கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி கும்பல்களுடன் கைகோர்க்கும் காவியும் காக்கியும்
   இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்)-ன் நெல்லை மாநகரச் செயலாளரும் புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாநிலத் துணைத் தலைவருமான தோழர் சுந்தர்ராஜ் ஜனநாயக சலவைத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகியாகவும் உள்ளார். நெல்லை நகரம், பாட்டப்பத்து மற்றும் பழைய பேட்டை பகுதிகளில் சுமார் 180 சலவைத் தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன. 15 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மக்களை அடக்கி ஒடுக்கி, சில மக்கள் விரோதிகளை, சுயநலமிகளை கைக்குள் போட்டுக் கொண்டு கந்துவட்டிக்கு கொடுத்து கட்டப் பஞ்சாயத்து செய்து வந்த ஆதிக்க சக்திகளை இகக(மாலெ) தலைமையில் எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றனர். இதன் மூலம் பாட்டப்பத்து பகுதியில் அந்த ஆதிக்க சக்திகளும் காவிக்கூட்டங்களும் தலையெடுக்க விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். இஸ்லாமியர் பெருவாரியாக வாழும் அந்த பகுதியில் இந்து முன்னணியினர் திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்திட விநாயகர் சதுர்த்தியின் போது பிள்ளையாரை பள்ளிவாசல் அருகில் வைக்க முயன்றபோதெல்லாம் இகக(மாலெ) இந்து முன்னணியின் முயற்சியை முறியடித்து வந்தது. இந்தப் பின்னணியில்தான் இந்துமுன்னணி-பாஜகவின் தூண்டுதலில் தோழர் மாரியப்பன் படுகொலை நடைபெற்றது. அந்த படுகொலைக்குப் பின்னர் சிறிது அச்சத்தில் இருந்த சலவைத் தொழிலாளர் மத்தியில் பிழைப்புவாதிகள் தலையெடுத்து சூழலை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். ஊர்க் கமிட்டி பொறுப்புகளில் அவர்கள் இருந்து கொண்டு ஊர் சீட்டுப் பணத்தை கையாடல் செய்து கந்துவட்டிக்குக் கொடுப்பதும் கணக்கு கேட்டால் கேட்பரையே ஊர் மத்தியில் அசிங்கப்படுத்தி கோவில் முன்பு என்ற பெயரில் அனைவர் காலிலும் விழுந்து மன்னிப்புக் கோரச் செய்யும் அராஜக கட்டப்பஞ்சாயத்தை செய்து
செயலாளர் தோழர் பேச்சிராஜா ஆகியோர் ஊர் கமிட்டி பொறுப்பில் உள்ளவர்கள் செய்யும் முறைகேடுகளை, பணக் கையாடல்களை தட்டிக் கேட்டனர். இதனால் அவர்கள் மீது காழ்புணர்ச்சி கொண்ட ஊர் கமிட்டியின் தற்போதைய பொறுப்பாளர்கள் கு.சுடலை, ப.ராஜ், உ.சண்முகராஜ், ம.ராமசாமி மற்றும் முன்னாள் பொறுப்பாளர்கள் ந.முத்துக்குமார், மா.கணே சன், சு.குப்புசாமி ஆகியோர் இகக(மாலெ) கட்சியின் கிளைச்செயலாளர் பேச்சிராஜா, தங்களை மதிக்கவில்லை என்று கூறி பேச்சி ராஜாவை ஊர் மத்தியில் எல்லார் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்கச் சொல்லியுள்ளார்கள். அதற்கு பேச்சிராஜா மறுத்ததால் அவர் குடும்பத்தாரை ஊர் விலக்கம் செய்திருப்பதாக அறிவித்து, 13.5.2022 அன்று நடைபெற்ற அவரின் திருமணத்திற்கு யாரும் போகக்கூடாது என்று அறிவித்தார்கள். அவர்களின் முடிவுக்கு மாறாக பேச்சிராஜா திருமணத்திற்குச் சென்றவர்கள் மற்றும் அவரது குடும்பத்திற்கு தங்கள் வீட்டு விசேசத்திற்கு அழைப்பு விடுத்தவர்களையும் ஊர் விலக்கம் செய்திருப்பதாக அறிவித்தார்கள். அந்தத் திருமணத் திற்குப்போன பெண்களை அவதூறாக, அசிங்கமாகப் பேசியுள்ளார்கள். இந்த சட்ட விரோத, ஜனநாயக விரோத கட்டப்பஞ்சாயத்தை காலில் விழும் கலாச்சாரத்தை தடுத்து நிறுத்திடக் கோரி கிளைச் செயலாளர் பேச்சிராஜாவும் மாநகரச் செயலாளர் சுந்தர் ராஜூம் கடந்த 1.6.2022 அன்று திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களைச் சந்தித்து மனு கொடுத்தனர். அவரின் அறிவுறுத் தலின் பேரில் நெல்லை மாநகர காவல் ஆணையாளரைச் சந்தித்தும் மனு கொடுத்தார்கள். அந்த மனுவில் அறிவேன் சாட்சியாக 6 பேர் கையொப்பம் செய்திருந்தார்கள். அந்த மனு மீதான விசாரணைக்கு திருநெல்வேலி நகர காவல் உதவி ஆணையாளர் திரு.விஜயகுமார் அவர்கள் 9.6.2022 மாலை 6.30 மணிக்கு வரச் சொல்லி இருவரும் சென்றிருந்தார்கள். இரவு 7 மணி சுமாருக்கு நெல்லை நகர காவல் உதவி ஆணையாளர் அலுவக அறைக்குள் வைத்து விசாரணை நடைபெற்றது. புகார்தாரர்கள் தரப்பில் தோழர் சுந்தர்ராஜ், தோழர் பேச்சிராஜா, அவரது அப்பா, அம்மாவை மட்டும் அனுமதித்தார்கள்.
புகார் மனுவில் ஏற்கனவே அறிவேன் சாட்சி கையொப்பம் போட்டிருந்த எவரையும் அனுமதிக்க மறுத்துவிட்டார். எதிரிகள் 7 பேர் ஆஜர் ஆனார்கள்.
  விசாரணை அதிகாரி காவல் உதவி ஆணையர் உயர்திரு. விஜயகுமார் எடுத்த உடனேயே பேச்சிராஜாவிடம் ஊர் கமிட்டி கட்டுப்பாடு என்றால் அதுதான் நாட்டு நடப்புதானே அதற்குக் கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும் என்றும் ஊர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விடு இனிமேல் அவர்கள் ஊர் விலக்கம் செய்ய மாட்டார்கள் என்று கூறியுள்ளார். அதற்கு மாநகரச் செயலாளர் சுந்தர்ராஜ் "தவறு செய்யாதவனை சட்டவிரோத கட்டப்பஞ்சாயத்து செய்து ஊர் காலில் விழச் சொல்கிறார்கள். ஊர் விலக்கம் செய்கிறார்கள், அதையே தாங்களும் சொன்னால் எப்படி' என்றதற்கு திரு. விஜயகுமார், "ஏலே நீ யார்ல, நீ கட்சில இருந்தா பெரிய இவனோ, வாயத் திறக்காதே சும்மா கிடல என்று அவமரியாதையாகப் பேசியதைத் தொடர்ந்து மரியாதை குறைவாகப் பேசாதீர்கள் என்று தோழர்கள் கூறியதற்கு திரு. விஜயகுமார் அவர்கள், "நீ பெரிய யோக்கியனோ" என்று சொல்லிவிட்டு எதிரிகளைப் பார்த்து (வந்திருந்த எதிரிகளில் இருவர் கந்துவட்டி கொடுப்பவர்கள், இன்னொருவர் பெண்களை அசிங்கமாகப் பேசியவர், அவரின் அப்பா ஊர் தலைவர் மற்றவர்கள் அவர்கள் செய்யும் பித்தலாட்டத்திற்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள்) இவனுங்க மீது நீங்கள் புகார் கொடுங்கள், எப்ஐஆர் போட்டு உள்ளே தள்ளுகிறேன். கட்சியில் இருந்தா என்ன கிழிச்சிடுவேன்னு பார்க்கிறேன் என்று அவமாரியாதையாக ஒருமையில் பேசியுள்ளார். அப்போது பேச்சிராஜாவின் அம்மா எழுந்து வெளியூர் சொந்தக்காரர்களையும் எங்களுக்கு பத்திரிகை வைக்க கூடாது என்கிறார்கள் என்றதற்கு, யாப்பா நீங்க எல்லாரையும் சொல்லக்கூடாது கட்டுன பொண்டாட்டி கூட படுக்கனும்னாகூட அவ இஷ்டம் இல்லாம படுக்ககூடாது பொம்பள இருக்கா, இல்லையென்றால் வேறு மாதிரி பேசுவேன் என்று ஒரு மாதிரியாகப் பேசியுள்ளார் காவல் உதவி ஆணையர் திரு.விஜயகுமார். பின்னர் எதிரிகளிடம் நீங்க ஊர் கமிட்டி போடும் போது இவனுங்க வந்தா எனக்கு என் பெர்சனல் நம்பருக்கு போன் போடுங்க எந்த ராத்திரி யானாலும் போடுங்க. இவனுகளை உள்ள புடுச்சி தள்ளிவிடுகிறேன் என்று தோழர்களையும் கட்சியையும் அவமரியாதையாகவும் அவதூறாகவும் பேசியிருக்கிறார். மேற்படி உதவி காவல் ஆணையர் திரு. விஜயகுமார் எதிரி களுக்குச் சாதகமாக ஒருதலைப்பட்சமாக, ஊர் கமிட்டியின் சட்டவிரோத கட்டப் பஞ்சாயத்து காலில் விழும் பாசிச, நிலப்பிரபுத்துவ, பிற்போக்கு கலாச்சாரத்திற்கு ஆதரவாகவே விசாரணை நடத்தியிருக்கிறார். இந்த விசாரணை அதிகாரி திரு.விஜயகுமார் முறையாக விசாரணை நடத்தாமல் சட்டவிரோதிகளையும் ஊழல்வாதிகளையும் கட்டப்பஞ்சாயத்து, காலில் விழும் கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார். இந்த நிலையில் மறுநாள் காலை பாட்டப்பத்தில் ஒரு துணி மூட்டை எரிந்து போனது மற்றும் மோட்டார் காணாமல் போனது தொடர்பாக சுந்தர்ராஜ் மற்றும் பேச்சி ராஜா இருவரையும் விசாரணைக்கு வரவேண்டும் என்று டவுன் காவல் ஆய்வாளர் கூறியுள்ளார். இது திட்டமிட்டு சட்டவிரோத இந்துத்துவ பாசிச பிற்போக்காளர்களின் தூண்டுதலின் பேரில் தோழர்கள் மீது பொய் வழக்கு போடுவ தற்காகவே குறிப்பிட்டு இவர்களை மட்டும் விசாரணைக்கு அழைத்துள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து 10.6.2022 அன்று மாநகர காவல் உதவி ஆணையர் அவர்களிடமும் 13.6.2022 திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடமும் மேற்படி காவல் உதவி ஆணையர் விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கந்துவட்டி, கட்டப் பஞ்சாயத்து பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுத்து காலில் விழும் கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் அதற்காக வருவாய் துறை உயர் அதிகாரி மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மனு கொடுக்கப்பட்டது. இகக(மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்வில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் கணேசன் மற்றும் இகக(மா) மாவட்டச் செயலாளர் தோழர் க.ஸ்ரீராம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் முத்துவளவன், திராவிட தமிழர் கட்சியின் செயலாளர் திருக்குமரன், தமிழர் உரிமை மீட்புக்களத்தின் ஒருங்கிணைப்பாளர் கெ.லெனின், தமிழ்ப்புலிகள் மாவட்டச் செயலாளர் தமிழரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேற்படி மனு மீதான விசாரணையை சார் ஆட்சியர் விசாரிப்பார் என்று மாவட்ட வருவாய் அதிகாரி அவர்கள் கூறினார். இதற்குப் பின்னால், இந்த கட்டப் பஞ்சாயத்துப் பேர்வழிகளுக்குப் பின்னால் இந்து மதவெறி பாசிசவாதிகளின் தூண்டுதல் இருப்பது ஆரம்பத்தில் இருந்தே தெரிந்தது. இந்து முன்னணி கும்பல்களுக்கு பாட்டப்த்தில் வரவிருக்கிற விநாயகர் சதுர்த்தியின் போது பாட்டப்பத்தில் பிள்ளையார் வைத்துவிட வேண்டும் என்கிற நோக்கமும் அதற்கு இடையூறாக உள்ள எம்எல் கட்சியை குறிப்பாக தோழர் சுந்தர்ராஜை ஊர் மக்களிடத்தில் இருந்து அந்நியப்படுத்த வேண்டும் என்பதே பிரதான நோக்கம். அது மட்டுமின்றி கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வேட்பாளராக தோழர் சுந்தர்ராஜ் போட்டியிட்ட போது பாஜகவின் சார்பாக போட்டியிட்டு, தற்போது எம்எல்ஏ ஆக உள்ள நயினார் நாகேந்திரன் ஓட்டுக்கு பணம் கொடுத்ததை, அதுவும் இந்த எதிரிகள் சிலர் மூலமும் இந்துமுன்னணியினரும் அந்தப்பகுதிக்குள் பணம் கொடுத்ததை அம்பலப்படுத்தி தடுத்து நிறுத்தினார். அதுவும் பாஜக-இந்துமுன்னணி கோஷ்டியினருக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதனால், எதிர்பார்த்ததுபோலவே ஊழல் பேர்வழிகளை தங்கள் கைக்குள் எடுத்துக் கொண்டு, எம்எல் கட்சி இந்துக்கள் விரோதி என்றும் இவர்கள் சமுதாய மக்களுக்குள் பிளவு
ஏற்படுத்துகிறார்கள் என்று ஒரு மனுவை இந்து முன்னணியினர் தயார் செய்து வைத்துக் கொண்டு ஊர் மக்களை துணி மூட்டை எரிந்த பிரச்சனைக்காக மாவட்ட ஆட்சியரைச் சந்திக்கப் போகிறோம் என்று அழைத்துச் சென்று அங்கு வைத்து வந்திருந்தவர்கள் கையில் இந்து முன்னணி கொடியைக் கொடுத்துள்ளார்கள். இதனை முன்பே அறிந்திருந்த, இந்து முன்னணி கொடியை ஊருக்குள் கொண்டு வந்தவர்களிடம் எம்எல் கட்சி ஆதரவாளர்கள் சண்டை போட்டுள் ளார்கள். மேலும் பெண்கள் பலர், பெண்களை அவதூறாகப் பேசிய எதிரி குப்புசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர்க் கமிட்டியினரிடம் கூறியதற்கு, குப்புசாமியின் தந்தைதான் தலைவர் என்பதால், பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லியுள்ளார். குப்புசாமியோ, திரும்பவும் பேச்சிராஜாவின் கல்யாணத்திற்குச் சென்றவர்கள் எல்லாரும் மன்னிப்பு கேட்டால், நானும் பெண்களைப் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்பேன் என்று திமிறாகப் பேசியுள்ளார்.
இது எம்எல் கட்சிக்கும் பாஜக இந்து முன்னணிக்குமான அரசியல் யுத்தம். 20.6.2022 அன்று அனைத்து கட்சியினரையும் திரட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதில் இகக(மாலெ) மாநிலச் செயலாளர் என்.கே.நடராஜன் கலந்து கொள்கிறார். பாசிச இந்து மதவெறி சக்திகள் தங்கள் சனாதனக் கொள்கைகளைக் காப்பாற்ற சாதி அமைப்புகளைக் காப்பாற்ற சகல முயற்சி களையும் மேற்கொண்டு வருகிறது. அதற்கு காக்கிக்குள் காவியும் புகுந்து கொண்டுள்ளது. இதனை முறியடிப்பது இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்திகளின் கடமை. காலத்தின் கட்டாயம் ஆகும்.