்டிக்காட்டுகிறது. அதுபோன்ற கலந்துரை யாடல்களும், விவாதங்களும் முகிழ்ந்துவரும் எதிரணி ஒற்றுமையை மேலும் பலப்படுத்தவும் செழுமைப்படுத்தவும் செய்யும்.
சில நண்பர்கள் சின்ஹாவுக்கு ரன்வீர் சேனாவுடன் இருந்ததாகச் சொல்லப்படும் தொடர்பு குறித்தும் தங்கள் கவலையை வெளிப்படுத்தி இருந்தார்கள் (கோப்ரா போஸ்டின் அம்பலப்படுத்தும் நடவடிக்கையின் போது சில ரன்வீர் சேனா உறுப்பினர்கள் சொன்னதாக சொல்லப்படுவது பற்றி). சங் படையின் முழு பின்புல ஆதரவு ரன்வீர் சேனாவுக்கு உள்ளது என்பதும், டெல்லியிலும் பாட்னாவிலும் அப்போதிருந்த அரசாங்கங்கள் அதைக் கட்டுப்படுத்தத் தவறி விட்டன என்பதும் அனைவரும் அறிந்த உண்மை. ரன்வீர்சேனா காலகட்டத்தை, பீகாரின் போராடும் மக்களின் நீடித்த இயக்கம் வெற்றிகரமாகக் கடந்து வந்துவிட்டது. மேலும், இன்று மிகப் பெரிய அச்சுறுத்தலாக பாஜகவின் புல்டோசர் ஆட்சி, நம் முன்னே வந்து நிற்கிறது. இன்றைய சூழலில் யார், எந்தப் பக்கம் நிற்கிறார்கள் என்பதை வைத்தே நமது கூட்டாளிகளை நாம் தேர்ந்தெடுத்தாக வேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தலில் இடதுசாரிகளின் முக்கிய கவனம், பரந்த பலவண்ண எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைப்பதாக இருந்தது. அதை இப்போது கட்டமைக்கப்பட்ட, தீர்மானகரமான, இயங்காற்றல்மிக்க வகையில் முன்னெடுத்துச் சென்றாக வேண்டும். பாசிசத்தை தடுத்து நிறுத்துவதிலும், வேர்க்கால் மட்டத்தில் நீடித்த போராட்டங்களைக் கட்டமைப்பதிலும் கருத்தியல் தெளிவுக்கும் துணிச்சலுக்குமுள்ள கேந்திர முக்கியத்துவமான பாத்திரத்தை உயர்த்திப் பிடிக்கிற அதேவேளை, பாஜக-தேஜகூ அல்லாத வாக்குகள் பிரிவதைத் தவிர்க்க, பரந்த பல்வகை எதிர்க்கட்சிகளின், ஆனமட்டும் பரந்த சக்திமிக்க ஒற்றுமையை கட்டமைப்பது என்பதும் முக்கியமானதாகும். மோடி அரசாங்கத்துக்கு எதிராக சக்திவாய்ந்த எதிரணியை கட்ட வேண்டும் என்ற உணர்வின் அடிப்படையிலேயே இக(மாலெ)யும் இதர இடதுசாரிகளும் யஷ்வந்த் சின்ஹாவை பொது வான எதிர்க்கட்சி வேட்பாளராக தேர்வு செய்ததற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றன. குடியரசுத் தலைவர் தேர்தலை இரண்டு தனிப்பெரும் ஆளுமைகளை அடிப்படையாகக் கொண்ட போட்டியாக பார்க்கவே கூடாது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் போலவே இதுவும் பாசிச முகாமுக்கு எதிரான அரசியல்,
கருத்தியல் போட்டியாகவே பார்க்கப்பட வேண்டும். பாஜகவின் புல்டோசர் ஆட்சி, வெட்கக்கேடான பெரும் தொழில் குழுமக் கொள்ளை ஆகியவற்றை எதிர்கொள்ள ஒன்று பட்ட எதிரணியை அமைக்க வேண்டிய நிர்ப் பந்தம் இன்றைய சூழலில் உள்ளது போல் என்றும் இருந்ததில்லை. ஒன்றுபட்ட எதிரணியின் நடவடிக்கையை ஆதரிக்கிற அதே வேளை, இகக (மாலெ) பொதுவான ஜனநாயக நிகழ்ச்சி நிரல் மீது நீடித்த அரசியல் இயக்கத்தை மேற் கொள்ளும் வகையில் எதிர்க்கட்சி ஒற்றுமையை திசைவழிப்படுத்த தொடர்ந்து முயற்சி செய்யும்.
வருகின்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் கூட்டான எதிர்க்கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய பரப்புரை செய்யுமாறு ஒட்டுமொத்த கட்சிக்கும், அதுபோல் நம் நலம் விரும்பிகளுக்கும் நாம் வேண்டுகோள் விடுக்கிறோம். மோடி அரசாங்கம், சங்பரிவாரங்களின் இடைவிடாத தாக்குதலிலிருந்து அரசியலமைப்புச் சட்டத்தையும், நமது குடியரசின் கூட்டாட்சி, ஜனநாயக, மதச்சார்பற்ற கட்டமைப்பையும் பாதுகாக்க இன்றைய சூழலில், ஆபத்தின் ஆழத்தை புரிந்து கொண்டு ஒன்றுபடுமாறு பாஜக அல்லாத கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுக் கிறோம். குடியரசுத் தலைவர் தேர்தலில் அவரவர்கள் தங்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கும்படி கோருமாறு நாட்டுமக்களுக்கும் மக்கள் இயக்கங்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம்.