அகில இந்திய மாணவர் கழகம் நடத்திய மாணவர் நாடாளுமன்றம்
 

  • தேசிய கல்விக் கொள்கை 2020ஐ ரத்து செய்!
  • நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை அனுமதியோம்!
  • கல்வியை காவிமயமாக்குவதையும் தனியார் மயமாக்குவதையும் தடுத்திடுவோம்!
  • சமூக நீதியின் மீதான, பொதுக் கல்வியின் மீதான தாக்குதல்களுக்கு முடிவு கட்டுவோம்!
  • மதவெறி வெறுப்பு அரசியலை நிராகரிப்போம்!
  • கட்டணமில்லா கல்விக்காகப் போராடுவோம்!

        உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 31.5.2022 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர் நாடாளுமன்றத்தை அகில இந்திய மாணவர் கழகம் நடத்தியது. இந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் இக்க(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர், அகில இந்திய மாணவர் கழகத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் பீகார் சட்டப் பேரவை உறுப்பினர் சந்தீப் சவுரவ், பேராசிரியர் பிரதீப் ஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். தமிழ்நாட்டில் இருந்து பல இளைஞர் கழக, மாணவர் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.