பயிற்சி முகாமில் இகக(மாலெ) மத்தியக்குழு உறுப்பினர் தோழர் பாலசுந்தரம் முன் வைத்த அறிக்கை

தமிழக அரசியலில் முன்முயற்சிமிக்க பாசிச எதிர்ப்பு அரசியல் சக்தியாக அறுதியிட உறுதிஏற்போம்!

பாசிசத்தை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்துவதும் தோற்கடிப்பதும் இந்திய அரசிய லின் மய்யமான முதன்மைக் கடமையாகும். சமீபத்திய நான்கு மாநில வெற்றிக்குப் பிறகு, சங்பரிவாரங்கள் இன்னும் துடுக்கான தாக்குதலில் இறங்கியுள்ளன. குலைநடுங்கவைக்கும் பாசிச வன்முறையில் இறங்கியிருப்பதை ராம்நவமி, அனுமன் ஜெயந்தியை சாக்காகக் கொண்டு அரங்கேற்றியிருப்பதைக் கண்டோம். இவை யெல்லாம் தொலைதூரங்களில் நடப்ப தாகவும், நீண்ட நெடிய முற்போக்கு, ஜனநாயக மரபு கொண்ட தமிழ்நாட்டில் சங்பரிவாரங்களின் முயற்சிகள் பலிக்காது, வாலை ஒட்ட நறுக்கி
விடுவோம் என்ற பேச்சுகள் வெறும் பேச்சுகளாகவே இருந்துவிடக் கூடாது. சங்பரிவா  ரங்களை தமிழ்நாட்டில் காலூன்றமுடியாத ஒரு அரசியல் களத்தை உருவாக்குவதுதான் மிகவும் அவசரத் தேவையாகும்.

கர்நாடகத்தில் ஹிஜாப் அரசியலைப் பார்த்தோம். இப்போது கல்விநிலையங்களில் வெளிப்படையான ஆயுதப்பயிற்சி மேற்கொள் வதைப் பார்க்கிறோம். புதுச்சேரிக்கு வந்து செல்லும் அமித்ஷா, தமிழ்நாட்டு விவகாரங்களை கவனிப்பதையும் பார்க்கிறோம். கேரளத்தில் காங்கிரசின் சரிவைக்கைப்பற்ற சங்க்பரிவாரம் காத்துக் கிடக்கிறது. எனவே,
தமிழ்நாடு தனித்தீவாக இருந்து விடமுடியாது. தமிழ்நாடு நீண்டதொரு நவதாராளவாத எதிர்ப்பு, அதிகாரக் குவிப்பு கொண்ட ஒன்றிய அரசு எதிர்ப்பு, ஜனநாயக விழுமிய அரசியல் மரபுடையது. சமீபகாலங்களில் அது தெளிவான கார்ப்பரேட் எதிர்ப்பு, மதவெறி எதிர்ப்பு ஜனநாயக அரசியலாக வடிவெடுத்துள்ளதையும் பார்க்க முடிகிறது. ஓராண்டுக்கு முன் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை தெளிவான கார்ப்பரேட், மதவெறி எதிர்ப்பு அரசியல் தீர்ப்பாகவே பார்க்கிறோம். திமுக இந்த அரசியல் களத்தாலேயே பலன் பெற்றது, ஆட்சிக்கு வந்தது என்பதும் உண்மை.

  ஆட்சிக்கு வந்து ஓராண்டைத் தாண்டியுள்ள திமுக ஆட்சி தன்னை சமூகநீதி ஆட்சி என்றும் சமத்துவ ஆட்சி என்றும் திராவிட மாதிரி (சமூக, அரசியல் கொள்கை கொண்ட) ஆட்சி என்றும் அறிவித்துக் கொண்டு முன்செல்கிறது. இதைக் குலைக்கும் வண்ணம் சங்க்பரிவார் கும்பல், பலவிதமான அராஜகமான முயற்சிகளை எடுத்து வருவது அனைவரும் அறிந்ததே. மாணவி லாவண்யா தற்கொலையை வைத்து மதமாற்ற குற்றச்சாட்டை எழுப்பியது, அயோத்தியா மண்டப பிரச்சனையை வைத்து இந்து நம்பிக்கைகளுக்கு எதிரான அரசியல் எனக்காட்ட முயல்கிறது, நீட், க்யூட் எதிர்ப்பு உள்ளிட்ட தேசிய புதியக் கல்விக் கொள்கைக்கான எதிர்ப்பை "மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுகிற அரசியல்" (வானதிசீனிவாசன், தினமணியில்) என குற்றம் சாட்டுவது, மாநில உரிமைகள் கொண்ட கூட்டாட்சிக்கான கோரிக்கைகளை கண்மூடித்தனமான "ஒன்றிய அரசு எதிர்ப்பு" என
முன்னிறுத்துவது, மிக அழுத்தமான மோடி எதிர்ப்பு உணர்வை பிளவுபடுத்தும் நோக்கத்துடன் இளையராஜா, பாக்கியராஜ் போன்ற சினிமா ஆளுமைகளை பேசவைப்பது உள்ளிட்ட பல வழிகளில் "திராவிட அரசியலுக்கெதிரான தேசிய அரசியல்" என்பதாக அன்றாட அரசியல் விவாதத்தை கொண்டுவர முயல்வது ஆகியவற்றை பாஜக உள்ளிட்ட சங்க்பரிவாரங்கள் கையிலெடுத்துள்ளன.

     ஆளுநர் அலுவலகத்தை, இங்குள்ள ஆட்சிக்கு முட்டுக்கட்டை போடும் அமைப்பாக நிறுத்துவதுமட்டுமின்றி (துணை வேந்தர்கள் மாநாடு, புதிய கல்விக்கொள்கையை முன்னெடுக்கும் முயற்சி, தரும்புரி ஆதின விஜயம்) இந்து கலாச்சார மறுமலர்ச்சி நடவடிக்கையை முன்னெடுக்கும் ஒரு அமைப்பாகவும் நடத்துவது, ஆளுநர் அரசமைப்பு சாசனத்துக் குட்பட்டவர் என்பதற்கு மாறாக அரசமைப்பு சாசனத்தின்படியே மேலான உரிமை பெற்றவராக காட்ட முற்படுவது ஆகியனவற்றை குறிப்பிட்டுக் கூறலாம். ஆளுநர் அலுவலகம் மட்டுமின்றி, ஊடகங்கள், நீதித்துறை (லாவண்ய வழக்கு தீர்ப்பு) அதிகாரவர்க்கம் (தலைமைச்செயலாளர் இறையன்பு அண்ணன் ஒரு முக்கியமான குழுவில் உறுப்பினராகியிருப்பது) கவனமாக தனது வலைப்பின்னலை உருவாக்கியிருப்ப தையும் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது. இவற்றை அனைத்தையும் கொண்டு, அன்றாட அடிப்படையில் பாஜகவும் அதன் தலைவர் அண்ணாமலையும் அரசியல் செய்வதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். நான்கு உறுப்பினர்களைக் கொண்டு சட்டப் பேரவையில் பெரிய எதிர்ப்பைக் காட்ட முடியாது போனாலும் சட்டப்பேரவைக்கு வெளியில் திமுகவுக்கு எதிரான அன்றாட அடிப்படையிலான செயலூக்கமான “எதிர்க்கட்சி' என்ற தோற்றத்தை நிலைநிறுத்த பாடுபட்டு வருகிறது. இது தொடர்பில், அதிகாரபூர்வ எதிர்க்கட்சியான அதிமுகவையும் விஞ்சி செயல்படுகிறது. அதுமட்டுமின்றி, திமுகவின் அதிருப்தியாளர்கள், பெரும்புள்ளிகளின் வாரிசுகளை வளைத்துப் போடுவதன் மூலம் பாஜகவை நோக்கிய அணிச்சேர்க்கை ஏற்பட்டு வருவதாக காட்ட முற்படுகிறது. அதுமட்டு மின்றி திமுகவின் அரசியல் கூட்டாளிகளை அதிலும் குறிப்பாக, கூர்மையான பாஜக எதிர்ப்பு அரசியலைக் கொண்டிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை குறிவைத்து வம்புக்கு இழுப்பது என்ற அணுகுமுறையையும் கொண்டிருக்கிறது. இதை விசிக எதிர்ப்பாக மட்டும் கொள்ளமுடியாது பாஜகவின் தலித் எதிர்ப் பாகவே காண வேண்டும். (இது தொடர்பில், குஜராத் சட்டப் பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கைது, வழக்கு, சிறை வைப்பையும் கவனத்தில் கொள்வது அவசியம்). இந்த ஒட்டுமொத்த சித்திரமும் காட்டுவது, 50 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் மேலாண்மை செலுத்தும் திராவிட அரசியலுக்கு வீரியமான ஒரு மாற்று அரசியல் சக்தி என்ற தோற்றத்தை அழுத்தமாக பதியவைக்க முயலுகிறது. இந்த அரசியலை செயல்படுத்த, திராவிட அரசியலின் ஒரு பிரதிநிதியை (அதிமுக) வலுவிழக்கச் செய்வது இன்னொரு பிரதிநிதியை வீழ்த்துவது எனும் உத்தியாகும். மொத்தத்தில் திராவிட அரசியலின் இடத்தில் கார்ப்பரேட்மதவெறி (பாசிச) அரசியலை (2024 மக்களவை தேர்தல்) தமிழ்நாட்டிலும் முன்னரங்குக்கு கொண்டு வருவதற்கான முயற்சியாகும்.

     பாஜகவின் இந்த முயற்சிகளை முறியடிக்க

       திமுகமுயற்சி மேற்கொள்கிறதா?

        சமூகநீதி அரசு, சமத்துவ அரசு, திராவிட மாதிரி அரசு என்று ஸ்டாலின், திமுக அரசை அடையாளப்படுத்திக்கொள்கிறார். அவர் இவ்வாறு அடையாளப்படுத்துவதை சில வரம்புக்குட்பட்டு, பாஜக எதிர்ப்பு, ஒன்றிய அரசு எதிர்ப்பு என்று கொள்ளலாம். இட ஒதுக்கீடு, பெண்ணுரிமை, தலித் மேம்பாடு, சிறுபான்மையர் பாதுகாப்பு, மாநில சுயாட்சி, கூட்டாட்சி அமைப்பு முறை ஆகிய கூறுகளைக் கொண்ட திராவிட மரபாக கொள்ளமுடியும். தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, விளிம்புநிலை மக்கள், பெண்கள் உள்ளிட்டவர்களை கல்வி, மருத்துவம் அடிப்படையில் மேம்படுத்தியுள்ளதாகக் கூறி அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாதிரி வளர்ச்சி என்று கல்வியாளர்கள் சிலர் கடந்தகால வளர்ச்சிகளைப் பற்றி கூறுகின்றனர். இந்த "திராவிட மாதிரி" எனும் சொல்லாடலை முதலமைச்சர் ஸ்டாலின் இறுகப் பற்றிக் கொண்டுவிட்டார். இந்த திராவிட மாதிரி பரப்புரையில் அஇஅதிமுக வை எவரும் கொண்டுவருவதில்லை. இது குறிப்பிடத்தக்க தொரு முரண்பாடாகும். அஇஅதிமுக, திராவிட விழுமியங்களில் இருந்து வெகுதூரம் வெளியே வந்துவிட்டது உண்மை. ஆனாலும், சத்துணவு, பரம்பரை மணியக்காரர், கர்ணம் பதவி ஒழிப்பு, 69 விழுக்காடு இடஒதுக்கீடு, இருமொழிக்
கொள்கை, மோடி அரசின் பல திட்டங்களுக்கு எதிர்ப்பு (ஜெ இருந்தவரை), ஆகியவற்றின் மூலம் திராவிட அரசியலின் வண்ணங்களைக் காணலாம். நலத்திட்ட வளர்ச்சி, திராவிட மாதிரியில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தமிழ்நாடு ஒரு முன்மாதிரி என ஆய்வாளர்கள் பலரும் கூறுகின்றனர். இது 'போட்டி நலத்திட்ட அரசியல்' என்றாலும் இந்த திராவிட மாதிரி வளர்ச்சியில் அதிமுகவுக்கும் முக்கிய பங்குண்டு. எனவே, திராவிட மாதிரி வளர்ச்சியை திமுக மாதிரி வளர்ச்சியாக சுருக்கிவிடுகிற அணுகுமுறை சொல்லியே ஆக வேண்டும். என்பதை இவ்விரு அமைப்புகளுக்குமுள்ள மற்றுமொரு முக்கிய ஒற்றுமை நவதாரளவாத அல்லது கார்ப்பரேட் ஆதரவு. 1991ல் நவதாராளவாத கொள்கைகள் செயல்படுத்தப் பட்டதிலிருந்தே தமிழக மக்கள் கடுமையான நவதாராளவாத எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர். பெரும்பாலான மக்கள் கொண்டிருந்த பாஜகவின் இந்த முயற்சிகளை முறியடிக்க அழுத்தமான நவதாராளவாத எதிர்ப்பை, நலத்திட்ட அரசியல்மூலம் அமைதிப்படுத்த முயன்றன இரண்டு கழகங்களுமே. ஸ்டாலின் இப்போது அடிக்கடி "அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி", "அனைவருக்குமான வளர்ச்சி" என்று பேசி வருகிறார். இந்த சொல்லாடல், நவதாராளவாத காலத்தில் எழுந்த சொல்லாடல். ஆக, நமது முதலமைச்சர் ஸ்டாலின், விஜயபாஸ்கர், கலையரசனிடமிருந்து திராவிட மாதிரியையும் நவதாராளவாத அகராதியிலிருந்து அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதையும் எடுத்துக்கொண்டு இரண்டையும் இணைக்க முற்படுகிறார். பொருளாதாரத்தால் பிளவுறுத்தப்பட்டதை அரசியலால் இணைக்கப் பார்க்கிறார். இவர் எந்தளவு வெற்றி பெறுகிறா ரென்று பார்ப்போம்! தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக (ரூ 75 லட்சம் கோடி) உருவாக்கும் முதலமைச்சரது முயற்சிகள், கார்ப்பரேட் பாதை கண்சிமிட்டுவதாகவே புரிந்துகொள்ளலாம். பல விதங்களில் மோடி ஆட்சியின் பல கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக அரசு, கல்வி மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென்று சரியாகவே கோரும் முதலமைச்சர், மோடி ஆட்சி கார்ப்பரேட்டுகளுக்காக கொண்டு வந்துள்ள 4 சட்டத் தொகுப்புகளுக்கு விதிமுறைகளை உருவாக்கி யிருக்கிறார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றியது போல் தொழிலாளர் சட்டதொகுப்புகளுக்கு எதிராகவும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்ற தொழிலாளர் வர்க்க குரலையும் மீறி விதிமுறைகளை உருவாக்கி யிருப்பது கார்ப்பரேட் முன்னுரிமையைக் காட்டுகிறது. எட்டுவழிச் சாலையை வேறு வகையில் கொண்டுவரப்பார்க்கும் முயற்சியும் இதை வலுப்படுத்துவதாகவே இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பில் போராடும் மக்கள்பக்கம் நிற்காமலிருப்பதும் இதை மேலும் வலுப்படுத்துகிறது. பரந்த தொழிலாளர் வர்க்கத்தின், உழைக்கும் மக்களின் நலனை பறிக்கும் கார்ப்பரேட் பாதை எந்த உருவில் வந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் கார்ப்பரேட் எதிர்ப்பு பாதையின் தொடர்ச்சியாக, நமது வலுவான எதிர்ப்பும் தொடரும். அண்மையில், இந்து ஆங்கில நாளேடு, ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராக திமுக முன்னிறுத்தக் கூடும் என்று எழுதியுள்ளது. இது கார்ப்பரேட் உலகத்துக்கு சொல்லப்படும் செய்தியாகக் கூட இருக்கக்கூடும்.
      எப்படியானபோதும் மய்ய அதிகாரத்தில் 8 ஆண்டுகளாக இருக்கும் பாசிஸ்ட் மோடியை, அவரது கட்சியை அதிகாரத்திலிருந்து இறக்குவது தேசத்தின் முன்னால் உள்ள மிகப்பெரும் உடனடி அரசியல் கடமையாக இருக்கிறது. பெரிதும் மாநிலக் கட்சிகளால் நிரம்பியிருக்கும் அரசியல் களம் தேசிய அரசியலில் (2024 மக்களவை தேர்தல்) ஒரு மிக முக்கியமான பங்குவகிக்கும். அந்தவகையில் திமுக தொடங்கியுள்ள "சமூகநீதிக் கூட்டமைப்பு" எனும் முன்னெடுப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கேரளாவில், இக்க(மா) அகில இந்திய மாநாட்டில் பேசும் போது, "என்ட பேரு ஸ்டாலின்" என்று கூறி கம்யூனிஸ்ட்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். (கம்யூனிஸ்ட்களும் தங்கள் ஆதரவை சமூகநீதிக் கூட்டமைப்புக்கு வழங்கியுள்ளனர்). தீவிரமான, இடைவிடாத உறுதியான பாசிச எதிர்ப்பு சக்தியான இகக (மாலெ)வையும் திமுக அழைத்திருக்க வேண்டும். மதச்சார்பின்மை, கூட்டாட்சி, ஜனநாயகம் பற்றி திமுக பேசினாலும் 'சமூகநீதிக் கூட்டமைப்பு' என பெயரிட்டிருப்பதன் மூலம் குறிப்பான செய்தி ஒன்றை காட்டுவதாவே உள்ளது. மாநிலக் கட்சிகள் அனைத்துமே பிற்பட்ட சமூகங்களின் 'சமூகநீதி' அடையாளமாக விளங்குவதும் "இந்துத்துவ அணிதிரட்டலுக்கு” எதிராக “சமூகநீதி அணிதிரட்டல்" விளங்கும் என்பதாகக் கூட இருக்கலாம்.
      ஆளுநருக்கு தமது அழுத்தமான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது திமுக அரசு. நீட்தேர்வுக்கு விலக்கு வேண்டும், பல்கலைக் கழக துணை வேந்தர்களை மாநில அரசுதான் நியமிக்கும் என்ற புதிய சட்டம், எழுவர் விடுதலையில் ஆளுநரது அணுகுமுறை குறித்து உச்சநீதி மன்றத்தில் வாதிட்டது ஆகியவற்றை சுட்டிக்காட்டலாம். ஆனாலும், பாஜகவின் நிலைப்பாடுகளை, திமுக அரசாங்கம் நோக்கிய பாஜகவின் எதிர்ப்பை எதிர்கொள்ள, கூட்டணி கட்சிகளின் விமர்ச னங்களே போதுமென்ற அணுகுமுறை திமுக விடம் காணப்படுகிறது. லாவண்யா தற்கொலை வழக்கில், மத்திய புலனாய்வு விசாரணைக்கு தடைகோரியதே தவிர, அந்தப் பிரச்சனையில் சங்க்பரிவார் கும்பலது கூச்சலுக்கு காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு பதிலளித்ததே ஒழிய, நேரடியாக அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வில்லை. இளையராஜா சச்சரவில் அவர், அம்பேத்கரோடு கூட. மோடியை ஒப்பிட்டு பேசியது தவறு என்று திமுக கூறியிருக்க வேண்டும். ஆனால் அமைதிகாத்தது ! மனிதர்களால் தூக்கிச் செல்லப்படும் தருமபுரம் ஆதினத்தின் பல்லக்கு பட்டின பிரவேசத்தை கோட்டாட்சியர் தடை செய்தபோது, இதை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்தார். கடவுள் பெயரால் மனிதனை மனிதன் சுமக்கும் நடைமுறை முற்போக்கு மானுட மாண்புகளுக்கு புறம்பானது, கை ரிக்ஷாக்களை ஒழித்த மரபுகளுக்கு எதிரானது என்று திமுக பேசியிருக்க வேண்டும். அனைத்துசாதியினரையும் அர்ச்சகராக்கும் பாராட்டத்தக்க முயற்சியை மேற்கொண்ட திமுக அரசு, ஆதினங்களின் அழுத்தங்களுக்கு பணிந்திருப்பது 'ஆன்மீக அரசு' என்ற பட்டத்துக்கு பொருத்தமாக இருக்கலாம். ஆனால் சமூகநீதி அரசு, சமத்துவ அரசு என்ற அடை மொழிகளுக்கு எப்படி பொருத்தமுடையது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. திமுக, கடவுளுக்கு கோவில்களுக்கு இந்துக்களுக்கு எதிரானது என்ற பாஜகவின் இந்துத்துவ வியூகப் பிரச்சாரத்தை எதிர்கொள்ள கோவில்கள் சொத்துக்களை மீட்பது, கும்பாபிஷங்களை நடத்துவதென மும்முரமாக செய்து வருகிது. ரூ.2500 கோடிக்கு மேற்பட்ட கோவில் சொத்துகளை மீட்டிருப்பதாக சாதனை சரித்திரம் பேசுகிறது திமுக அரசு. ஆனால் கோவில், மடம் நிலங்களில் குடியிருக்கும் இடத்தை அந்த ஏழைகளுக்கே வழங்க வேண்டும் என இடதுசாரி கட்சிகள் வலியுறுத்திய போதும் உழுபவர்களுக்கே குத்தகை பதிவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை காதில் போட்டுக்கொள்ளாமல் கோவில், மடங்களின் நிலப்பிரபுத்துவத்தை வலுப்படுத்தவே அரசு கவனம் செலுத்தி வருகிறது.
            இதுபோல இன்னும் பல உதாரணங்களைச் சொல்லமுடியும். தேர்தல் முடிந்த கொஞ்ச காலத்திலேயே, பொதுப்பாதையில் பிணம் தூக்கிச்சென்ற திருவண்ணாமலை தலித்துகள் ஆதிக்க சக்திகளால் கொடூரமாக தாக்கப்பட்டனர். திமுகவுக்கு வாக்களித்த தலித்துகளுக்கு எதிராக, தாக்கியவர்களுக்கு ஆதரவாக பகுதி அமைச்சர் செயல்பட்டிருக்கிறார். மிகச்சமீபத்திய நிகழ்வு: சென்னையில் விக்னேஷ் என்ற தலித் இளைஞர் ஒருவர் போலீஸ் நிலையத்திலேயே அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். அடுத்த சில நாட்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில், மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த தங்கமணி காவல்நிலைய சித்ரவதையால் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த இரண்டு நிகழ்வுகளிலும் கொலையுண்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்று முதலமைச்சர் சொல்லவில்லை. அந்ததிசையில் எந்த நடவடிக்கையும் முதல்வர் எடுக்கவில்லை. மாறாக, தேனி சென்ற முதலமைச்சர் காவலர் குடியிருப்புக்குச் சென்று நலம் விசாரித்திருக்கிறார்! கைது செய்பவர்களை இரவு நேரங்களில் காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்க கூடாது என்ற காவல் தலைவரின் ஒரு சுற்றறிக்கையுடன் இதை கடந்து சென்றுவிட தூத்துக்குடியிலிருந்தும், சென்னையிலிருந்தும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கருத்துரிமை பறிப்பு, மனித உரிமை மீறல் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. சமூகநீதி, சமத்துவ நீதிக்கு புறம்பான இந்த செய்திகள் இருக்கும்வரை பாஜக எதிர்ப்பு போராட்டம் வலுவிழந்தே போகும். சமூகநீதி, சமத்துவத்தில் எந்தளவுக்கு ஆழமாகச் செல்ல வேண்டுமோ அந்த அளவு ஆழமாகச் செல்வதுதான் பாஜகவின் சங்க் பரிவார் கூட்டங்களை களத்தில் நேரடியாகச் சந்திப்பதற்கான மக்கள் சக்தியை பெற்றுத்தரும்.

பாசிச எதிர்ப்பில் முன்னிலை சக்தியாக
இகக(மாலெ)
     பாஜக, தமிழ்நாட்டின் திராவிட இயக்க, இடது, முற்போக்கு மரபுகளை ஒழித்துக் கட்டி இந்துராஜ்ய அரசியலைக் கொண்டுவர நினைக் கிறதென்றால் இன்னும் அழுத்தமாக, இன்னும் ஆழமாக சாதி ஒழிப்பு (அம்பேத்கர்), பெண் விடுதலை (பெரியார்), சமத்துவ சமூக, அரசியல் கொள்கைகள் இன்னும் விரிவாக எடுத்துச் செல்லப்பட வேண்டும். இகக (மாலெ), தமிழ்நாட்டின் கார்ப்பரேட் மதவெறி எதிர்ப்பு விழுமியங்களில் ஊன்றி நின்று அதை பாசிஸ்ட் ஆட்சி அதிகாரத்துக்கெதிரான மக்கள் எதிர்ப்பாக வளர்க்க பாடுபடும். இந்த நோக்கத்திற்காக, பரந்துபட்ட தொழிலாளர் வர்க்கம், கிராமப்புர, நகர்ப்புர உழைக்கும் வர்க்கம், புதியதலைமுறை இளைஞர், மாணவர், பெண்கள் ஆகியோரை அவர்களது பரந்து விரிந்த சமூக, அரசியல் கோரிக்கைகளில் அணிதிரட்டும். தமிழ்நாட்டின் முற்போக்கு பாரம்பரியங்களை எதிர்கால நோக்குடன் முன்னெடுத்துச் செல்லும் முன்னணி ஊடகமாக எடுத்துச் செல்லும். இகக (மாலெ)வை கிராமப்புர, நகர்ப்புர வேர்க்கால் பகுதிகளில் முன்முயற்சியுள்ள பாசிச எதிர்ப்பு சக்தியாக அறுதியிடச் செய்யும். பாசிச எதிர்ப்பை விரிவுபடுத்தும் நோக்குடன், பாசிச எதிர்ப்பு கொண்ட சமூக, அரசியல் சக்திகள், ஆளுமைகள், மேடைகளுடன் ஆனமட்டும் ஒத்துழைக்கும். ஆட்சியிலிருக்கும் முடியாது. திமுக போன்ற கட்சிகளை, அவற்றின் தவறுகளை விமர்சித்து, எதிர்த்துப் போராடும். அதே நேரம், சமூகநீதி, சமத்துவம் எனும் வரலாற்று மரபுகளை மோடி ஆட்சிக் கெதிரான பரந்துபட்ட மக்கள் எதிர்ப்பைக் கட்டமைக்கு மாறு அழுத்தம் தரும், ஒத்துழைப்பும் நல்கும். பாஜக எதிர்ப்பை முன்னிறுத்தி இடது, ஜனநாயக சக்திகளுடன் விரிந்த ஒத்துழைப்பை முன்னெடுக்கும். பரந்து விரிந்த அளவில் மக்களை அணிதிரட்டும் போராட்டத்தில்
முன்கை எடுக்கும்.